Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அநுராதபுரத்தில் தமிழ் மொழி கற்பிக்கும் வண. விமலசார தேரர்
2016-07-03 20:38:36

(சிலாபம் திண்­ண­னூரான்)

 

“பிற மொழி­யையும் தெரிந்து வைத்­தி­ருங்கள். அது பிற­ரோடு பழக உதவும். அடுத்­த­வரை அணுக உதவும். வெறும் மொழிப்­பித்து என்­பது உங்­களைக் கிணற்றுத் தவ­ளை­யாக்­கி­விடும்.

 

கிணற்றுத் தவ­ளையும் நீந்தும் உயிர்­வாழும். ஆனால், உல­கத்தின் அனு­ப­வமும் அளவும் அதற்குச் சிறி­ய­தாகத் தெரியும்” என முகம் கொள்­ளாத சிரிப்­புடன் எம்­மோடு பேசத் தொடங்­கினார் வணக்­கத்­துக்­கு­ரிய குட்­டிக்­கு­ளமே விம­ல­சார தேரர். 

 

 

“இந்த இனிப்­பான தரு­ணத்தில் சில விட­யங்­களை உங்­க­ளோடு பகிர்ந்து கொள்ள விரும்­பு­கிறேன்” என இலக்­கணத் தமி­ழில் தேன் சுவை­யாக கூறினார் 32 வய­தான தேரர்.

 

“மொழிப்­பற்று என்­பது மரத்தின் வேரைப் போன்­றது. வேர் மண்ணை ஊன்­றி­யி­ருப்­பதே எமக்குத் தேவை. அம் ­ம­ரத்தின் கிளைகள் எண்­ணிக்கை எமக்கு அவ­சி­ய­மற்­றது.

 

இங்கு நான் கிளைகள் எனச் சொல்­வது நாம் கற்­ற­றிந்த சில மொழி­களே. மொழி­களை தங்­க­ளுக்குள் வளர விடுங்கள். 

 

அது உங்­களை வளர்த்து விடும். நாடும் இனமும் வளரும்” என ஒரு போடு போட்டார் தேரர். அவ­ரது அரு­மை­யான தமிழ் கேட்டு ஆடிப் போய் விட்டோம். ஆழ­மான தமிழ் மொழி அறிவு அவ­ருக்குள் இருப்­பதை தெரிந்து நாமும் சொக்­கிப்போய் விட்டோம்.

 

அண்­மையில் அநு­ரா­த­புரம் புனித நக­ரத்தில் உள்ள பஞ்­சா­ரா­நந்த மஹா பிரி­வெ­னா­வுக்கு சென்­றி­ருந்தோம்.

 

பௌத்த மத குரு­கு­லத்தில் குரு­கு­லக்­கல்வி கற்றுக் கொடுக்கும் கட்­டடப் பிரிவில் தமிழ் மொழியை இளம் பிஞ்­சு­க­ளான பௌத்த மத சிறு­வ­யது தேரர்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுக்கும் தரு­ணத்­தி­லேயே விம­ல­சார தேரர் எமது பார்­வைக்கு தென்­பட்டார். 

 

அப்­போதே அவரின் தமிழ் மொழி பற்­றிய உணர்வை தெரிந்து வியந்தோம். அவர் எம்­மோடு உரை­யாடும் போது சகோ­தர சிங்­கள மொழியின் ஒரு வார்த்­தையைக் கூட கலக்­காமல் சுத்த தமிழில் அவர் பேசி­யதைக் கண்டு வியந்து போனோம் அதி­ர­டி­யாக.

 

“நான் சிங்­கள பௌத்த குடும்­பத்தில் பிறந்­தவன். அநு­ரா­த­புரம் குட்­டிக்­கு­ளமே எனது ஊர். எனது அம்­மாவின் குடும்­பத்­தா­ருக்கு தமி ழில் ஒரு வார்த்­தையும் தெரி­யாது.

 

அப்­பாவின் குடும்­பத்­தி­ன­ருக்கு தமிழ் மொழியில் நல்ல பரிச்­சயம் உண்டு. இதற்­கான காரணம் எனது அப்­பாவின் கிரா­மத்தில் சகோ­தர இஸ்­லா­மிய சமூ­கத்தைச் சேர்ந்தோர் பரம்­ப­ரை­யாக வாழ்­கின்­றனர். இதன்கார­ண­மாக தமிழ்மொழி தொடர்பு எனது அப்­பாவின் குடும்­பத்­திற்குள் ஊடு­ரு­வி­யது. 

 

எனக்கு சிறு­வ­யதில் தமிழில் ஒரு வார்த்தை கூட தெரி­யாது வாழ்ந் தேன். இக் ­கு­ரு­கு­லத்தில் எனது சின்­னஞ்­சிறு வயதில் இணைந் தேன். இக்­ கு­ரு­கு­லத்தில் தான் நான் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டேன்.

 

மிகவும் இனி­மை­யான செம்­மொழி தமிழ். இத்­ தமிழ் மொழியை முதன்முதலில் வண. தேவா­னந்த தேர­ரிடம் கற்றேன்.

 

பின்னர் உடு­நு­வர வண. இந்­த­ரத்­தன தேர­ரிடம் தமிழ் மொழியைக் கற்ற நான், களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் இணைந்து தமிழ் மொழி யில் டிப்­ளோமா கற்­கையைக் கற்று முடித்­துள்ளேன். 

 

 

இன்னும் கற்க வேண்டும். இது மிகவும் ஆழ­மான மொழி. அதற்குள் குதித்து கற்க வேண்டும். வாராவாரம் தமிழ் பத்­தி­ரி­கை­களை படிப்பேன். வாசிப்பே ஒரு மனி­தனை முழு­மை­யா­ன­வ­னாக வெளி­ உ­ல­குக்கு அடை­யாளம் காட்­டு­கின்­றது” என அவர் கூறினார்.

 

தேரரை இடைமறித்து “தமிழ்மொழியை எவ்­வாறு சகோ­தர சிங்­கள சமூக உறுப்­பி­னர்­க­ளுக்கு கற்றுத் தரு­கின்­றீர்கள்?” என்ற வினாவை எழுப்­பினோம்.

 

“இன்று இக் ­கு­ரு­கு­லத்தின் பௌத்த இளம் சீடர்­க­ளுக்கு தமிழ் கற்­றுத் ­த­ரு­கின்றேன். அநு­ரா­த­புரம் பிர­தே­சத்து பல பிரி­வெ­னாக்­களில் தமிழ் மொழியை கற்றுத் தரு­கின்றேன்.

 

சிங்­கள ஆசி­ரியர் சமூ­கத்தைச் சேர்ந்த பலரும் ஆர்­வத்­துடன் தமிழ் மொழியை என்­னிடம் கற்று வரு­கின்­றனர். எங்கும் எதிர்ப்பு எழு­வ­­தில்லை. சிங்­கள மக்­களின் இளம் சமூ­கத்­தினர் இன்று தமிழ் மொழியைக் கற்றுக்கொள்­வதில் பெரும் ஆர்­வ­மாக உள்­ளனர்.

 

நூற்றி இரு­ப­துக்கும் மேற்­பட்ட பௌத்த சீடர்கள் தமிழ் மொழியைக் கற்று வரு­கின்­றனர். இவர்கள் 12 முதல் 20 வயதைக் கொண்­ட­வர்கள். தமிழ் தீண்­டப்­ப­டாத மொழி அல்ல. இதை அனை­வரும் உணர வேண்டும்” என உணர்ச்சி மேலிட சொன்னார் தேரர்.

 

இவற்­றுக்கும் மேலாக தங்­களின் தமிழ் பணி எவ்­வாறு செயற்­ப­டு­கி­றது எனவும் அவ­ரிடம் கேள்­வியை தொடுத்­ததும் மீண்டும் துளிர்க்கும் புன்­ன­கை­யோடு நெற்றி சுருக்கி பதில் கொடுத்தார்.

 

“பௌத்த மத போத­னை­களை தமிழ் சமூ­கத்­தினர் மற்றும் என்­னிடம் தமிழ் கற்கும் சிங்­க­ள­வர்கள் மத்­தி­யிலும் முன்­னெ­டுக்­கின்­றனர்.

 

சகோ­தர இஸ்­லா­மிய சமூ­கத்தின் புனித நோன்பு காலத்தின் இப்தார் நிகழ்­வு­களின் அழைப்பை ஏற்று அங்கு தமிழ் மொழியில் உரை­யாற்­று­கின்றேன். இதுவே தமி­ழுக்கு நான் வழங்கும் சிறு தொண்­டாகும்.

 

தமிழ்  மொழியைக் கற்றுக் கொள்­வ­தோடு அம்­ மொழி பேசும் தமிழ் மக்­களின் கலை, கலா­சாரம், பண்­பா­டுகள் பற்றி கற்­பதும் அவ­சியம். எந்­த­வொரு மொழியின் அழி­வுக்கும் நாம் துணை­போகக் கூடாது.

 

பாவங்­க­ளி­லேயே இச்­ செ­ய­லா­னது பெரும் பாவ­மாகும். மக்­களின் மத்­தியில் நல்­லி­ணக்கம், புரிந்­து­ணர்­வுக்கு பிற மொழிக் கல்வி அவ­சியம். தமி­ழர்கள் சிங்­க­ளத்­தையும், சிங்­க­ள­வர்கள் தமி­ழையும் கற்­றுக்­கொள்ள வேண்டும்.

 

வள­மான வாழ்­விற்கு பிற­மொழி அறிவுத் தேவை. பிற மொழியை கற்று அதனை பிற­ருக்கும் வழங்க வேண்டும். இதுவே கல்வி தானம் என்­கின்றோம்.

 

தனது தாய்மொழிக்கு வழங்கும் கௌர­வத்­தையும் கண்­ணி­யத்­தையும் அனை­வரும் ஏனைய மொழி­க­ளுக்கும் வழங்க வேண்டும்” என அவர் தெரி­வித்தார்.

 

 

“மற்­றொரு மொழியை தாய் மொழி­யாகக் கொண்ட நீங்கள் தமிழ் மொழியின் மீது பெரும் ஆர்­வமும் கௌர­வமும் கொண்­டுள்­ளீர்கள். நீங்கள் எமது நாட்டு மக்­க­ளுக்கு கூற விரும்­பு­வது என்ன?” எனவும் கேள்வி எழுப்­பினோம்.

 

இது குறித்து இங்கு மனம் திறந்து பேசினார் தேரர், “முப்­பது வருட யுத்தம் எமது இரு சமூ­கத்­திலும் பல கோணல்­களை ஏற்­ப­டுத்தி விட்­டது. இனி இவ்­வா­றான நிலை ஏற்­பட வாய்ப்பு வழங்க எவரும் முனையக்கூடாது.

 

எனக்கு அர­சியல் தெரி­யாது. மனி­தர்­க­ளுக்­காகத் தான் நாடு, மொழி, இனம், சமூகம் மற்றும் அதன் பிரி­வுகள் அனைத்தும். பிற மொழியை கற்­பது புரி­தலில் வேர் விட்டு வளர்த்து விடும்.

 

அது மலர்ந்து மணம் பரப்பும். மலரும் மணமும் புதிய உலகை புதிய குழலை, புதிய புரி­தலை புதிய உணர்வை எம்­மைச்­சுற்றி வலம் வர வைக்கும். அப்போது எம்மை  அனைவரும் புரிந்து கொள்வார்கள். 

 

அவ்வாறு இன்றி அமைப்புகளின் எதிரியாக உறவுகளின் எதிராக, சாதி, மதம், சமூகம் ஆகியவைகளின் விரோதிகளாக மாறி வாழப் பழக வேண்டாம்.

 

வாழ்க்கை சிக்கல் இல்லாது வாழ தர்மத்துடன் வாழ வேண்டும். அனைவரையும் நேசிக்க வேண்டும். விழிப்புணர்வோடு உங்களது வாழ்வை ஆராய்ந்து பாருங்கள். விடை கிடைக்கும்”  என்றார் வண. குட்டிக்குளமே விமலசார தேரர். இதுவும் நிஜம் தானே!

 

(படங்கள்: கே.பி.பி. புஷ்பராஜா)    

 

இது போன்ற மேலும் செய்திகள்:

 

* வறிய மக்களுக்கு தினமும் இப்தார் உணவுகளை விநியோகிக்கும் பங்களாதேஷ் பௌத்த மடாலயம்    

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
பொன்.சங்கர்2016-07-05 15:29:12
மெட்ரோ குழுமம் வாழ்த்துக்கள்
0
0
pratheeban2016-07-04 13:41:51
I really appreciate you hon.rev.Vimalasara Thero. As you are doing a good job which teaching Tamil is not an easy task with commitment..without knowing of other languages it will be difficult to understanding other community s norms values...we always pray for you..
0
1
க.ஆனந்தி2016-07-03 21:51:53
தமிழ் கற்பிக்கும் பௌத்த தேரர் பற்றி அறியச் செய்த சிலாபம் திண்ணனூரானுக்கும் மெட்ரோ நியூஸுக்கும் பாராட்டுக்கள்.
0
2
ஜே.சதீஷ்2016-07-03 21:32:20
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி வண. விமலசார தேரர் அவர்களே
0
2
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.