Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
Ceylinco Life இன் சிரேஷ்ட அதி­கா­ரிகள் ஒரே மாதத்தில் 4 சமூக பொறுப்­பு­ணர்வு திட்­டங்­களை மேற்­கொண்டு மகத்­தான மக்கள் சேவை
2016-10-17 16:14:22

Ceylinco Life இன் சிறிய சிரேஷ்ட நிறை­வேற்று அதி­கா­ரிகள் குழு­வொன்று, ஐந்து தலை­மைத்­துவ செயற்­பா­டு­களை பின்­பற்றி மற்றை­ய­வர்­களை ஊக்­கு­விப்­பதன் மூலம் சரி­வி­கித சம­னற்ற பாரிய பொறுப்­புக்­களை எவ்­வாறு பூர்த்தி செய்­யலாம் என்­பதை செயல்­
மு­றையில் விளக்­கி­யுள்­ளனர்.

 

 

கடு­மை­யான சிறு­நீ­ரக நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள (CKD) பின்­தங்­கிய சமு­தா­ய­மொன்றை காப்­பாற்­று­வ­தி­லி­ருந்து, கிரா­மிய பாட­சாலை ஒன்­றிற்கு நூலகம் ஒன்றை அமைத்துக் கொடுத்தல், பொது நிறு­வ­னங்­களில் மர நடு­கையை மேற்­கொள்­ளுதல், சேத­ம­டைந்த முன்­பள்ளி ஒன்றை புன­ர­மைத்து கொடுத்தல் போன்ற 24 பேரைக் கொண்ட ஒரு குழு­வினால் ஒரு மாதத்­திற்குள் மேற்­கொள்­ளப்­பட்ட பணிகள், சில நிறு­வ­னங்­களால் ஒரு வரு­டத்தில் அல்­லது அதற்கும் மேலான காலத்­தி­லேனும் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை.

 

தலை­மைத்­துவ பயிற்சித் திட்­ட­மொன்றின் ஒரு பகு­தி­யாக நான்கு சமூக பொறுப்­பு­ணர்வு திட்­டங்­களை உரு­வாக்கி அவற்றை நிறை­வேற்­று­வ­தாக தீர்­மானம் கொண்டு அதனை செயற்­ப­டுத்தும் நோக்­கத்தில் இயக்­கு­நர்கள், பிரதிப் பொது முகா­மை­யாளர், உதவிப் பொது முகா­மை­யாளர், சிரேஷ்ட முகா­மை­யாளர் மட்­டங்­களில் 24 சிரேஷ்ட நிறை­வேற்று அதி­கா­ரிகள் ஒவ்­வொ­ரு­வரும் ஆறு பேரைக் கொண்ட நான்கு குழுக்­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டனர்.

 

ஒரு மாதத்தின் பின்னர், ஒவ்­வொரு குழு­வி­னரும் தாங்கள் பொறுப்­பேற்றுக் கொண்ட திட்­டங்கள் பற்­றிய விளக்­கத்­தையும் அவற்றின் பெறு­பே­று­க­ளையும் முன்­வைக்­கு­மாறு கேட்­கப்­பட்­டனர்.

 

தங்கள் 6 உறுப்­பி­னர்­க­ளது பெயர்­களின் முத­லெ­ழுத்­துக்­களைக் கொண்டு தங்கள் குழுவின் பெயரை ‘MCTRUST’  என்று வைத்துக் கொண்ட குழு நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஒன்றை உரு­வாக்கி அதனை செயற்­ப­டுத்திக் காண்­பித்­தது.

 

 

அனு­ரா­த­புர மாவட்­டத்­தி­லுள்ள சிவ­லக்­குளம் எனப்­படும் CKD வயப்­பட்ட கிரா­மத்தில் 100 குடும்­பங்கள் பாவித்த நீரில் உள்ள அழுக்­கு­களை அகற்­று­வ­தற்கு OSMOSIS தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி இந்த சுத்­தி­க­ரிப்பு ஆலை உரு­வாக்­கப்­பட்­டது.

 

Transformers’ குழு­வினர் தலைமை அலு­வ­ல­கத்தில் பணி­யாற்றும் சகாக்­களை ஊக்­கு­வித்து அவர்கள் வச­முள்ள மேல­திக நூல்­க­ளையும் வாங்கி புதி­தாக கொள்­வ­னவு செய்த நூல்­க­ளுடன் சேர்த்து ஹட்­டனில் உள்ள பாட­சாலை ஒன்றில் புதி­தாக நூலகம் ஒன்­றையே ஆரம்­பித்து வைத்­துள்­ளனர்.

 

இந்தக் குழு­வினர் அப்­பா­ட­சா­லையில் நூல்­களை இர­வ­லாக கொடுக்கும் பிரிவு ஒன்றை ஆரம்­பித்து ஒவ்­வொரு நூலுக்கும் அடை­யாள அட்­டை­க­ளையும் இரவல் பெறும் மாண­வர்­க­ளுக்­கான அங்­கத்­துவ அட்­டை­க­ளையும் தாயா­ரித்து அதனை செயற்­ப­டுத்தும் முறை பற்றி ஆசி­ரி­யர்­க­ளுக்கு பயிற்­று­வித்தும் உள்­ளனர்.

 

இத்­த­கைய செயற்­பா­டு­க­ளினால் உற்­சா­க­ம­டைந்த குழு­வினர் பாட­சா­லையில் உள்ள 418 மாண­வர்­க­ளுக்கு புதிய கால­ணி­களை பெற்றுக் கொடுப்­ப­தற்­கான பணத்­தையும் சேக­ரித்து அன்­ப­ளிப்பு செய்­துள்­ளனர்.

 

‘Super Sixes’ குழு­வினர் கம்­பஹா மாவட்­டத்தில் 50 பாட­சா­லைகள், 15 பொலிஸ் நிலை­யங்கள், 3 வைத்­தி­ய­சா­லைகள் ஆகி­ய­வற்றின் வள­வு­களில் பாரிய மர­ந­டுகை இயக்கம் ஒன்றை ஆரம்­பித்து ஒரு மாதத்­திற்குள் 1000 மரக்­கன்­று­களை நாட்­டி­யுள்­ளனர்.

 

Ceylinco Life இன் 2016ஆம் ஆண்­டுக்­கான பசு­மை­ம­ய­மாக்கும் (Go Green) திட்­டத்தை நிறு­வ­னத்­திற்கு வெளி­யிலும் எடுத்துச் செல்லும் முயற்­சியில் இந்த மாவட்­டத்தை சேர்ந்த அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளாதும் சமு­தா­யத்­தி­ன­ரி­ட­மி­ருந்தும் cjåNahL மூன்­றி­லி­ருந்து ஆறு மாத காலத்திற்குள் 5,000 மரக் கன்றுகளை நாட்டுவது என்று இலக்கு வைக்கப் பட்டுள்ளது.

 

நிறுவன மட்டத்தில் பரந்த அளவில் சமுதாயத்தை மையமாகக் கொண்ட சேமநல முயற்சிகளை மேற்கொண்டுவரும் Ceylinco Life இவற்றை செயற்படுத்த கணிசமான தொகை நிதியையும்  ஊழியர் வளத்தையும் வழங்கி வருகிறது என்று கம்பனியின் முகாமைப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர். ரெங்கநாதன் தெரிவித்தார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.