Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்பட கதாநாயகியான நடிகை ஜெயகெளரி; சினிமா நடிப்புக்கு முழுக்கு போட வைத்த பயங்கர அனுபவம்
2016-05-08 19:52:59

-சிலாபம் திண்­ண­னூரான்-

 

பல்­வேறு வகை­யி­லான பின்­ன­ணி­யையும் மனிதத் தன்மை, பண்பு, நாக­ரிகம் இவற்­றுடன் வாழும் மனி­தர்கள் நம்­மி­டை­யேதான் வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

 

எனவே, அவர்­களின் கதை­களும் நமக்கு முக்­கி­ய­மாகப் போகின்­றன. இந்தக் கார­ணங்­களை பின்­பு­ல­மாகக் கொண்ட பலரை எமது வாச­கர்­கள் முன் நிறுத்­தி­யுள்ளோம்.

 

 

பெரும் சிறப்­புக்­களைக் கொண்ட நம்­நாட்டு நடிகை ஜெய­கௌ­ரியின் கதையை இவ்­வாரம் கேளுங்கள். இலங்கை தமிழ் சினிமா வர­லாற்றில் முதல் தமிழ்த் திரைப்­படக் கதா­நா­ய­கி­யாக முத்­திரை பதித்­தவர் ஜெய­கௌரி.  1962 ஆம் ஆண்டு வெளி­வந்த இந்­நாட்டின் முதல் தமிழ் பட­மான ‘சமு­தாயம்’ படத்தின் கதா­நா­ய­கி இவர்.

 

நிதா­னித்துப் பார்க்­கக்­கூ­டிய வசீ­கரம், மாசு மறு­வில்­லாத அழகு, இவ்­வா­றான நிலையில் ஒரு காலத்தில் இந்­நாட்டின் இளை­ஞர்­களை தன் அட்­ட­கா­ச­மான நடிப்பின் மூல­மாக கட்டிப் போட்­டவர் இவர்.

 

ஜெய­கௌ­ரியின் அழகு மட்­டு­மல்ல நடிப்பும் ரசி­கர்­களின் மனங்­களை கொள்ளை கொண்­டி­ருந்­தது.

 

அவரைத் தேடி கொழும்பு – 11, ஆண்­டிவால் தெருவில் நுழைந்து வீட்டை கண்டு கொண்­டதும் அதிர்ச்சி அடைந்தோம்.

 

ஒரு காலத்தில் பெரும் புக­ழுடன் பல இளை­ஞர்­களின் கனவுக் கன்­னி­யாகத் திகழ்ந்த இந் நாட்டின் முதல் தமிழ் படத்தின் கதா­நா­ய­கி­யாக நடித்து வர­லாற்று புகழ் கொண்ட நடிகை ஜெய கௌரி வசிக்கும் வீடா என முதலில் அதிர்ந்து போனோம்.

 

“இதுதான் எனது பங்­களா” என எமக்கு அவர் தெரி­வித்த போது அவ­ரது விழி­களில் கண்ணீர் தேங்­கின. அதுவொரு இரு அறை­களைக் கொண்ட சின்­னஞ்­சிறு வீடு.

 

அதன் ஒரு அறையை வாட­கைக்கு பெற்று ஜெய கௌரியும் அவரின் தங்கை ப்ரியா ஜெயந்­தியும் வாழ்க்­கையை துய­ரத்­தோடு கடத்­து­கின்­றனர் என்ற தகவல் எம்மை அதி­ர­வைத்­தது.

 

அந்த அறைக்குள் அங்கும் இங்கும் தட்­டு­முட்டுப் பொருட்கள் பர­விக்­கி­டந்­தன. படுக்கை அறையும் சமை­ய­ல­றையும் இதே அறைதான்.  

 

 

 

ஜெய கௌரிக்கு தன் நடிப்பு உழைப்பால் கிடைக்­கப்­பெற்ற பல்­வேறு விரு­துகள் கேட்பார், பார்ப்பார் இன்றி அங்­கு­மிங்கும் சிதறிக் கிடந்­தன.

 

“நான் இது­வரை பதி­னான்கு வீடு­களில் மாறி, மாறி வாழ்ந்து விட்டேன். “நான் உங்­களைத் திக்­கற்­ற­வர்­க­ளாக விடேன். உங்­க­ளி­டத்தில் வருவேன்” என கர்த்தர் தெரி­வித்த வேத வச­னத்தை அடிக்­கடி மனதில் கூறிக் கொள்வேன். அதனால் மனதில் நிம்­மதி கிடைக்­கின்­றது” என்றார். 

 

“நடிப்­பு­லகில் எவ்­வாறு கால் பதித்­தீர்கள்?” என்ற கேள்­வியை கேட்டோம்.

 

“கொழும்பு தொண்டர் பாட­சா­லையில் கல்வி கற்றேன். அங்கு கல்வி கற்கும் தரு­ணத்தில் எனது ஒன்­பது வயதில் இரா­மா­யணம் என்ற நாட­கத்தில் இரா­ம­ராக வேட­மேற்று நடித்தேன்.

 

எனது நடிப்­புத்­து­றைக்­கான குரு எனது வித்­தி­யா­லய ஆசி­ரியர் அண்­ணா­வியார் அண்­ணாச்சி மாஸ்­ட­ராவார். பின்னர் கவின் கலை மன்­றத்தில் நடிக்கத் தொடங்­கினேன்.

 

எனது பதின்­மூன்று வயதில் இந்­நாட்டின் முதல் தமிழ் சினி­மா­வான சமு­தாயம் படத்தில் கதா­நா­ய­கி­யாக நடித்து வர­லாறு படைத்தேன் என சொல்லி கண் சிவந்தார் ஜெய கௌரி.

 

அக்­கா­லத்தில் என் அப்பா நாட­கங்­களில்  நடித்­தவர். எனது தாத்தா கேர­ளாவில் சோட்­டுக்­களி எனும் சண்டைப் பயிற்சி ஆசி­ரி­ய­ராவார். இவ்­வா­றான கலைப் பின்­பு­லத்தைக் கொண்ட, மலை­யாள வம்­சா­வ­ளியைச் சேர்ந்­தவள் நான்.

 

இது­வரை சுமார் அறு­நூ­றுக்கும் மேற்­பட்ட நாட­கங்­களில் நடித்­துள்ளேன். அண்­மையில் இலங்கை அரசு அதன் உயர் விரு­தான ‘நாடக கீர்த்தி விருதை’ எனக்கு வழங்கி கௌர­வித்­தது.

 

1988 இல் திரு­மணம் முடித்தேன். அதுவும் பஸ் வண்டி பய­ணத்தில் ஆரம்­பித்த காதலால் உரு­வான திரு­மணம். யார் கண்­பட்­டதோ தெரி­ய­வில்லை. பதி­னாறு வரு­டங்­க­ளுக்கு முன் அவரும் கால­மானார். 

 

பல வகை­யிலும் தோல்­வியைத் தழுவிக் கொண்டு இருக்கும் எனக்கு ஒரே துணை எனது தங்கை ப்ரியா ஜெயந்தி மட்­டுமே. அவளும் அக்­கா­லத்தில் பிர­பல நாடக நடிகை. சிறந்த நடிப்­புக்­காக பல விரு­து­களை சுவீ­க­ரித்­தவள், நடிக்க இன்று வாய்ப்­புக்கள் இல்லை. வாழ வேண்டும் வீட்டுக் கூலி செலுத்த வேண்டும். இதற்­காக அச்­சகம் ஒன்றில் சொற்ப சம்­ப­ளத்தில் தொழில் புரி­கிறாள்.

 

நாங்கள் இரு­வரும் தான் இந்த சின்­னஞ்­சிறு அறைக்குள் முடங்கி வாழ்­கின்றோம். இதுதான் எனது உலகம். பலரை சிரிக்க வைத்து, அழ­வைத்து, சிந்­திக்க வைத்த நாங்கள் இன்று சொந்த வீடு இல்­லாது தவிக்­கிறோம். 

 

மன நிம்­ம­தியைத் தேடி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் நார­ஹேன்­பிட்ட அசெம்­
பளி ஒப் கோர்ட் தேவா­லயம் சென்று பிரார்த்­த­னையில் ஈடு­ப­டுவேன்.

 

எல்லாம் வல்ல தேவன் இவ்­வ­ளவு சிர­ம­மான வாழ்க்கை ஓட்­டத்­துக்கு மத்­தியில் ஒரு நாளும் எங்கள் இரு­வ­ரையும் பட்­டினி போட்­ட­தில்லை” என்­ற­போது தன் கண்­களை தயக்­கமாய் நிறுத்­தினார்.

 

“கலை­ஞர்கள் அதுவும் பெண்கள் நடி­கை­க­ளாக சினி­மாவில் கால் பதிப்­பது தீக்குள் விரலை திணிப்­பது போன்­ற­தாகும்.

 

நாட­கங்கள் இரண்டு அல்­லது மூன்று மணித்­தி­யா­ல­யங்­களில் நிறை­வ­டைந்து விடும். நாடக உலகம் வேறு.

 

சினிமா உலகம் பெரும் வித்­தி­யா­சத்தைக் கொண்­டது. சினிமா உலகில் பல முட்கள் வாழ்­கின்­றன” என திடீ­ரென ஆவே­ச­மாக ஜெய­கௌரி தெரி­வித்­ததும் நாம் பர­ப­ரப்­ப­டைந்தோம்.

 

“ஏன் திடீ­ரென சினிமா உலகை விமர்­சனம் செய்­கி­றீர்கள்? எனக் கேட்டோம். 
“எனக்கு தமிழ் சினி­மாவில் ஆழ­மாக காலூன்ற வாய்ப்­புக்கள் கிடைத்தன. நான் நடிக்க இணங்­கிய எனது இரண்­டா­வது படம் குத்துவிளக்கு.

 

அப்­போது நான் யாழ். நகரில் நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டு இருந்தேன். என்னைத் தேடி இரு பிர­ப­லங்கள் எனது வீட்­டுக்கு வருகைத் தந்­துள்­ளனர்.

 

குத்து விளக்கு படம் விட­ய­மான விப­ரங்­களை தெரி­விக்க, எனது பெற்­றோரும் இவ்­வி­ருவர் மீதும் நம்­பிக்கை கொண்டு சம்மதம் தெரி­வித்து விட்­டனர். பின்னர் இரு­வரும் யாழ். நக­ருக்கு என்னைத் தேடி வந்­தனர்.

 

கொழும்பில் எனது பெற்­றோ­ருடன் இடம்­பெற்ற கலந்­து­ரை­யாடல் பற்­றிய விப­ரத்தை தெரி­விக்க நானும் ‘குத்துவிளக்கு’ படத்தில் நடிப்­ப­தற்கு சம்­மதம் தெரி­வித்தேன்.


குத்துவிளக்கு திரைப்படத்­திற்­கான படப்­பி­டிப்­பு­களின் ஒரு பகுதி பருத்­தித்­துறை பிர­தே­சத்தின் ஒரு பண்ணை வீட்டில் இடம்­பெற ஏற்­பா­டாகி இருந்­தது. 

 

அவ்­வீடு பெரும் நிலப்­ப­ரப்பை ஆக்­கி­ர­மித்துக் கொண்ட விசா­ல­மான வீடு. பெரிய உய­ரத்தை கொண்ட சுற்று மதில். அவ்­வீட்­டுக்குள் எந்­த­வொரு சம்­பவம் இடம்­பெற்­றாலும் வெளி­யா­ருக்குத் தெரி­யாத வகையில் வீட்டின் கட்­ட­மைப்பு இருந்­தது. 

 

நாடகம் முடிந்து நானும்  அவ்­வீட்­டுக்குச் சென்றேன்.  விசா­ல­மான கேட்டை காவ­லாளி திறக்க, நான் உள்ளே எனது கால்­களை பதிக்­கையில் எனக்குள் ஒரு வித அச்ச உணர்வு பிறந்­தது. 

 

எனினும், இத்­திரைப் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு விடுத்த எனது குடும்ப நண்­பரும், இந் நாட்டின் பிர­பல கவி­ஞரும், எழுத்­தா­ள­ரு­மா­ன­ இரு­வரும் இவ்­வீட்­டுக்குள் இருந்­ததால் அடி­ம­னதில் எழுந்த பயமும், அச்­சமும் என்னை விட்டு வில­கி­ன.

 

வீட்­டுக்குள் நுழைந்­ததும் மனதில் ஒரு வித சந்­தோஷம் பர­வி­யது. ஆமாம் அங்கு சிங்­கள திரைப்­பட நடி­கை­யான சந்­தி­ர­லே­காவும் அவரின் கண­வரும் அங்கு இருப்­பதைக் கண்­டதும் எனது பழைய அச்­சமும் பயமும் என்­னை­விட்டு நீங்­கி­ன. இதனால் அன்­றைய தினம் இரவு அங்கு தங்­கு­வ­தற்கு சம்­மதம் தெரி­வித்தேன்.

 

இரவு நான் தங்­கி­யி­ருந்த அறையின் மின் விளக்­கையும் அணைத்து, கட்­டிலில் உச்ச உறக்­கத்தில் இருந்த நேரம் அது.

 

அந்த நேரத்தில் எனது உடலின் மீது ஏதோ பார­மான பொருள் கிடப்­பது போன்ற உணர்வு எழ அந்த கும்­மி­ருட்டில் கண் விழித்துக் கொண்டேன்.

 

இருட்டில் சுற்­றி­வர பயத்­துடன் என் பார்­வையை செலுத்த என் கால்­களை ஒருவன் அழுத்திக் பிடித்துக் கொண்­டி­ருக்க மற்­றொ­ருவன் அரு­கி­லி­ருந்தான்.

 

எனது முழு சக்­தி­யையும் கொண்டு அவ் இரு­வ­ரையும் தள்­ளி­விட்டு நான் பெரிய சத்தம் எழுப்ப இரு­வரும் ஓசைப் படாமல் ஓடி விட்­டனர். எனது சத்­தத்தால் அவர்­களின் சலன புத்தித் திட்டம் தோல்­வியில் முடிந்­தது. 

 

அரு­கி­லி­ருந்த அறையில் நித்­தி­ரையில் இருந்த நடிகை சந்­தி­ர­லே­காவும் அவரின் கண­வரும் எனது கூக்­குரல் கேட்டு எனது அறைக்கு வந்து சேர்ந்­தனர்.

 

ஹோலில் எரிந்து கொண்டு இருந்த மின் வெளிச்­சத்தில் அந்த இரு­வ­ரையும் அடை­யாளம் தெரிந்து வியப்­ப­டைந்தேன். அந்த ஓநாய்கள் இரு­வ­ருமே என்னை குத்­து­வி­ளக்கு திரைப்­ப­டத்தில் நடிக்க எனது அப்பா, அம்­மா­விடம் அனு­மதிப் பெற்ற பிர­மு­கர்கள்.

 

இவ்­வா­றான மனித மிரு­கங்­களும் சினிமா உலகில் வாழ்த்தான் செய்­கின்­றார்கள். இவர்கள் சினி­மாவை அடை­யா­ளப்­ப­டுத்தி பலரின் வாழ்க்­கையை சீர­ழித்து இருக்­கலாம்.... என ஜெய­கௌ­ரிக்குள் எழுந்து வந்த கசப்­பான சம்­ப­வத்தை எவ்­வித ஒழிவும் மறைவும் இன்றி தெரி­வித்த பின்னர், அவ­ருக்குள் எழுந்து வந்த கோபத்தை உள்­ளேயே அடக்கிக் கொண்டு சற்று மௌன­மானார்.

 

சிறிது நேரத்­தின்பின் மீண்டும் பேச ஆரம்­பத்தார். “பலர் தங்­களின் நடிப்பு வாழ்க்­கையை வள­மாக்கிக் கொள்ள இவ்­வா­றான மூடர்­க­ளிடம் சிக்கி இருக்­கலாம். என்­னிடம் அதெல்லாம் செல்­லாது. நான் அப்­பேர்ப்­பட்­ட­வளும் அல்ல.

 

சினிமா ஒரு கலை. அந்த கலைக்குள்  வாழ வேண்டும். எவ்­வ­ளவு பெரும் நெருக்­க­டி­யிலும் எவள் தன் நிதா­னத்­தையும் கண்­ணி­யத்­தையும் நழுவ விடாமல் நடந்து கொள்­வாளோ அவளே வாழ்க்­கையில் நல்­ல­வ­ளாக விளங்­குவாள்” என தெரி­வித்தார் ஜெய­கௌரி.

 

 

அவரின் பேச்சை இடை­ம­றித்து, “குத்­து­வி­ளக்கு” படத்தில் நீங்கள் நடிக்­கா­மைக்கு இச்­சம்­ப­வமா காரணம் என கேட்டோம்.
“ஆமாம்! எனது சினிமா நடிப்பு கனவை கலைத்­த­வர்­களே அந்த ஓநாய்­களே. இச் சம்­பவம் இடம்­பெற்ற மறு­தினம் காலை யாழி­லி­ருந்து ரயி­லேறி கொழும்பு வந்து சேர்ந்தேன்.

 

என்னைக் கண்­டதும் முழு குடும்­பமும் திடுக்­கிட்­டது. முதல் நாள் யாழில் இடம்­பெற்ற சம்­ப­வத்தை நான் தெரி­விக்க அவர்­களும் ஆடிப்போய் விட்­டனர். 

 

“சினிமா நடிப்பு வேண்டாம். நாட­கத்­தோடு நடிப்பை நிறுத்­திக்கொள் என அனை­வரும் ஆலோ­சனை கூற எனது சினிமா நடிப்பு ஆசையும் மௌனித்து விட்­டது.

 

இவ்­வாறு தான் என் வாழ்வில் மாற்­றங்கள் ஏற்­பட்­டன” என சொல்­லிய ஜெய­கௌ­ரியின் முகத்தைப் பார்த்தோம். அழு­கையை சிர­மப்­பட்டு அடக்கிக் கொண்டார்.

 

இன்று சொந்த முக­வரி இல்­லாது நாடோ­டி­யாக வாழ்­கின்றேன். ஆனாலும் அங்கும் இங்கும் வீடு மாறி மாறி வாழ்ந்­தாலும், எனக்குள் என்­றா­வது எனக்கு வீடு கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் வாழ்­கின்றேன்.

 

அண்­மையில் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்டு சிறு நீரக பாதிப்­புக்கு உள்­ளானேன். நான் வணங்கும் ஆண்டவரின் துணையால் மறுவாழ்வு கிடைக்கப் பெற்றேன் என்றார் மெல்லிய குரலில்.

 

தமிழ் கலைஞர்கள் அனைவரும் இணைந்தால் வீடு உள்ளிட்ட எமது தேவைகளை அரசிடமிருந்து பெறலாம். இவ்வாறு அனைவரும் இணைந்து செயல்பட இயலாமை வருந்தத்தக்கதாகும்” என்றார்.

 

இவ்வாறான ஒரு பிரபல நடிகையிடம் வரலாறு உள்ளதை நாம் தெரிந்து கொண்டதும் எம்மையும் துக்கம் உலுக்கியது. கையை மார்பில் கட்டிக் கொண்டு பேசிய ஜெயகௌரியின் பேச்சு எம்மால் என்றுமே மறக்க இயலாது.

 

கலக்கத்துடன் ஒரு வரலாற்று நாயகியுடன் கதைத்தோம் என்ற பெருமையுடன் அவரிடமிருந்து விடைபெற்று வீதிக்குள் இறங்கினோம்.

 

மீண்டும் மெல்லத் திரும்பி ஜெயகௌரியின் அந்த சின்னஞ்சிறு அறையைப் பார்த்தோம். ஒரு கணம் எங்கள் கண்களிலும் கண்ணீர் கசிந்தது.

(படப்பிடிப்பு: கே.பி.பி.புஷ்பராஜா)

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.