Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இலங்­கையில் இரண்­டா­வது தட­வை­யா­கவும் ‘பாகிஸ்தான் தனி நாட்டு வரு­டாந்தக் கண்­காட்சி’
2017-01-04 16:13:21

இலங்கை சந்­தையில் மதிப்­பு­மிக்க வணிக மற்றும் வர்த்­தக வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் முக­மாக பாகிஸ்தான் வர்த்­தக அபி­வி­ருத்தி அதி­கார சபை­யுடன் இணைந்து  இரண்­டா­வது தட­வை­யா­கவும் பாகிஸ்தான் தனி நாட்டுக் கண்­காட்­சியை (Pakistan single country exhibition) நடத்­த­வுள்­ள­தாக பாகிஸ்தான் உயர் ஸ்தானி­க­ரா­லயம் அறி­வித்­துள்­ளது.

 

எதிர்­வரும் 13 முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இந்தக் கண்­காட்சி நடை­பெ­ற­வுள்­ளது.

 

பாகிஸ்­தானின் பல வகை­யான பொருட்கள் மற்றும் சேவைகள் இக்­ கண்­காட்­சியில் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. பாகிஸ்­தானின் முன்­னணி தொழில் நிறு­வ­னங்கள் மற்றும் தொழில் முனை­வோரின் பங்­கு­பற்­ற­லுடன் இந் ­நி­கழ்வு நடை­பெ­ற­வுள்­ளது.

 

ஆடைகள், உண­வுகள், மருத்­துவ மற்றும் சத்­தி­ர­சி­கிச்சை உப­க­ர­ணங்கள், பொறி­யியல் பொருட்கள், வடி­வ­மைப்­புகள், இரத்­தினக் கற்கள் மற்றும் ஆப­ர­ணங்கள், தரை விரிப்­புகள், மார்பிள் பொருட்கள் உட்­பட பல வகை­யான தயா­ரிப்­புகள் இவ்­வாண்டு கண்­காட்­சியில் காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்­காக ஏற்­க­னவே தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

 

இந்­நி­கழ்­வா­னது இலங்­கையின் வேக­மாக வளர்ந்­து­வரும் நுகர்வோர் மத்­தியில் மிகப்­பெரும் ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன், இலங்­கையின் கூட்­டு­றவு நிறு­வ­னங்கள் மற்றும் தொழில் முனை­வோ­ருக்கு அளப்­ப­றிய வாய்ப்­பு­க­ளையும், தொடர்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கி­றது.

 

பாகிஸ்தான் தனி நாட்டுக் கண்­காட்சி முதல் தட­வை­யாக கடந்த ஆண்டில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் பாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரீப் உட்­பட இலங்கை மற்றும் பாகிஸ்­தானைச் சேர்ந்த உயர் அதி­கா­ரி­களும் கலந்து கொண்­டனர்.

 

இவ்­ வ­ருட கண்­காட்­சி­யா­னது நாட்டின் மிகப் பிரபலமான மற்றும் பெரியளவிலான வர்த்தக நாமங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் நடைபெறவுள்ளதுடன், வெற்றிகரமான மாபெரும் நிகழ்வாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.