Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இந்­தி­யா­வு­ட­னான எட்கா உடன்­ப­டிக்கை மூலம் ஆசிய மற்றும் உப கண்ட வலய நாடு­களின் மத்­தியில் நாம் முதன்­மை­யான நாடாக மாற்­ற­ம­டைவோம்; திரு­கோ­ண ­ம­லை பொரு­ளா­தார மைய­மா­கவும் துறை­முக அபி­வி­ருத்தி வல­ய­மா­கவும் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது: உலக ஏற்­று­மதி அபி­வி­ருத்தி மாநாட்டில் பிர­தம ரணில் விக்­கி­ர­ம­சிங்க
2016-10-17 16:41:05

(பா.ருத்­ர­குமார்)


இந்­தி­யா­வுடன் மேற்­கொள்­ளப்­படும் ‘எட்கா’ உடன்­ப­டிக்கை மூலம் ஆசிய மற்றும் உப கண்­ட­வ­லய நாடு­களின் மத்­தியில் நாம் முதன்­மை­யான நாடாக மாற்­ற­ம­டைவோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நம்­பிக்கை தெரி­வித்தார்.

 

மேலும், பொரு­ளா­தா­ரத்தை மாத்­திரம் இலக்­காகக் கொண்டு செயற்­ப­டாமல் மக்­க­ளுக்கு சிறந்த வாழ்க்­கையை தரு­வ­தற்­கான யுத்­தத்­தி­னையே தற்­போது மேற்­கொள்­வ­தா­கவும் அதில் வெற்­றி­ பெ­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையே நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­ற­தெ­னவும் குறிப்­பிட்டார்.

 

உலக ஏற்­று­மதி அபி­வி­ருத்தி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. அந் ­நி­கழ்­கவில் சிறப்பு அதி­தி­யாகக் கலந்­து ­கொண்டு உரை­யாற்றும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 

அவர் தொடர்ந்து தெரி­விக்­கை­யில், இந் ­நாட்டு மக்கள் தாம் மேற்­கொள்ளும் தொழில் தொடர்பில் திருப்­தி­ய­டை­யாமல் உள்­ளனர். இதன் கார­ண­மா­கவே நல்­லாட்சி அர­சாங்­கத்தில் மில்­லியன் கணக்­கான தொழிற்­சந்­தை­களை நாம் ஏற்­ப­டுத்த அர­சியல் ரீதி­யாக ஒன்­றி­ணைந்­துள்ளோம்.

 

தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­ற­மதி மற்றும் உற்­பத்­திக்­கான வச­தி­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி கொடுப்­பதில் நாம் தெளி­வான சில அணு­கு­மு­றை­களை அடை­யா­ளப்­ப­டுத்தி செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

 

 

இந்­திய சமுத்­தி­ரத்தின் மத்­திய கேந்­திர நிலை­ய­மாக விளங்கும் இலங்கை பொரு­ளா­தா­ரம், வர்த்­த­கம், சர்­வ­தேச தொடர்­பு­களை மேற்­கொள்­வ­தற்கு ஏற்ற கேந்­திர நிலை­ய­மாக உள்­ளது. கொழும்பு துறை­மு­கம், அம்­பாந்­தோட்டை துறை­மு­கம், திரு­கோ­ண­மலை துறை­மு­கம் ­போன்­ற­னவும் கட்­டு­நா­யக்க மற்றும் அம்­பாந்­தோட்டை விமா­ன­நி­லையம் என்­பன சர்­வ­தேச நாடு­களின் மத்­தியில் பிர­தான போக்­கு­வ­ரத்து மார்க்­க­மாக உள்­ளன.

 

 

விவ­சா­யம், தொழில்நுட்­பம், உல்­லா­சப்­பி­ர­யா­ணத்­துறை போன்­ற­வற்றில் நாம் பாரிய முன்­னேற்றம் கண்­டுள்ளோம். மேல்­மா­காண மெகா­பொலிஸ் திட்­டம், வர்த்­தக நகரம் போன்­றன இலங்­கையில் எதிர்­கால பொரு­ளா­தார வளத்தை அள்ளிக் கொடுக்­க­கூ­டிய திட்­டங்­க­ளாகும்.

 

 

தென்­மா­காண அபி­வி­ருத்தி திட்­டங்கள் உல்­லா­சப்­பி­ர­யா­ணத்­து­றையை அபி­வி­ருத்தி செய்யும் வகையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. அம்­பாந்­தோட்­டையை பொறுத்­த­மட்டில் கைத்­தொழில் பேட்­டை­யா­கவும் அபி­வி­ருத்தி மைய­மா­கவும் மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வுள்­ளது.

 

 

 

அடுத்தகட்டமாக திருகோணமலை பொருளாதார மையமாகவும் துறைமுக அபிவிருத்தி வலயமாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. எனவே தற்போது வர்த்தக சந்தையை இணங்காண வேண்டியுள்ளது. தற்போது மூன்று முக்கியமான நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி மூன்று முக்கிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளோம் என்றார்.

 

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.