Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தாஜ்­ம­ஹாலின் அலங்­கார வேலைப்­பா­டு ­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட கல்­கி­ரி­யா­கம- நாமல் உய­னவின் இளம் சிவப்பு திரு­வனா கற்­பா­றைகள்
2016-04-24 14:11:49

–  கலா­வெவ நபீஸ்தீன்  –
 

இயற்­கையை  உச்சக் கட்­ட­மாக அனு­ப­விக்க வேண்­டு­மானால் எமது தெரிவு அநே­க­மாக இயற்கை பூங்­கா­வா­கவே இருக்கும். அதே போல் குறிப்­பாக தொல்­பொருள் ஆய்­வா­ளர்­களின் தெரி­வாக அநு­ரா­த­புரம் மற்றும் பொலன்­ன­று­வையில் அமைந்­துள்ள வர­லாற்றுச் சுவ­டு
­க­ளாக இருக்கும். 

 

 

அனைத்து புவி­யியல் மாற்­றங்­க­ளையும் ஒருங்கே கொண்ட இடம் ஒரு புவி­யியல் ஆய்­வா­ள­ருக்கு பூமியின் அமை­வு­களை கற்றுக் கொள்­வ­தற்­கான சிறந்த இட­மாக அமையும். 

 

இது போன்ற சூழ­லியல் தொல்­பொ­ரு­ளியல் மற்றும் புவி­யியல் ரீதி­யான சிறப்பு பெற்ற ஒரே இடத்தை எங்­கே­யா­வது காண­மு­டி­யு­மாக இருந்தால் அது தேசிய நாமல் உயன என்ற இடத்­தி­லேயே முடியும்.   

 

 

யாழ்­பாணம் – கண்டி பிர­தான வீதி­யான  ஏ 9 வீதியில் தம்­புள்ள நக­ருக்கு அடுத்­த­தாக காணப்­படும் மடாட்­டு­கம நக­ரி­லி­ருந்து ஏழு கிலோ­மீற்றர் தூரத்தில் தேசிய நாமல் உயன என்று வன­பூங்கா அமைந்­துள்­ளது.  

 

உள்ளூர் மற்றும் வெளி­நாட்டு உல்­லாச பிர­யா­ணி­களை மிகவும் கவர்ந்த இட­மாகப் கரு­தப்­படும் உலக பிர­சித்­தி­பெற்ற சீகி­ரிய சுவ­ரோ­வியம், தங்க விகாரை என அழைக்­கப்­படும் கூரை ஓவி­யங்­க­ளுக்கு புகழ் பெற்ற தம்­புள்ள விகாரை, வர­லாற்று பிர­சித்­தி ­பெற்ற அவுக்­கன புத்தர் சிலை, இப்­பங்­க­டுவ மற்றும் கலா­வெவ குளங்கள் நாமல் உய­னவை அண்­மித்த சூழ­லி­லேயே அமைந்­துள்­ளன.   

 

நாமல் உய­ன­வி­லுள்ள இளம் சிவப்பு திரு­வனா கற்­பாறை இயற்கைப் படி­மங்­களைக் கொண்ட ஒரு தேசிய சொத்­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது. தேசிய நாமல் உயன அநு­ரா­த­புர மாவட்­டத்தில் கல்­கி­ரி­யா­கம உள்­பொ­த­கம என்ற பிர­தே­சத்தில் உள்­ளது. 

 

தேசிய உரி­மை­யாக விளங்கும் தேசிய  நாமல் உய­னவின் தேசிய தன்மை, சமய ரீதியில் உள்ள தொடர்பு,  அதன் சுற்றுச் சூழல், புவி­யியல் அமை­விடம், வர­லாறு மற்றும் கல்வி மதிப்­பீடு தொடர்­பான பல்­வேறு அம்­சங்கள் உல்­லாச பிர­யா­ணி­களை கவர்ந்­த­மைக்­கான முக்­கிய கார­ணி­யாகும்.  

 

சூழ­லியல்  புவி­யியல் மற்றும் வர­லாற்று புகழ் பெற்ற தொல்­பொ­ரு­ளியல் அம்­சங்­களை ஒரே இடத்தில் காணக்­கூ­டி­ய­தாக இருப்­பது தேசிய  நாமல் உய­னவின் முக்­கிய அம்­ச­மாகும்.  

 

தேசிய மர­மாக கரு­தப்­படும் நாக­ம­ரங்கள் மிக பாரிய அளவில் காணப்­படும் தேசிய வனப்­பூங்கா மற்றும் இளம் சிவப்பு திரு­வ­னாக்­கற்­பாறை என்­பன இரண்­டா­யிரம் ஏக்­க­ருக்கு மேல் பரப்­ப­ளவு கொண்­டது.

 

 

இவ் வனப்­ப­குதி 2005 ஆம் ஆண்டு பாது­காக்­கப்­பட்ட வனப்­ப­கு­தி­யாக அர­சாங்­கத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

 

18 வகை­யான பறவை இனங்கள் 72 வகை­யான மூலி­கைகள் மூன்று சிறிய இயற்கை நீர் வீழ்ச்­சிகள் மற்றும் ஏரா­ள­மான மான் இனங்கள் யானைகள், முயல் மற்றும் பல வகை­யான  மிரு­கங்­க­களை தன்­ன­கத்தே கொண்ட தேசிய நாமல் உயன எந்த பருவ காலத்­திலும் பசு­மை­யா­ன­தா­கவே காட்­சி­ய­ளிக்கும்.  

 

அடுத்த முக்­கிய அம்­ச­மான இளம் சிவப்பு திரு­வனா  கற்­பாறை . இது 550 மில்­லியன் வரு­டங்­க­ளுக்கு முன் பழைமை வாய்ந்­ததென புவி சரி­த­வி­ய­லா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

 

எமது நாட்­டுக்­கு­ரிய இயற்­கையின் அருட்­கொ­டை­யான இப் பளிங்கு கற்­பா­றை­ய­னது தெற்­கா­சி­யா­விலே மிகப்­பெ­ரிய இளம் சிவப்பு பளிங்கு  கற்­பா­றை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. 

 

உலகப் பிர­சித்தி பெற்ற தாஜ்­ம­ஹாலின்  அலங்­கார வேலைப்­பா­டு­களுக்கு மன் னன் சாஜகான் இங்­கி­ருந்து இளம் சிவப்பு  கற்­பா­றை­யி­லி­ருந்து இளம் சிவப்பு திரு­வானக் கற்கள் கொண்டு சென்­ற­தாக இங்­குள்ள வர­லாற்று தக­வல்கள்  தெரி­விக்­கின்­றன. 

 

அநு­ரா­த­புர இராச்­சி­யத்தின் மன்னன் தேவ­நம்­பிய தீசன் காலம் (மூன் றாம் நூற்­றாண்டு) தொடக்கம் எட்டாம் நூற்­றாண்டு காலத்தை சேர் ந்த நான்காம் தப்­புல மன்னன் வரை நாக­மர வனப் பிர­தேசம் பல்­வேறு நம் நாட்டு மன்­னர்­க­ளினால் போசிக்­கப்­பட்டு வந்­த­தா­கவும் வர­லாற்று தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன.

 

எட்டாம் நூற்­றாண்டில் ஆட்சி செய்த நான்காம் தப்­புல மன்­னனால் இவ் வனத்தில் நாக மரங்கள் நடப்­பட்­ட­தா­கவும் வர­லாற்றில் குறிப்­பிடப்படு­வ­தற்கு இணங்க மனி­தர்­களால் உரு­வாக்­கப்­பட்ட காடு­களில் இதுவே மிக பழ­மை­யா­ன­தாகும். 

 

இது மட்­டு­மல்ல உலர் வல­யத்தில் அமைந்­துள்ள வன்­ப­லகை தரும் தாவ­ர­மாக நாக­மரம் அறி­யப்­பட்­டுள்­ளது. நாக­மர பலகை மிக உறு­தி­யா­னதும் நிறை கூடி­யதும் உறு­தி­யா­னதுமாகும்.

 

தேவ­நம்­பிய தீசன் காலத்தில் கட்­டப்­பட்­ட­தாக கூறப்­படும் பல்­வேறு  கட்­டட இடி­பா­டுகள் மற்றும் பல்­வேறு புரா­தன அம்­சங்­களை இன்றும் இங்கு காணலாம்.

 

இப் ­ப­குதி சில மன்­னர்­களின் அபய பூமியாகவும் தியானம் செய்­யப்­பட்ட பகு­தி­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்­கான சான்­றுகள் இங்கே காணப்­ப­டு­கின்­றன.

 

இலங்கையின் பண்­டைய மடா­லயம் மற்றும் அரண்­மனை இடி­பா­டு­களில் கூடிய தொல்­பொருள் இருப்பு பல்­வேறு காட்டு வாழ்க்கை அம்­சங்கள் காணப்­ப­டு­கின்­றன. 

 

 

ஒரு காலத்தில் நாக­மர வன பிர­தேசம் சேனை பயிர் செய்­கை­யா­ளர்­க­ளி­னதும் மிருக வேட்­டை­யா­ளர்­க­ளி­னதும் மர கடத்தல் காரர்­க­ளி­னதும் புதையல் தோண்­டு­ப­வர்­க­ளி­னதும் ஆக்­கி­ர­மிப்­புக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வதை தடுத்து இதனை ஒரு தேசிய வன­மாக பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற எண்­ணத்­தோடு தனது முழு வாழ்­நா­ளையும் இதற்­கென அர்­ப்ப­ணித்து, முழு மூச்­சாக நின்று நமது நாட்டு தேசிய சொத்­தாக இதனை பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் பாதுகாத்த  பெரு மை பெளத்த துற­வி­யான  வண. வனா­வாசி ராஹுல தேரரையே சாரும்.

 

1991 ஆம் ஆண்டு வன­வாசி ராஹுல தேரர் மோரா மரம் என்ற நாற்­பது அடி உய­ர­மான மர­தத்தின் உச்­சியில் சிறிய ஒரு கொட்டில் போன்ற ஆச்­சி­ர­மத்தை அமைத்து அதன் மேல் வாழ்ந்து இந்த வனப் பகு­தியை பாது­காக்கும் முயற்­சியை ஆரம்­பித்தார். 

 

தற்­போது  ஒரு சமூக சுற்­றுச்­சூழல் மற்றும் ஆராய்ச்சி மையம் உரு­வாகி வரும் தேசிய நாமல் உயன ஆயி­ரக்­க­ணக்­கான வெளி­நாட்டு உள்­நாட்டு உல்­லாச பிர­யா­ணி­களின் மனங்­களை வென்ற ஒரு இட­மாக திகழ்ந்து வரு­கி­றது. 

 

 

பல வருட கால­மாக பாது­காத்து வந்த  தேசிய நாமல் உய­னவின் நிரந்­தர சொத்­துக்கள் அனைத்­தையும் தாம் இல்­லாத காலத்தில்   ஜனா­தி­பதி தேசிய சிறு­நீ­ரக நிதி­யத்­திற்கு வழங்க வன­வாசி ராஹுல தேரர் தீர்­மா­னித்­துள்­ளாக தெரி­வித்­துள்ளார்.

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
v.kumudaran2016-08-05 15:13:15
very nice and all the best to metro.
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.