Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
டயலொக் அக்­ஸி­யாட்டா நிறு­வ­னத்தின் புதிய பிர­தம நிறை­வேற்று அதி­காரி சுபுன் வீர­சிங்க
2017-01-03 12:28:38

டயலொக் அக்­ஸி­யாட்டா பி.எல்.சி. நிறு­வ­னத்தின் புதிய பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யாக சுபுன் வீர­சிங்க நிய­மிக்­கப்­பட்டுள்ளார்.

 

இது­வரை நிறை­வேற்று அதி­கா­ரியாக இப்­ப­த­வியை வகித்த கலா­நிதி ஹான்ஸ் விஜே­சூ­ரி­ய­வுக்குப் பதி­லாக சுபுன் வீர­சிங்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

 

டயலொக் அக்­ஸி­யாட்டா நிறு­வனம், இலங்­கையின் மிகப் பெரிய தொலைத்­தொ­டர்பு (டெலி­கொ­மியூனிகேஷன்) நிறு­வ­ன­மாக விளங்­கு­கி­றது.

 

இந்­நி­று­வ­னத்தின் ஆரம்­பத்­தி­லி­ருந்து அதன் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யாக கலா­நிதி ஹான்ஸ் விஜே­சூ­ரிய பதவி வகித்தார். 

 

இந்­நி­லையில், புதிய பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யாக சுபுன் வீர­சிங்க பத­வி­யேற்­பது குறித்து கொழும்பு பங்குச் சந்­தைக்கு டயலொக் அக்­ஸி­யாட்டா நிறு­வனம் அறி­வித்­துள்­ளது.

 

2017 ஜன­வரி 1 ஆம் திகதி முதல் இந்­நி­ய­மனம் அமு­லுக்கு வரு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

 

இதே­வேளை, மலே­ஷி­யாவைத் தள­மாகக் கொண்ட அக்­ஸி­யாட்டா நிறு­வ­னத்தின் தெற்­கா­சிய பிராந்­தி­யத்­துக்­கான பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யாக பதவி வகிப்­பதன் மூலம், டயலொக் அக்­ஸி­யாட்டா நிறு­வ­னத்­துடன் கலா­நிதி ஹான்ஸ் விஜே­சூ­ரிய தொடர்ந்தும் நெருக்­க­மாக இணைந்­தி­ருப்பார்.

 

இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், நேபாளம் முத­லான நாடு­களில் விஸ்­த­ரிப்பு மற்றும் முத­லீட்டு நட­வ­டிக்­கை­களை அவர் கையாள்வார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

புதிய பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யான சுபுன் வீர­சிங்க, அவுஸ்­தி­ரே­லி­யாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்­க­லைக்­க­ழ­கத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்­றவர்.

 

ஆவர் 1999 ஆம் ஆண்டு டயலொக் குழு­மத்­துடன் இணைந்தார். இந்­நி­று­வ­னத்தில் பல்­வேறு முகா­மைத்­துவப் பத­வி­களை வகித்த சுபுன் வீர­சிங்க, 2010 ஆம் ஆண்டு பிர­தம செயற்­பாட்டு அதி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

 

2013 ஆம் ஆண்டு மலே­ஷி­யாவின் கோலா­லம்பூர் நகரில் அக்­ஸி­யாட்டா குழுமத்தின் பிரதம மூலோபாய அதிகாரியாக சுபுன் வீரசிங்க நியமிக்கப்பட்டார்.

 

2014 ஆம் ஆண்டு பங்களாதேஷின் ரொபி அக்ஸியாட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.