Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
FM வானொலி ஒலி­ப­ரப்­பு­க­ளை நிறுத்தும் திட்­டத்தை இவ்­ வா­ரத்தில் ஆரம்­பிக்­கி­றது நோர்வே
2017-01-09 17:16:19

நோர்வே தனது எவ்.எம். (பண்­பலை) வானொலி வலை­ய­மைப்­பு­களை நிறுத்தும் நட­வ­டிக்­கையை இவ் ­வாரம் ஆரம்­பிக்­க­வுள்­ளது. நவீன டிஜிட்டல் ஒலி­ப­ரப்பு முறை­மைக்கு மாறு­வதே இதன் நோக்­க­மாகும்.

 

FM வானொலி ஒலி­ப­ரப்­பை முடி­வுக்குக் கொண்­டு­வரும் உலகின் முத­லா­வது நாடு நோர்வே ஆகும். ஏனைய நாடுகள் இத்­ திட்­டத்தை உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

 

 

எவ்.எம். வானொலி ஒலி­ப­ரப்பை நிறுத்தும் அரசின் திட்­டத்­துக்கு நோர்­வேயின் கடு­மை­யான ஆட்­சே­பங்கள் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­ வி­ட­யத்தில் நோர்­வேயில், அர­சாங்கம் அவ­ச­ரப்­ப­டு­வ­தாக சிலர் விமர்சிக்­கின்­றனர்.

 

நோர்­வீ­ஜி­யர்­களில் 66 சத­வீ­த­மானோர் இத் ­திட்­டத்தை எதிர்க்­கின்­றனர் என அந்­நாட்டு பத்­தி­ரி­கை­யான “டக்­பி­ளடெட்” தெரி­வித்­துள்­ளது. 17 சத­வீ­த­மானோர் மாத்­திரம் இத் ­திட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர்.

 

ஏனையோர் தீர்­மானம் எதையும் மேற்­கொள்­ள­வில்லை. நோர்­வே­யி­லுள்ள 15 இலட்சம் எவ்.எம். வானொலிப் பெட்­டி­களை, நோர்வே அர­சி­யல்­வா­திகள் பய­னற்­ற­வை­யாக்­கு­கின்­றனர். இது மோச­மான ஒரு திட்­ட­மாகும் என டிஜிட்டல் ஊடக நிபு­ண­ரான ஜேன் தொரேசன்  மேற்­படி பத்­தி­ரி­கையில் எழு­தி­யி­ருந்தார்.

 

எனினும், டிஜிட்டல் ஒலி­ப­ரப்பு முறை­மையின் மூலம் கூடு­த­லான அலை­வ­ரி­சை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வாய்ப்பு கிடைக்கும் என்­ப­துடன், மேலும் தெளி­வான ஒலி­ப­ரப்­பையும் மேற்­கொள்ள முடியும் என நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.

 

நோர்­வேயில் முதற்­கட்­ட­மாக, வட பிராந்­திய நக­ரான போடோ­வி­லுள்ள எவ்.எம். வலை­ய­மைப்பு சேவை நாளை மறு­தினம் 11 ஆம் திகதி மூடப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­ வ­ருட இறு­திக்குள் நோர்­வேயின் அனைத்து எவ்.எம். ஒலி­ப­ரப்­பு­களும் நிறுத்­தப்­ப­ட­வுள்­ளன.

 

அந் ­நாட்டில் டிஜிட்டல் ஓடியோ ஒலி­ப­ரப்பு (Digital Audio Broadcasting -DAB)  முறை­மையை அமு­லாக்­கு­வதில் மிகப் பெரும் சவா­லாக வாக­னங்கள் அமையும் எனக் கூறப்­ப­டு­கி­றது.
அவ­ச­ர­கால அறி­விப்­புகள் வானொலி மூலம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

 

இந்­நி­லையில், வானொ­லி­களை பயன்­ப­டுத்தமுடி­யாதநிலை­மையில் மக்கள் சிர­மங்­களை எதிர்­நோக்க நேரிடும் என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. அங்­குள்ள சுமார் 20 இலட்சம் வாக­னங்­களில் டிஜிட்டல் ஓடியோ ஒலி­ப­ரப்பை பெறு­வ­தற்­கான ரிசீ­வர்கள் இல்லை.

 

இதற்­காக 1,500 குரோணர் (சுமார் 26,000 இலங்கை ரூபா) செலவில் அடொப்­டர்­களை வாங்­கு­மாறு பாவ­னை­யா­ளர்கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர். எவ்.எம். ஒலி­ப­ரப்­பி­லி­ருந்து டிஜிட்டல் ஒலி­ப­ரப்­புக்கு மாறும் திட்­ட­மா­னது நோர்­வேயில் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வதை பல நாடுகள் அவ­தா­னித்­துக்கு கொண்­டி­ருக்­கின்­றன.

 

சுவிட்­ஸர்­லாந்து, டென்மார்க், பிரிட்டன் ஆகி­ய நாடு­களும் இத் ­திட்­டத்தை அமுல்­ப­டுத்த உத்­தே­சித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. சுவிட்­ஸர்­லாந்தில் 2020 ஆம் ஆண்­டி­லி­ருந்து இத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.