Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
2017 இல் அறி­மு­க­மா­க­வுள்ள மோட்டார் சைக்­கிள்கள்
2017-01-02 16:24:09

மோட்டார் சைக்கிள் அபி­மா­னி­களை மகிழ்­விப்­ப­தற்கு இவ்­ வ­ருடம் பல புதிய மோட்டார் சைக்­கிள்கள் அறி­மு­க­மா­க­வுள்­ளன.

 

குறிப்­பாக, இந்­திய வாகனத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களால் பல புதிய மோட்டார் சைக்­கிள்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

 

உயர் வினைத்­தி­ற­னான பல மோட்டார் சைக்­கிள்கள் இவ்­ வ­ருடம் சந்­தைக்கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அவற்றில் சில மோட்டார் சைக்­கிள்களின் விப­ரங்கள் இவை:


Bajaj Pulsar 200 NS

 

 

பஜாஜ் ஒட்டோ நிறு­வ­னத்தின்  பல்ஸர் பைக்குகள், இளை­ஞர்­களை வெகு­வாகக் கவர்ந்­தவை. Bajaj Pulsar 200 NS  பைக் 2012 இல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. எனினும் 2015 ஆம் ஆண்டு மத்­தியில் இதன் தயா­ரிப்பு நிறுத்­தப்­பட்­டது.

 

இந்­நி­லையில், புது மெரு­கேற்­றப்­பட்ட Bajaj Pulsar 200 NS மோட்டார் சைக்­கிளை பஜாஜ் நிறு­வனம் தயா­ரித்­துள்­ளது. முதல் தட­வை­யாக இந்த மோட்டார் சைக்கிள் துருக்­கியில் அண்­மையில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.


2 Yamaha FZ 250

 

 

 

யமாஹா நிறு­வனம் Yamaha FZ 250 எனும் மோட்டார் சைக்­கிளை இவ் ­வ­ருடம் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றது. எதிர்­வரும் 24 ஆம் திகதி இந்­தி­யாவில் இந்த மோட்டார் சைக்கிள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

இது 250 சி.;சி. மோட்டார் சைக்­கி­ளாக இருக்கும் என நம்­பப்­ப­டு­கி­றது. பிரே­ஸிலில் ஏற்­கெ­னவே விற்­ப­னை­யி­லுள்ள Yamaha Fazer 250  மோட்டார் சைக்­கிளை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாக Yamaha FZ 250 இருக்­கக்­கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

 

Hero Xtreme 200S

 

இந்­தி­யாவின்  ஹீரோ மோட்­டோகோப் நிறு­வனம் Hero Xtreme 200S மோட்டார் சைக்­கிளை சந்­தைக்கு விட­வுள்­ளது. 200 சி.சி. வலு­வ­டைய இந்த மோட்டார் சைக்­களின் கடந்த வருடம் டில்­லியில் நடை­பெற்ற ஒட்டோ எக்ஸ்போ 2016 கண்­காட்­சியில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

மேற்­படி கண்­காட்­சியில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்ட பைக், முன்னும் பின்னும் டிஸ்க் பிறேக்ஸ்­களை கொண்­டி­ருந்­த­துடன் LED pilot lamps, LED tail lamps ஆகி­ய­ன­வற்­றையும் கொண்­டி­ருந்­தது.

 

மின் சக்­தியில் இயங்கும் Tork T6X

 

Tork T6X என்­பது மின்­சா­ரத்தில் இயங்கும் மோட்டார் சைக்­கி­ளாகும். இந்­தி­யாவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட தொழில்­நுட்ப ஆராய்ச்சி நிறு­வ­ன­மான டோர்க் மோட்­டர்­சைக்கிள்ஸ்  (Tork Motorcycles) நிறு­வ­னத்­தினால் இந்த பைக் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

 

முற்­றிலும் இந்­தி­யாவில் தயா­ரிக்­கப்­பட்ட, மின்­சா­ரத்தால் இயங்கும் முத­லா­வது மோட்­டார்­சைக்கிள் இது­வாகும். பெற்­றோலில் இயங்கும் 200சிசி வலு­வு­டைய மோட்டார் சைக்­கிள்­க­ளுக்கு இணை­யான வலு­வுடன் Tork T6X மோட்­டார்­சைக்கிள் இருக்கும் என டோர்க் மோட்டர்சைக்கிள்ஸ் கூறுகிறது.

 

இந்த பைக், ஒரு தடவை சார்ஜ் செய்யப்பட்டால் 100 கிலோமீற்றர் தூரம் வரை பயணம் செய்யக்கூடியது எனவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் இது பயணம் செய்யக்கூடியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.