Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்...!
2016-05-23 11:11:21

'கூகுள் அலர்ட்ஸை' (Google Alerts) உருவாக்கிய நாக கடாரு (Naga Kataru) கலிஃபோர்னியாவில் உள்ள தனது நிலத்தில் விவ­சா­யத்தில் ஈடு­பட்டு வரு­கி­றார்.

 

இந்­திய ஆந்திரா பிரதேசத்தில் ​கம்பலாகுடம் (​Gampalagudem​)​ எனும் ​ஊரில் பிறந்து வளர்ந்தவர் நாக கடாரு.​ ​

 

அவ்வளவாக கல்வியறிவற்ற அந்த கிராமத்தில், தலைமை யாசிரியரான அவரது தந்தை கடாருவை கணினி பொறியாளராக ​படிக்க வைத்துள்­ளார். பிறகு, புகழ்பெற்ற ஐ.ஐ.டி யில் (IIT) கணினி படிப்பு ​முடித்துள்­ளார். கடாரு.

 

இணையத்தில் நாம் உற்று கவனிக்க விரும்பும் விடயங்களில் வரும் புதிய அப்டேட்கள், செய்திகளை பிரித்து நமக்கு அனுப்பி ‘அலர்ட்’ செய்யும் கூகுளின் ஒரு சேவையின் பெயர்தான் ‘கூகுள் அலர்ட்ஸ்’.

 

உதாரணத்துக்கு நீங்கள் ரஜினி ரசிகர் எனில், ரஜினிகாந்த் பற்றி இணையத்தில் வரும் செய்திகள் மட்டும் தனியாக, (உடனடியாக படிக்க விரும்பினால் இந்த சேவையில் ‘ரஜினிகாந்த்’ பெயரை கொடுத்து விட்டால் போதும்) அவரை பற்றி இணையத்தில் செய்தி கள் அப்டேட்டாகும் போதெல்லாம் உங்கள் மின்­னஞ்சல் வழி­யா­க அந்த செய்திகளை நேரடியாக பெற்­றுக்­கொள்­ள­லாம்.

 

2003​ஆம் ஆண்டு, '​​கூகுள் அலர்ட்ஸ்' வெளியிடப்பட்டது. பெரும் முயற்சி எடுத்து இதை அவர் உருவாக்கியபோது,  இவருடைய ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர்,  இதனை​ அங்கீகரிக்கவில்லை.

 

இவரது முயற்சியை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் கடாரு சோர்வடையவில்லை. கூகுளின் அப்போதைய CEO க்களான​ Sergey Bring மற்றும் Larry Page ஐ சந்தித்து தன் கண்டுபிடிப்பை முன் வைத்தார்.

 

அதை ஆய்வு செய்த அவர்கள், அதன் தனித்தன்மையை உணர்ந்து அவரின் முயற்சி யைப் பாராட்டியதோடு,  நாக கடாருவின் கண்டுபிடிப்பு​மிகவும் பிடித்துப்போனதால், கூகுள் நிறுவனத்திலேயே அவருக்கு ஒரு பொறுப்பையும் அளித்தனர். 

 

இருப்பினும் நாக கடாருவுக்கு தொடர்ந்து கூகுளில் பணியாற் றுவது ஒரு சலிப்பை தந்தது.

 

வித்தியாசமாக ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதில் விருப்பம் கொண்ட கடாரு, வெகு சீக்கிரத்தில் கூகுள் நிறுவனத்திலிருந்து வெளியேறி, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தியுள்­ளார்.

​ ​

இப்போது இவரின் புதிய அவதாரம் ​'​விவசாயி​'​. ஆம், 2008இல் தன் வருமான த்தில் கலிஃ போர்னி யாவில் 320 ஏக்கர் நிலத்தை வாங்கி யிருந்தார்.

 

முதலீடாக வாங்கிய அந் நிலத்தை, 5 வருடங்களுக்குப் பிறகு நல்ல விலைக்கு விற்று விடுவது தான் அவரது திட்டம். ஆனால் விற்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு திடீரென ஒருநாள் உதித்தது தான் விவசாயம் செய்யும் திட்டம்.

 

தன் சொந்த ஊரில் உள்ள பூக்களும், பழங்களின் வாசமும் அவருக்கு நினைவுக்கு வந்ததால், நிலத்தை விற்கும் திட்டத்தை கைவிட்டு உடனே ஒரு முடி​வை எடுத்தார். அந்த நிலத்தை விற்பதற்குப் பதிலாக, அதை பாதாம் தோட்டமாக மாற்றியுள்­ளார்.​  

 

இன்று கலிஃபோர் னியாவில் பெரிய பாதாம் விவசாயி யாக கடாரு விளங்குகிறார்.

 

"எனக்கு விவசா யம் பற்றி எதுவும் தெரியாது. காரணம் சிறுவயதிலிருந்தே என்னை என் தந்தை பெரிய படிப்பாளியாக வேண்டும் என்றே திட்டமிட்டு வளர்த்தார். ஆனால், எனக்கு விவசா யம் பிடித்திருந்தது.

 

இன்று விவசாயியாக மாறியிருக்கிறேன். அதனால் தெரியாமல் ஒரு காரியத்தில் இறங்கி விடக்கூடாது என்பதால் நானே முறையாக விவசாயம் பற்றி படித்தேன்​.​

 

எனது முயற்சியால் இன்று ​இந்த நிலத்தில் ​பாதாமும், மற்ற சில விளை பொருட்களையும் விளைவிக்கிறேன். என் நிலத்தில் 8 பேர் வேலை செய்கின்றனர். வருடத்திற்கு 2.5 மில்லியன் வருமானம்​ கிடைக்கிறது" என்கிறார் விவசாயி நாக கடாரு.

 

வெற்றிகரமான விவசாயி ஆன பின்னரும் கடாரு, தன் படிக்கும் ஆர்வத்தை விடவில்லை. இப்போது  ​'ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் சூழல் மற்றும் வளங்கள் தொடர்பான மேற்படிப்பை படித்து வருகிறார்.

 

(– விகடன்)

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.