Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
குளி­யா­ப்பிட்­டியில் வாகனம் பொருத்தும் தொழிற்­சாலை; ஜனா­தி­பதி, பிர­தமர் அடிக்கல் நாட்­டினர்
2017-01-05 16:42:45

(ரெ.கிறிஷ்­ணகாந்)


குரு­ணாகல் மாவட்­டத்தின் குளி­யாப்­பிட்டி லெபு­யாய மஹ­னு­க­வத்த பிர­தே­சத்தில் வொக்ஸ்­வேகன் (Volkswagen) நிறு­வ­னத்தின் வாக­னங்­களை பொருத்தும் தொழிற்­சாலை  ஒன்­றுக்­கான அடிக்கல் நாட்டு விழா நேற்­றுமுன் தினம் நடை­பெற்­றது.  

 

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்­டினர். அமைச்­சர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க, காமினி ஜய­விக்­ரம பெரேரா, எஸ்.பீ. நாவின்ன, அகில விராஜ் காரி­ய­வசம் மற்றும் வெஸ்டர்ன் ஒடோ­மொபைல் தனியார் நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் ரீசோ ரவூப் உள்­ளிட்ட பலர் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்­து­கொண்­டனர்.

 

“வெஸ்ட்டர்ன் ஒட்­டோ­மொபைல் அசெம்­பிளி பிளான்ட்” எனும் பெயரில் இத்­தொ­ழிற்­சாலை நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கி­றது. ஜேர்­ம­னிய நிறு­வ­ன­மான வொக்ஸ்­வேகன் குழும நிறு­வனம், வாகனத் தயா­ரிப்பில் உலகின் இரண்­டா­வது மிகப் பெரிய நிறு­வ­ன­மாக விளங்­கு­கின்­றமை  குறிப்பி­டத்­தக்­கது.

 

 

இலங்­கையில் செனொக் எனும் இலங்கை நிறு­வ­னத்­துடன் இணைந்து 26.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் இத்­தொ­ழிற்­சா­லையை நிர்­மா­ணிக்­கி­றது. வொக்ஸ்­வேகன் குழும நிறு­வ­ன­மா­னது, வொக்ஸ்­­வேகன் வாக­னங்கள் தவிர, மிகவும் பிர­சித்­த­மான  அவுடி, லெம்­போ­கினி, ரெனோல்ட் ஆகிய பிர­சித்­த­மான வர்த்­தக நாமத்தின் கீழும் வாக­னங்­களை உற்­பத்தி செய்து வரு­கின்­றது.

 

அத்­துடன் SEAT, SKODA, Bently, Bugatti, Ducatu, Scania, MAN ஆகிய வர்த்­தக நாமத்தின் கீழும் இந்­நி­று­வ­னத்­தினால் வாக­னங்கள் உற்­பத்தி செய்­யப்­பட்­டு­கின்­றன. உலகில் வாக­னங்­களின் உற்­பத்­திக்­கான மூலப்­பொ­ருட்­களை கொண்­டுள்ள நாடு­களில் தமது நிறு­வ­னத்தின் வாகன உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளையும் நிர்­மா­ணிப்­பதற்கும், மூலப்­பொ­ருட்­களை கொண்­டி­ராத ஆனால், விநி­யோ­கத்­திற்கு ஏது­வான வச­தி­களை கொண்­டுள்ள நாடு­களில் தமது நிறு­வ­னத்தின் வாகனப் பாகங்­களை கூட்­டி­ணைக்கும் மத்­திய நிலை­யங்­க­ளையும் வொக்ஸ்­­வேகன் நிறு­வனம் ஆரம்­பித்­துள்­ளது.

 

 

குளி­யாப்­பிட்­டியில் அமை­ய­வுள்ள இவ்­வா­கனப் பொருத்­துதல் தொழிற்­சா­லை­ நிறு­வ­னத்­தினால் இலங்­கை­யர்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் அதி­க­ள­வான தொழில்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு வாய்ப்பு அமை­யு­மென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

நேற்று முன்­தினம் அடிக்கல் நாட்­டப்­பட்ட இந்த தொழிற்­சா­லையின் நிர்­மாணப் பணிகள் 2019 ஆண்டின் நடுப்­ப­கு­தியில் நிறை­வ­டை­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இல ங்கை முத­லீட்டு சபையின் தலைவர் உபுல்' ஜய­சூ­ரிய மற்றும் செனொக் ஒடோ­மொபைல் நிறு­வ­னத்தின் இயக்­குநர் நொயல் செல்­வ­நா­யகம் ஆகி­யோ­ரி­டையே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மேற்­கொள்­ளப்­பட்ட முத­லீட்டு ஒப்­பந்­தத்தின் படி முதலில் இந்­நி­று­வ­னத்தில் 1000 சிசி மற்றும் 2000 சிசி வலு­வு­டைய கொண்ட  வாக­னங்கள் பொருத்­தப்­படும்.

 

 

முதல்  3 வரு­டங்­க­ளுக்கு இவ்­வ­கை­யான வாக­னங்­களை உள்­நாட்டில் மாத்­திரம் விநி­யோ­கிப்­ப­தற்கும் அதன்­பின்னர் சர்­வ­தேச சந்­தைக்கு வாக­னங்­களை விநி­யோ­கிப்­ப­தற்­காக வாக­னங்­களை ஏற்­று­மதி செய்­வ­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

 

அத்­துடன், சர்­வ­தேச சந்­தையில் டீசல், மின்­சாரம், ஹைபிரிட் ரக வாகனங்களுக்கு ஏற்படும் கேள்விக்கேற்ப ஏற்றுமதிகள் இடம்பெறவுள்ளன. இவ் வேலைத்திட்டத்தின் மூலமாக இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு கார் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் கார் உற்பத்தி தொடர்பான  பயிற்சியளிக்கப்படவுள்ளன.

 

அத்துடன், 300 நேரடி வேலைவாய்ப்புகளும் 10000 மறைமுகமான வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.