Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தேசிய ஏற்­று­ம­தி­யாளர் விரு­துகள் 2016 இல் ஆறு விரு­து­களை தன­தாக்­கி­யுள்ள ஹல்பே டீ
2016-10-17 16:28:50

U.H.E குழு­மத்தின் அங்­கத்­துவ நிறு­வ­ன­மான, உல­கப்­புகழ் பெற்ற இலங்­கையின் தேயிலை உற்­பத்தி வர்த்­தக நாம­மான ஹல்பே டீ, இலங்­கையின் ஏற்­று­மதி துறையில் வழங்­கப்­படும் அதி­யுயர் விரு­துகள் வழங்கும் நிகழ்­வான, தேசிய ஏற்­று­ம­தி­யாளர் விரு­துகள் 2016 இல், ஆறு விரு­து­களை தன­தாக்­கி­யி­ருந்­தது.

 

இதில், விசேட விரு­துகள் உள்­ள­டங்­கு­வ­துடன், அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த மறைந்த பட்ரிக் அம­ர­சிங்க சவால் கேட­யத்­தையும் வென்­றுள்­ளது. வரு­டாந்த தேசிய ஏற்­று­ம­தி­யாளர் விரு­து­க­ளி­னூ­டாக, உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்­துக்கு ஏற்­று­ம­தி­யா­ளர்கள் வழங்கும் பங்­க­ளிப்பு கௌர­விக்­கப்­ப­டு­வ­துடன், உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச சந்­தை­களில் அவர்கள் வழங்கும் பங்­க­ளிப்­புக்கு வெகு­ம­தி­களை வழங்கும் வகை­யிலும் அமைந்­துள்­ளது.

 

24 ஆவது ஆண்­டாக நடை­பெற்ற இந்த விரு­துகள் வழங்கும் நிகழ்வை வரு­டாந்தம் ஏற்­று­ம­தி­யா­ளர்கள் பெரு­ம­ளவில் எதிர்­பார்க்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இதன் வெற்­றி­யா­ளர்கள் சுயா­தீன நடு­வர்கள் குழா­மினால் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

இந்த ஆண்டின் வைப­வத்தின் போது, தேயிலை மற்றும் மூலிகை பொருட்­களை ஏற்­று­மதி செய்யும் மற்றும் நேர­டி­யாக தொழிற்­சா­லை­யி­லி­ருந்து விநி­யோ­கிக்கும் ஹல்பே டீ, ஆறு விரு­து­களை தன­தாக்­கி­யி­ருந்­தது. தேயி­லைக்­கான தங்க விருது, பெறு­மதி சேர்க்­கப்­பட்ட தேயி­லைக்­கான தங்க விருது, மொத்த தேயிலை துறையின் சிறந்த ஏற்­று­ம­தி­யாளர் தங்க விருது, சிறிய, நடுத்­தர அளவு சிறந்த ஏற்­று­ம­தி­யா­ள­ருக்­கான தங்க விருது, துறை­யுடன் தொடர்­பு­டைய வியா­பா­ரங்­களில் புத்­தாக்­க­மான ஏற்­று­ம­தி­யா­ள­ருக்­கான வெள்ளி விருது மற்றும் புதி­தாக அறி­முகம் செய்­யப்­பட்­டி­ருந்த “பட்ரிக் அம­ர­சிங்க சவால் கேடயம்” வெற்­றி­யா­ள­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

 

3,5 வரு­டங்கள் எனும் குறு­கிய காலப்­ப­கு­தி­யினுள், ஹல்பே டீ என்­பது தற்­போது நிறு­வனம் எனும் வகையில் வர­வேற்பைப் பெற்­றுள்­ள­துடன், ஏற்­று­ம­தித்­து­றையில் வெவ்வேறு பரி­மா­ணங்­களில் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த வண்­ண­முள்­ளது. புத்­தாக்கம் மற்றும் தொழில்­மு­யற்­சி­யாண்மை ஆகி­ய­வற்றை வெளிப்­ப­டுத்­திய வண்ணம் வியா­பாரச் சிறப்­பையும் சமூ­கத்தில் பேணி வரு­கி­றது.

 

 

ஹல்பே டீ (U.H.E எக்ஸ்போர்ட்ஸ்) தலைமை அதி­கா­ரியும், U.H.E  குழு­மத்தின் சந்­தைப்­ப­டுத்தல் பணிப்­பா­ள­ரு­மான எரந்த அபே­ரட்ண கருத்துத் தெரி­விக்­கையில், “இந்த பெறு­மதி வாய்ந்த விரு­து­களை பெற்றுக் கொண்­டமை என்­பது பெரும் கௌர­வத்தை வழங்­கு­வ­துடன், ஏற்­று­மதி துறையில் நிறு­வனம் கொண்­டுள்ள ஈடு­பாட்டை பிர­தி­ப­லிப்­பது மட்­டு­மின்றி, ஹல்பே டீ பேணி வரும் புத்­தாக்கம், தொழில் முயற்­சி­யாண்மை மற்றும் தொழில் செய­ல­ணியின் அர்ப்­ப­ணிப்பு ஆகி­ய­வற்­றுக்கு துறை­யி­லி­ருந்து கிடைத்­துள்ள கௌர­விப்­பா­கவும் அமைந்­துள்­ளது” என்றார்.

 

ஊழி­யர்கள் மற்றும் செய­ல­ணி­யி­னரின் செயற்­பா­டுகள் பற்றி அவர் குறிப்­பி­டு­கையில், “நாம் குடும்ப அடிப்­ப­டை­யி­லான வியா­பா­ரத்தை முன்­னெ­டுக்­கின்ற போதிலும், இந்த விரு­து­களின் மூல­மாக நாம் கொண்­டுள்ள ஐக்­கி­ய­மான குழு­நிலைச் செயற்­பா­டுகள் பிர­தி­ப­லிக்­கப்­ப­டு­கின்­றன.

 

இந்த விரு­து­களை வெற்­றி­யீட்­டு­வது என்­பது சிறந்த சாத­னை­யாகும் அதன் சகல கௌர­வங்­களும் எமது செய­ல­ணி­யி­ன­ருக்கும் அர்ப்­ப­ணிப்­பான ஊழி­யர்­க­ளையும் சென்­ற­டைய வேண்டும். இவர்கள் இந்த விரு­து­களை வெற்­றி­யீட்­டு­வது என்­பதை சாத­க­மாக்­கி­யுள்­ளனர்.

 

எமது பொருட்கள் பற்­றியும், எமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு உத­வி­களை வழங்­கு­வது என்­பது பற்­றியும் எமது அணி­யினர் அதி­க­ளவு ஆர்­வத்தை கொண்­டுள்­ளனர்.  அவர்­களின் தொடர்ச்­சி­யான அர்ப்­ப­ணிப்பு மற்றும் பங்­க­ளிப்­பி­னூ­டாக எம்மால் ஏற்­று­ம­தித்­து­றையில் சிறந்த வளர்ச்­சியை பதிவு செய்ய முடிந்­துள்­ளது.” என்றார்.

 

ஏ.பி.டி. அபே­ரட்­ண­வினால், 1971 இல் தேயிலை உற்­பத்­தி­யுடன் தனது செயற்­பா­டு­களை ஆரம்­பித்த இந்த குரூப், நாடு முழு­வ­திலும் நான்கு தேயிலை பெருந்­தோட்­டங்­களை தன்­வசம் கொண்­டுள்­ளது. ஊவ­ஹல் ­பே­வத்த டீ ஃபெக்­டரி (பிரைவட்) லிமிட்டெட், ஊவா கிறீன்லன்ட்ஸ் எஸ்டேட் பிரைவட் லிமிட்டெட் மற்றும் ஊவ­ஹல்பே எஸ்டேட் பிளான்டேஷன்ஸ் பிரைவட் லிமிட்டெட் போன்றன இந்த குரூப்பின் கீழ் காணப்படும் துணை நிறுவனங்களாகும்.

 

சுற்றலாத்துறையிலும் குழுமம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதில் அந்த விருதுகளை வென்ற நாமங்களான 98 Acres Resort  மற்றும் the Secret Hotels  தொடர் முதலியன அடங்கியுள்ளன.

 

ஹல்பே டீ ஏற்றுமதி உலகளாவிய ரீதியில் குவைட், சீனா, கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, ஃபிரான்ஸ் மற்றும் ஏனைய முக்கிய ஐரோப்பிய சந்தைகளுக்கும் நடைபெறுகின்றது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.