Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
Water Garden Sigiriya ஹோட்டல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறப்பு
2016-10-17 16:18:01

மிகப் பெரிய மலைக்­குன்றை பின்­ன­ணி­யாகக் கொண்டு அமைக்­கப்­பட்­டுள்ள புதிய சொகுசு புட்டிக் ஓய்வு விடு­தி­யான வோட்டர் கார்டன் சிகி­ரியா (Water Garden Sigiriya)  அண்­மையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறந்து வைக்­கப்­பட்­டது.

 

வசீ­க­ரிக்கும் இரா­ஜ­தா­னிய சூழ­லினால் கவ­ரப்­பட்டு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள வோட்டர் கார்டன் ஹோட்­ட­லா­னது வர­லாற்று சிறப்பு மிக்க மலைக்­குன்று மற்றும் நிஜ­மான உள்­நாட்டு அனு­ப­வங்­களை பெறு­வ­தற்­கான மிகப்­பொ­ருத்­த­மான இட­மாக அமைந்­துள்­ளது.

 

“இது­வொரு சுவா­ர­ஷ்­ய­மான பய­ண­மாக இருந்­த­துடன், ஒவ்­வொரு தரு­ணத்­தையும் நாம் ரசித்தோம்.

 

எமது குழுவைச் சேர்ந்த அனை­வ­ரதும் பல வருட கடின உழைப்பின் பின்னர் எமது கருப்­பொ­ரு­ளா­னது நாம் நினைத்­ததைக் காட்­டிலும் மிகச்­சி­றந்த படைப்­பாக உரு­வாக்­கி­யுள்­ளதை காண்­கையில் மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­துடன், உங்­க­ளுக்கும் பிடிக்கும் என நாம் எண்­ணு­கிறோம்” என ஹோட்டல் திறப்பு நிகழ்வில் Union Resorts & Spas Ltd  இன் தலைவர் அஜித் விஜ­ய­சே­கர தெரி­வித்தார்.

 

35 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்த ஓய்வு விடு­தி­யி­லி­ருந்து கோட்­டையை பார்க்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. 6 செழு­மை­யான வோட்டர் villa கள் உள்­ள­டங்­க­லாக 30 அதி­சொ­குசு villas’, பார், உண­வகம், நீச்சல் குளம் மற்றும் ஸ்பா போன்ற அனைத்து வித­மான அலங்­கா­ரங்­களும் புகழ்­பெற்ற கட்­டி­டக்­கலை நிபு­ண­ரான சன்ன தஸ்­வத்­த­வினால் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன.

 

“சிகி­ரி­யாவின் பூந்­தோட்­டத்தைப் போன்ற ஒரு பூந்­தோட்­டத்தை நாம் உரு­வாக்­கி­யுள்ளோம். இருப்­பினும், இது முழு­மை­யாக சிகி­ரியா பூந்­தோட்­டத்தை ஒத்­த­தல்ல. ஆனால் அதன் வழியே நடந்து செல்­கையில் 5ஆம் நூற்­றாண்டில் வாழ்­வதைப் போன்ற உணர்வை நீங்கள் நிச்­சயம் பெறு­வீர்கள்” என தஸ்­வத்த தெரி­வித்தார்.

 

“எமது திறப்பு விழா­வா­னது பாரம்­ப­ரிய ஹோட்டல் திறப்பைப் போன்­ற­தல்ல, வாடிக்­கை­யா­ள­ருக்கு பல அனு­ப­வங்­களை வழங்­கக்­கூ­டிய எமது தீவு வாழ்க்­கையின் தனிப்­பட்ட கொண்­டாட்­ட­மாக திகழ்­கி­றது.

 

 

இந்த ஹோட்­ட­லா­னது பிராந்­தி­யத்தின் சிறந்த அமை­வி­ட­மாக அமையும் என நாம் உறு­தி­யாக நம்­பு­கிறோம்” என விஜ­ய­சே­கர தெரி­வித்தார். “இந்த இடத்தின் அற்­பு­தத்தை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு உணரச் செய்­ய­வுள்­ள­துடன், உலகின் எல்லா மூலை­க­ளிலும் வோட்டர் கார்­டனின் சிறப்பம்சங்களை மரபாக உருவாக்குவதே எமது எண்ணமாகும்.

 

உலக வரைபடத்தில் வோட்டர் கார்டன் ஹோட்டலானது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்குமெனவும், எமது நாட்டிற்கான புதிய ஆரம்பமாக இது அமையும் எனவும் நாம் நம்புகிறோம்” என மேலும் அவர் தெரிவித்தார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.