Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
சேலைகளால் மாத்திரம் அமைக்கப்படும் 'அம்மன் தேர்'
2016-05-08 22:26:05

(பா.திரு­ஞானம்)

 

லிந்­துலை சென்­றெ­குலர்ஸ் தோட்­டத்­தி­லுள்ள ஸ்ரீ முத்து மாரி­யம்மன் ஆல­யத்­தின வரு­டாந்த தேர் திரு­வி­ழா­வுக்­காக முற்­றிலும் சேலை­களால் தேர் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வது வழக்­க­மாகும்.

 

மலை­யக தோட்ட மக்­களின் வாழ்வில் ஆன்­மீக வாழ்வு ஒரு வித்­தி­யா­ச­மா­ன­தாகும்.

 

இலங்­கைக்கு சுமார் 150 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தென்­னிந்­தி­யாவிலிருந்து இரா­மேஸ்­வரம் வந்து மன்னார் வழி­யாக மலை­யக பகு­தி­க­ளுக்கு நடந்து வந்­தனர் தொழி­லாளர் மக்கள்.

 

வரும்வழியில் சில­ருக்கு அம்மை நோய் ஏற்­பட்­டுள்­ளது.

 

அச்­ சந்­தர்ப்­பத்தில் காடு­களினிடையே அம்­மனை வழி­பட்டு தங்கள் பய­ணங்­களைத் தொடர்ந்­தனர்.

 

சில­ருக்கு வருத்தம் அதி­க­ரித்தால் இடையே விட்­டு­விட்டு வந்து விடு­வார்­களாம்.

 

அம்­மனின் மேல் அவர்கள் வைத்த நம்­பிக்­கையால் அம்மை நோய் குண­மாகி பின்னே வரும் கூட்­டத்­துடன் மலை­ய­கத்­திற்­கான பய­ணத்தை தொடர்ந்­துள்­ளனர். 

 

அவ்­வா­றான நிலையில் மாத்­த­ளையில் உள்ள அம்மன் கோயில் உரு­வாகக் கார­ண­மாக இருந்­துள்­ளது.

 

மன்னார் வழி­யாக தம்­புள்ளை, மாத்­தளை வந்­த­டைந்து மக்கள் தங்கியிருந்த இடமே மாத்­தளை கோயில். 

 

அப்­போது அங்கு மரத்தினடியில் அம்­மனை வைத்து வழிப்­பட்­டனர். அந்த மரம் தற்­போதும் மாத்­தளை ஆல­யத்தில் பாது­காக்­கப்­பட்டு வரு­கி­றது.

 

இங்கு அம்மன் வழி­பாட்­டிலும் மலை­யக மக்­களின் வாழி­வி­ய­லிலும் பாரிய தொடர்பு காணப்­ப­டு­கி­றது.

 

அத­னா­லயே தோட்­டங்கள் தோறும் அம்மன் ஆல­யங்­கள் காணப்­ப­டு­கின்­றன. 

 

அம்­மனின் அவ­தா­ரங்கள் 1008. இந்த அவ­தா­ரங்­க­ளுக்­கான பக்­தர்­களின் வழி­பாட்டு முறை­க­ளிலும் வித்­தி­யா­சங்கள் காணப்­ப­டு­கி­ன்றன.

 

இதில் பத்­தி­ர­காளி அம்மன் வழி­பாடு அனை­வ­ரையும் ஒரு கணம் மெய்­ சி­லிர்க்க வைக்­கக்­கூ­டி­யது.

 

சிலர் இத்­ தெய்­வத்­திற்கு கோழி, ஆடு போன்ற மிரு­கங்­களை பலி கொடுக்­கின்­றனர்.  இவ்­வா­றான செயற்­பா­டுகள் இன்று மலை­ய­கத்தில் பெரும்­பா­லான இடங்­களில் நடை­பெ­று­கின்­றன. 

 

இவ்­வா­றான அம்மன் வழி­பாட்டு செயற்­பா­டு­களில் மிகவும் வியக்­கத்­தக்க, சிந்­திக்கக் கூடிய ஒன்­றாக அண்­மையில் லிந்­துலை சென்­றெ­குலர்ஸ் தோட்­டத்தில் ஸ்ரீ முத்து மாரி­யம்மன் ஆல­யத்தில் வரு­டாந்த தேர் திரு­விழா உற்­ச­வத்தை கூறலாம். இங்கு அமைக்­கப்­பட்ட “சேலைத்தேர்” பலரும் அறி­யாத ஒரு விட­ய­மா­கவே உள்­ளது. 

 

சேலைத்தேர் என்­பது முற்­றிலும் சேலை­களால் உரு­வாக்­கப்­பட்ட தேராகும். 1932 ஆம் ஆண்டு அந்த தோட்­டத்தில் வாழ்ந்த கருப்­பண்ணன் என்ற தொழி­லாளி ஒரு­வ­ரினால் உரு­வாக்­கப்­பட்­டது.

 

 

இவர் கைக்­கத்தி (கவ்­வாத்­துக்­கத்தி) என்று சொல்லக்கூடிய கத்­தி­யி­லேயே இதனை வடி­வ­மைத்தார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

இத்­தகைய தேர் இங்கு “சேலைத்தேர்” என அழைக்­கப்­பட்­டாலும் இந்­தி­யாவில் நாமக்கல் பிர­தே­சத்தில் “நாமக்கல்” தேர் என்றே அழைக்­கப்­ப­டு­கின்­றது.

 

இந்த தோட்­டத்தில் வாழும் பெரும்­பா­லான மக்கள் இந்­தி­யாவில் பெரம்­பத்தூர் மற்றும் நாமக்கல் பிர­தே­சங்­களில் இருந்து இலங்­கைக்கு வந்­த­வர்­களின் வாரி­சுகள்.

 

அதனால் அந்த பிர­தே­சங்­களின் பண்­பாடு சமய வாழ்க்கை மற்றும் கலா­சா­ரங்கள் இங்கு உள்­ளெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

 

இங்கு வாழும் ஒரு பெண், வரு­டத்தில் முதன்­மு­த­லாக வாங்கும் சேலையை அம்மன் கோயி­லுக்கு ஒதுக்கி விடு­வார்­களாம்.

 

அந்த சேலைத்தேர் திரு­விழா காலங்­களில் ஆல­யத்­திற்கு வழங்­கப்­படும்.

 

அவ்­வாறு ஒரு தோட்­டத்தில் 300 பெண்கள் இருந்தால் கிட்­டத்­தட்ட 200 க்கும் மேற்­பட்ட சேலைகள் ஆல­யத்தை வந்­த­டை­கின்­றன.

 

பின் அவை வழங்­கி­ய­வர்­களின் பெயர்­க­ளுக்கு ஏற்ப அடை­யா­ள­மிட்டு தேரை அலங்­க­ரிக்கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

 

முற்­றிலும் இந்த வண்ண வண்ண சேலை­களின் மூலம் தேர் அலங்­க­ரிக்­கப்­ப­டு­கி­றது.

 

இந்த சேலை­களை தேருடன் இணைப்­ப­தற்கு, தயா­ரிப்­ப­தற்கு ஆணி பயன்­ப­டு­வ­தில்லை. சணல்­க­ளி­னா­லேயே அவை கட்­டப்­ப­டு­கின்­றன. தேரின் தூண்­க­ளுக்கு வர்ண பூச்­சுக்­களும் பூசப்­ப­டு­வ­தில்லை.

 

ஆரம்ப காலத்தில் இந்த தேரில் வைக்­கப்­பட்ட  அம்மன் சிலையை தோட்­ட­வா­ரி­யாகத் தூக்கிச் சென்று உலா வரு­வது வழக்கம்.

 

தற்­போது ட்ரக்டர் வண்டி மூலம் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றது. விழா முடி­வுற்­றதும் இந்த சேலைகள் குறித்­த­வர்­க­ளிடம் ஒப்படைக்கப் படுகின்றன. 

 

இந்த சேலையை பெண்கள் மிக முக்கியமான, நன்மை பயக்கக்கூடிய காரியங்களுக்கு அணிவர்.

 

அம்மன் தேருக்கு பாவித்த சேலையை அணியும் போது பெண்களின் மனதில் ஒரு பயபக்தி ஏற்படுகிறது. 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.