Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
ஏசியன் வைத்தியசாலை நலன் காக்கும் சிறப்பு விருதை ஹேமாஸ் வைத்தியசாலை வென்றது
2016-10-19 17:43:59

இலங்­கையின் நலன் காக்கும் துறையில் முன்­ன­ணி­யி­லுள்ள ஹேமாஸ் வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் ‘’வைத்­தி­ய­சாலை முகா­மைத்­துவம் மற்றும் ஆளு­மையில் புத்­தாக்­கத்தைப் புகுத்­தி­ய­தற்­காக மதிப்­பு­மிக்க ஏசியன் வைத்­தி­ய­சாலை முகா­மைத்­துவ  (HMA)ஆசிய நலன் காக்கும் 2016 விருது வழங்­கப்­பட்­டது. 

 

 

இந்த கண்­கவர் சர்­வ­தேச விருது வழங்கும் விழா வியட்­நாமில் அண்­மையில் நடை­பெற்­றது. ஏசியன் வைத்­தி­ய­சாலை முகா­மைத்­துவ விரு­துகள் சிறந்த மருத்­து­வ­மனை நடை­மு­றை­களை பின்­பற்றும் ஆசி­யா­வி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­களை அங்­கீ­க­ரித்து கௌர­விக்­கி­றது.

 

இப்­போது ஆசிய பசுபிக் பிராந்­தி­யத்­திற்­கான ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வைத்­தி­ய­சாலை முகா­மைத்­துவ விரு­துகள் நிகழ்ச்­சி­யாகும். நடு­வர்கள் மற்றும் ஆலோ­ச­கர்­களின் கருத்­துப்­படி, மேம்­ப­டுத்­தப்­பட்ட குறிப்­பி­டத்­தக்க மற்றும் புத்­தாக்­க­மு­டைய  திட்­டங்கள், நிகழ்ச்­சிகள் மற்றும் சிறந்த நடை­மு­றை­களை குறிப்­பிட்ட காலத்­தினுள் நடை­மு­றைப்­ப­டுத்தும் பிராந்­தி­யத்­தி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு விரு­துகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

 

2016 ஆம் ஆண்டில் உயர் மதிப்­பு­டைய விருது வழங்கும் விழாவில் பங்­கு­பற்­றிய 15 நாடு­க­ளி­லுள்ள 92 வைத்­தி­ய­சா­லை­க­ளி­ட­மி­ருந்து 322  விரு­து­க­ளுக்­கான பதி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.


பல் – வலை­ய­மைப்பு ‘’வைத்­தி­ய­சாலை முகா­மைத்­து­வத்தில் வணிக நுண்­ண­றி­வி­னூ­டாக (BI)  மீதிப்­புள்ளிக் கணிப்­பீட்டு அட்டை , பொது மாதி­ரி­யான இயக்க நடை­மு­றைகள் ; (SOP) வினு­டைய மற்றும் மூலோ­பாய ஆகு செலவு திட்­டங்­களில் உச்­ச­நி­லை­ய­டைந்­த­மைக்­காக வழங்­கப்­ப­டு­கின்­றது’’.

 

ஹேமாஸ் வைத்­தி­ய­சா­லைகள் அவர்­களின் ஆட்­சியில் பொது மாதி­ரி­யான இயக்க நடை­மு­றைகள் மற்றும் இயக்க கைநூல்கள் அறி­மு­கப்­ப­டுத்­து­வதில் முக்­கி­யத்­துவம் வழங்­கி­யது. மூலோ­பாய ஆகு செலவு முகா­மைத்­துவம்  அடுத்­த­தாக முழு தனியார் சுகா­தார நலன் காப்பு கைத்­தொ­ழிலில்  விலை நிர்­ண­யிக்கும் முடி­வு­களில் புதிய பரி­மா­ணங்­களைச் சேர்த்­தது.

 

இறு­தி­யாக  மீதி சமப்­ப­டுத்­தப்­பட்ட புள்­ளிக்­க­ணிப்­பீட்டு அட்டை மற்றும் வணிக நுண்­ண­றிவு நிறு­வன தொழிற்­பாட்டில்  நிதி மற்றும் நிதி­யற்ற விட­யங்­களில் வணிக நுண்­ண­றி­வுடன் தக­வலை அடை­வ­தற்­காக உண்­மை­யான நேரத்தை வழங்கும் ஒரு முழு­மை­யான படத்தைத் தரு­கி­றது.

 

முகா­மைத்­துவ முடிவு எடுப்­பதில் வணிக நுண்­ண­றிவை அறி­மு­கப்­ப­டுத்­திய இலங்­கை­யி­லுள்ள முத­லா­வது வைத்­தி­ய­சாலை ஹேமாஸ் ஆகும். ‘’சர்­வ­தேச சக பாடி­க­ளுக்
­கி­டையே பாராட்டை பெற்­றமை எங்­க­ளுக்கு பெரு­மை­ய­ளிக்கும் ஒரு கண­மாகும்’’ என ஹேமாஸ் வைத்­தி­ய­சா­லைகள் குழு முகா­மைத்­துவ பணிப்­பாளர் டாக்டர் லக்கித்  பீரிஸ் கூறினார்.

 

“ எங்­க­ளது நோக்கம் விரி­வான பெறு­ம­தி­மிக்க சுகா­தார சேவை­களை தர­மான வகையில் எங்­க­ளது வாடிக்­கை­யா­ள­ருக்கு வழங்­கு­வ­தாகும். நாளைய சவால்­களை எதிர்­நோக்கும் வகையில் இவற்றை நாங்கள் பொறுப்பு மிக்க நடை­மு­றைகள் மற்றும் மக்கள் மீதான நின்று நிலைக்க கூடிய முத­லீ­டு­களை அதே போல் தொழில் நுட்பம் ஆகி­ய­வற்றை மேற்­கொண்டு அவற்றை  அடை­வதில் அர்­ப­ணிப்­புடன் உள்ளோம்.

 

எங்­க­ளது நிகழ்ச்­சி­க­ளா­வன சுகா­தார நலன்  பேணு­வதை அடுத்த கட்­டத்­திற்கு எடுத்துச் செல்லும் எமது அர்­ப­ணிப்பின் பிர­தி­ப­லிப்­பாகும்” எனவும் அவர் தெரி­வித்தார். ஹேமாஸ் வைத்­தி­ய­சா­லை­களின் நிதிப் பணிப்­பாளர் போற்­றியா ஜெய­மக கூறு­கையில், “பல்­வேறு தொழில் புரியும் தர நிர்­ணய மற்றும் நடை­மு­றை­களில் உச்­சத்தை எய்­து­வ­திற்­கான வித்­தி­யா­ச­மான நபர்களுடனான செயற்பாடானது ஒரு சிக்கலான தொன்றாகும்.

 

நலன் காப்பை வழங்கும்போது “தரவு பல வடிவங்களில் உருவாக்கப்படுகிறது. இதனா லேயே தரவு ஒருங்கிணைப்பு மற்றும் காட்சிப்படுத்தல் முக்கியத்துவம் வாய்ந்ததொன் றாகிறது நாங்கள் எமது பயணத்தின் நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வதில் அதிக புத்தாக்கத்தைப் புகுத்துவதுடன் அது எமது குறிப்பிடத்தக்கதொரு சாதனையாகும்’’ என்றார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.