Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
புதிய அன்ட்ரொய்ட் ஸ்மார்ட்­போன்­க­ளுடன் மீண்டும் வரும் Nokia
2017-01-03 17:29:02

நோக்­கியா நிறு­வனம் புதிய அன்ட்ரொய்ட் ஸ்மார்ட்­போன்­க­ளுடன் இவ் ­வ­ருடம் கைத்­தொ­லை­பேசி சந்­தையில் மீள் பிர­வேசம் செய்­ய­வுள்­ளது. பின்­லாந்து நிறு­வ­ன­மான நொக்­கியா (Nokia), ஒரு காலத்தில் மொபைல் போன் உலகை கலக்­கி­யது.

 

 

நோக்­கியா தொலை­பே­சி­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்கள் மத்­தியில் அதிக வர­வேற்பு இருந்­தது. எனினும்,  அப்பிள் மற்றும் அன்ட்ரொய்ட் ஸ்மார்ட்­போன்­களின் வரு­கைக்கு பின்னர், கைத்­தொ­லை­பேசி சந்­தையில் நொக்­கியா இடம் தெரி­யாமல் போனது.

 

2014 ஆம் ஆண்டில் நொக்­கியா நிறு­வ­னத்தை மைக்­ரோசாப்ட் நிறு­வனம் வாங்­கி­யது. ஆனால் கடந்த வருடம் மீண்டும் ஸ்மார்ட்போன் சந்­தையில் நுழை­யப்­போ­வ­தாக அறி­வித்­தது நொக்­கியா.

 

பின்­லாந்தின் HMD Global எனும் நிறு­வனம் அடுத்த பத்து ஆண்­டு­க­ளுக்கு நொக்­கியா ஸ்மார்ட்­போன்­களை தயா­ரிக்கும் உரி­மையைப் பெற்­றுள்­ளது. இந்­நி­லையில், இவ்­
வ­ருடம் பெப்­ர­வ­ரியில் நடை­பெறும் மொபைல் வேர்ல்ட் கொங்­கிரஸ் (MWC) கண்­காட்­சி யில் உல­கி­லுள்ள மொபைல் நிறு­வ­னங்கள் தமது புதிய ஸ்மார்ட்­போன்­க­ளையும், தொழில்­நுட்­பங்­க­ளையும் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ளன.

 

ஸ்பெய்னில் நடை­பெறும்  MWC 2017 கண்­காட்­சியில் அண்ட்ரொய்ட் இயங்­கு­த­ளத்தில் இயங்கும் இரண்டு ஸ்மார்ட்­போன்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றது நொக்­கியா. அதில் என்­னென்ன சிறப்­பம்­சங்கள் இருக்கப் போகின்­றன என எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர் நொக்­கியா அபி­மா­னிகள்.

 

 

நொக்­கியா ஸ்மார்ட்­போன்­களில் எதிர்­பார்க்­கப்­படும் சிறப்­பம்­சங்கள்:


ஒரு மிட்ரேஞ்ச், ஒரு ஹைரேஞ்ச் என இரண்­டுமே ஸ்மார்ட்­போன்­களும் 4G-LTE  வச­தியை கொண்­டி­ருக்கும்.


5  அங்­குல  ஃபுல் எச்டி டிஸ்­பிளே, கொரில்லா கிளாஸ் பாது­காப்பு Snapdragon 430 பிரா­சசர், 2 ஜி.பி ரேம்,16 ஜி.பி இன்­டர்னல் மெமரி,13 மெகா­பிக்சல் பின்­பக்க கெமரா , 5 மெகா பிக்சல் முன்­புற கெமரா ஆகி­யவை மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்­போனில் எதிர்­பார்­க்கலாம்.


5.5 அங்­குல ஃபுல் எச்டி டிஸ்­பிளே, கொரில்லா கிளாஸ் பாது­காப்பு, 1.4 GHz Snapdragon 430 Processor,  32 ஜிபி இன்­டர்னல் மெமரி, ஃபிங்­கர்­பிரின்ட் சென்சார்,16 மெகா­பிக்சல் பின்­பக்க கேமரா, 8 மெகா பிக்சல் முன்­பக்க கெமரா ஆகிய வச­தி­களை ஹைரேஞ்ச் ஸ்மார்ட்­போனில் எதிர்­பார்க்­கலாம் எனக் கூறப்­ப­டு­கி­றது.


இதே­வேளை, சீனாவில்  TA-100-  என மொடல் பெயர்கொண்ட நோக்கியா ஸ்மார்ட் போன், சீனாவில் விற்பனை செய்யப்படுவதற்கு அவசியமான 3 சி (China Compulsory Certification)  எனும்  சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.