Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
Kia Motors அதன் கச்சிதமான Picanto காருக்கு வழங்கும் 5 வருட உத்தரவாதம்; கொரிய நாட்டு கார் உற்­பத்தி நிறு­வ­ன­மான Kia இலங்கை மோட்டார் வாகன சந்­தையில் என்­று­மில்­லாத சாதனை
2016-10-19 17:35:50

Kia Motors (Lanka) Limited இலங்­கையில் விற்­பனை செய்­யப்­படும் கார்­க­ளுக்கு என்றும் இல்­லா­த­வாறு தயா­ரிப்­பா­ளரின் 5 வருட கால உத்­த­ர­வா­தத்தை வழங்­கு­வதன் மூலம் புதி­ய­தொரு சாத­னையை நிலை­நாட்­டி­யுள்­ளது.

 

 

2016ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் முதலாம் திக­தி­யி­லி­ருந்து விற்­ப­னை­யாகும் Kia  வின் முன்­னணி வகுப்பை சேர்ந்த கச்­சி­த­மான Picanto நகர்ப்­புற கார்­க­ளுக்கு 150,000 கிலோ மீற்றர் ஓடும் வரை அல்­லது வாங்­கிய திக­தி­யி­லி­ருந்து 5 வருட காலம் இவை இரண்டில் எது முதல் வரு­கி­றதோ அது வரை இந்த உத்­த­ர­வாதம் செல்­லு­ப­டி­யாகும் என அந்­நி­று­வனம் அறி­வித்­துள்­ளது.

 

வடி­வ­மைப்பும் இயங்கு திறனும் சிறப்­புற்று விளங்கும் தயா­ரிப்­பான kia வாக­னங்­களின் உற்­பத்தி  நிறு­வனம் தொடர்ச்­சி­யாக அதன் வாக­னங்­க­ளுக்கு பெறு­மதி சேர்ப்­பது என்ற உறு­திப்­பாட்டின் ஒரு பகு­தி­யாக அவற்றை விருத்தி செய்து கொண்டும் மெரு­கூட்டிக் கொண்டும் இருக்­கி­றது என கியா மோட்டர்ஸ் (லங்கா) லிமிடெட் முகாமைப் பணிப்­பாளர்  மஹேன் தம்­பையா தெரி­வித்தார்.

 

Picanto மீதான புதிய 5 வரு­ட­கால உத்­த­ர­வாதம், எமது வளர்ச்சி அடைந்த சிறிய கார், உள்ளூர் மோட்டார் வாகன சந்தை பல்­வேறு சவால்­களை எதிர்­கொள்ளும் இவ்­வே­ளை­யிலும் எங்கள் உறு­திப்­பாட்டை பிர­தி­ப­லிக்­கி­றது.

 

விஸ்­த­ரிக்­கப்­பட்ட இந்த உத்­த­ர­வாதம் தர அம்­சங்­க­ளிலும் உற்­பத்­தியில் நாம் வைத்­துள்ள நம்­பிக்­கையின் தன்­மை­யிலும் கம்­பனி எவ்­வ­ளவு தூரம் வளர்ச்சி அடைந்­துள்­ளது என்­பதை காண்­பிக்­கின்­றது.

 

உலகின் சில பகு­தி­களில் அதன் மாதிரி வகை­ய­றாவில் தயா­ரிப்­பா­ளரின் 7 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­தையும் கம்­பனி வழங்­கு­வது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது எனவும் மஹேன் தம்­பையா தெரி­வித்தார்.

 

 

விஸ்­த­ரிக்­கப்­பட்ட 5 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துக்கு மேல­தி­க­மாக, TÜV Nord என்ற ஒரு சுயா­தீன தொழில்­நுட்ப பரி­சோ­தனை கம்­ப­னி­யினால் புதிய Kia Picanto சுற்­றாடல் சாத­க­மா­னது என்ற சான்­றிதழ் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

Kia நிறு­வ­னத்தின் சுற்­றாடல் சாதக நம்­பக தன்­மையை அங்­கீ­க­ரித்து புதிய Rio, Optima ஆகி­ய­வற்­றுக்கு  ISO 14040 Life Cycle Assessment சான்­றி­தழும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கை யில் இந்த வருடம் மார்ச் மாதம் அறி­முகம் செய்­யப்­பட்ட புதிய உற்­பத்­தி­யான Picanto புரட்­சி­க­ர­மான மோட்டார் வாகன வடி­வ­மைப்­பையும் அதி­சி­றந்த இயங்கு திற­னையும் பிர­தி­ப­லிக்­கி­றது.

 

one litre (998cc) Gasoline Inline three-cylinder எஞ்­ஜினின் சக்­தியில் பல்­லி­ணைவு பட்­டி­யுடன் 5 கத­வு­களைக் கொண்ட Kia Picanto காரை five-speed manual உடன் ஆரம்­பித்து four speed automatic transmission மற்றும்high-end sports package ஆகி­யன வரை ஐந்து விருப்­பத்­தேர்­வு
­க­ளுடன் பெற்றுக் கொள்­ளலாம்.

 

 

பாது­கா­ப்புக்­கென காற்­ற­டைத்த இரட்டை பைகள் (airbags) anti-lock brake system, சுற்­றாடல் சாத­க­மான தொழில்­நுட்பம், பல்­வேறு விருப்பத் தேர்­வுகள் ஆகியன உட்பட முன்னேற்றமான பாதுகாப்பு அம்சங்களுடன் திடத் தன்மையையும் முதிர்ச்சியையும் காண்பிக்கும் சிறப்பியல்புகள் அடங் கியுள்ளன.

 

iPod AUX  மற்றும் USB இணைப்பு, மோட்டரில் இயங்கும் ஸ்டீரிங்,  tilt steering system, radio, CD player, security indicator ஆகியவற்றுடன் கூடிய ஏற்புடை மாதிரியான பல அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.