Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
‘த ஃபக்டரி அவுட்லெட்’ இலங்கையில் முதன்முறையாக கிட்ஸ் கிளப் கார்ட்டை அறிமுகப்படுத்துகிறது
2016-10-19 17:55:39

இலங்கையில் முதன்முறையாக “கிட்ஸ் கிளப் கார்ட்டை” 'த ஃபக்டரி அவுட்லெட்”  அறிமுகப்படுத்தியுள்ளது. குறுகிய காலத்திற்குள் அது பல்வேறு இடங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டு மக்களுக்கு இனிய ஷொப்பிங் அனுபவத்தை வழங்கும் விற்பனை நிலையத் தொகுதியாக முன்னேறியுள்ளது.

 

(இடமிருந்து) சந்தைப்படுத்தல் தலைவர் ரினாஸ் ரபாய்தீன், பிரதம செயற்பாடுகள் அதிகாரி முனீர் ராபிக், பிரதம நிதி அதிகாரி நௌஸீர் அகமட் ஆகியோர் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட பிள்ளைகளுடன் காணப்படுகின்றனர்.


 

வாழ்நாள் முழுவதற்கும் செல்லுபடியாகும் TFO கிளப் லோயல்டி திட்டத்தைச் சிறிது காலத்திற்கு முன் ஆரம்பித்ததன் மூலம் த ஃபக்டரி அவுட்லெட் தனது ஆடைகளின் விற்பனையை ஊக்குவித்ததுடன் மாத்திரமல்லாமல், விசுவாசமான வாடிக்கை யாளர்களுக்கு விசேட விலைக்கழிவுகளையும் பண்டிகைக்கால சலுகைகளையும் வழங்கியது.

 

இதே ஊக்குவிப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் முகமாகவும் உலக சிறுவர் தினத்திற்கு மதிப்பளிக்கும் முகமாகவும் TFO கிட்ஸ் கிளப் கார்ட் (Kids Club Card)  லோயல்டி திட்டத்தை  நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது என அதன் பிரதம செயற்பாடுகள் அதிகாரி முனீர் ராபிக் தெரிவித்தார்.

 

த ஃபக்டரி அவுட்லெட் உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக 2016  TFO கிட்ஸ் கிளப் கார்ட் (Kids Club Card) லோயல்டி திட்டத்தை  ஆரம்பித்தது. TFO ஹவ்லொக் விற் பனை நிலையத்தில் இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் பிரதம செயற்பாடுகள் அதிகாரி ஜனாப் முனீர் ராபிக் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

 

பணிப்பாளர் ஜனாப் ஜாவித் இக்பால், பிரதம நிதி அதிகாரி ஜனாப் நௌஸீர் அகமட் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகப் பங்குபற்றினர். TFO கிட்ஸ் கிளப் கார்ட்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.

 

அவை சிறுவர்களுக்குப் பிடித்தமான சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. TFO விற்பனை நிலையத்தில் சிறுவருக்கான ஆடை அணிகலன்கள் மற்றும் விளை யாட்டுப் பொருட்களின் கொள்வனவுக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபா 100க்கும் 2 புள்ளிகள் வழங்கப்படும்.

 

இவ்வாறு சேகரிக்கப்படும் புள்ளிகளைப் பயன்படுத்தி, சிறுவர்கள் தமக்கு விருப்பமான வேறு பொருட்களை TFO காட்சியறைகளில் வாங்கலாம். அது மாத்திரமன்றி, கிட்ஸ் கிளப் கார்ட் உற்சவகால வழங்கல்கள், பிறந்தநாளில் விசேட விலைக்கழிவுகள் உள்ளிட்ட வேறு பல சலுகைகளையும் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.