Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
1960 : அமெரிக்க விமானத்தில் குண்டுவெடிப்பு; 34 பேர் பலி!
2017-01-06

வரலாற்றில் இன்று.....

டிசம்பர் - 06

 

1066 : இங்கிலாந்தின் மன்னராக ஹாரல்ட் கோட்வின்சன் முடிசூடிக் கொண்டார்.

 

1838 : சாமுவேல் மோர்ஸ் மின்னியல் தொலைத்தந்தியை முதன்முறையாக வெற்றிகரமாக சோதித்தார்.

 

1900 : தென் ஆபிரிக்காவின் லேடிஸ்மித் நகரை டச்சு வம்சாவளியினரான போவர்கள் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

 

1907 : மரியா மொண்ட்டிசோரி தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக தனது முதலாவது பாடசாலையை ரோமில் ஆரம்பித்தார்.

 

1912 : நியூ மெக்ஸிகோ 47ஆவது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

 

1928 : தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

 

1929 : அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.

 

1940 : போலாந்தின் பொஸ்னான் நகரில் நாசி ஜேர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.

 

1950 : மக்கள் சீன குடியரசை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

 

1953 : முதலாவது ஆசிய சோஷலிஸ மாநாடு பர்மாவில் ஆரம்பமாகியது. 

 

1959 : பிடெல் கெஸ்ட்ரோ, கியூபாவின் தலைநகர் ஹவானாவை அடைந்தார்.

 

1960 : ஈராக்கில் அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

 

1960 : அமெரிக்காவின் நியூயோர்க்கிலிருந்து புளோரிடா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானமொன்று குண்டுவெடிப்பால் தகர்க்கப்பட்டது. இதனால் 34 பேர் இறந்தனர்.

 

1992 : ஜோர்ஜியாவில் இராணுவப் புரட்சியின் காரணமாக ஜனாபதிதி ஸேவியட் கம்சாகுரிடியா நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். 

 

1994 : அமெரிக்க பிகர் ஸ்கேட்டிங் நட்சத்திரமான நான்சி கேரிகன், அமெரிக்க பிகர் ஸ்கேட்டிங் சம்பியன்ஷிப் போட்டியின்போது தாக்கப்பட்டு அவரின் முழங்கால் சேதமாக்கப்பட்டது. அவர் மீது பொறாமை கொண்ட சக போட்டியாளர் ஒருவரின் ஏற்பாட்டில் இத்தாக்குதல் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.

 

2005 : அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட மூவர் 1964 ஆம் ஆண்டு கொல்லப்பட்டமை தொடர்பாக எட்கார் ரே கிலென் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைதானார். 

 

2007 : இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.

 

2009 : பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.