Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அசையக்கூடிய சமச்சீரான பக்க குழாய்கள் கொண்ட தூவல் நீர்பாசனத் தொகுதி; யாழ். இளைஞர்கள் கண்டுபிடிப்பு
2016-08-28 20:01:36

(பாறுக் ஷிஹான்)

 

நீரை சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்தி வெற்­றி­க­ர­மாக எவ்­வாறு விவ­சாயம் செய்­யலாம் என்­பதே இன்று இலங்­கையில் விவ­சா­யிகள் எதிர்­கொள்ளும் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களில் ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது.

 

அதற்கு சிறந்­த­தொரு தீர்­வாக அமைந்­ததே “அசையும் தூவல் நீர்ப்­பா­சனத்” தொகு­தி­யாகும்.

 

 

நுண் நீர்ப்­பா­சன முறை­களில் மிகவும் உன்­ன­த­மான “அசை­யக்­
கூ­டிய சமச்­சீ­ரான பக்க குழாய்­களைக் கொண்ட தூவல் நீர்ப்­பா­சனத் தொகுதி” ஒன்றை இலங்கை விவ­சாயத் திணைக்­க­ளத்தின் கிளி­நொச்சி விதை மற்றும் நடுகைப் பொருள் அபி­வி­ருத்தி நிலை­யத்தைச் (Seed & Planting Material Development Center (SPMDC) சேர்ந்த இரா­ஜேஸ்­வரன் சஞ்­சீபன் வடி­வ­மைத்­துள்ளார். 

 

இந்த உப­க­ர­ணத்தை (Seed & Planting Material Development Center (SPMDC) நிறு­வ­னத்தைச் சேர்ந்த கே. உத­ய­குமார் உரு­வாக்­கி­யுள்ளார்.

 

அசையக்கூடிய சமச்­சீ­ரான பக்க குழாய்­களைக் கொண்ட தூவல் நீர்ப்­பா­சனத் தொகுதி வடி­வ­மைப்பு என்­பது  நுண் நீர்ப்­பா­சன முறை­களில் மிகவும் உன்­ன­த­மான தொழில்­நுட்­ப­மாகும். மேலும் தேசிய ரீதி­யி­லான பயிர் மாற்­றீட்டுத் திட்­டங்­களில் இது ஓர் புரட்­சியை ஏற்­ப­டுத்தும் எனலாம். 

 

இது ஓர் எண்­ணக்­கரு மட்­டுமே. இந்த உப­க­ர­ணத்­தினை பயிர் செய்யும் அளவு, இடம் என்­ப­வற்­றுக்கு ஏற்ப குறு­கி­ய­தா­கவோ,பெரி­தா­கவோ மாற்­றி­ய­மைத்தும் பயன்­ப­டுத்­தலாம்.

 

 

இதன்மூலம் வயல் நிலங்­களில் நீர் பற்­றாக்­கு­றை­யாக உள்ள கால கட்­டங்­களில் குறைந்­த­ளவு நீரினை அதி­க­பட்ச வினைத்­தி­ற­னுடன் பயன்­ப­டுத்த முடியும். 

 

குறித்த தூவல் நீர்ப்பாசனத் தொகு­தி­யா­னது விவ­சாயத் திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் முன்­னி­லையில் பரந்தன் அரச விதை உற்­பத்திப் பண்­ணையில் வெற்­றி­க­ர­மாக பரி­சோ­திக்­கப்­பட்­டது. 

 

பரி­சோ­திக்­கப்­பட்­டமை மட்­டு­மல்­லாமல் குறித்த அசையும் தூவல் நீர்ப்­பா­சனம் மூலம் இது­வரை நீர் தட்­டுப்­பாடு கார­ண­மாக பயிர்ச்­செய்கை செய்­யப்­ப­டாதிருந்த ஏழு ஏக்கர் வயல் நிலத்தில் வெற்­றி­க­ர­மாக கச்­சானும் (நிலக்­க­டலை) கௌபியும் பயி­ரி­டப்­பட்­டுள்­ளது.

 

அவை தற்­போது செழிப்­பாக வளர்ந்­துள்­ள­மையை காணக்கூடி­ய­தாக உள்­ளது. குறித்த வெற்­றி­க­ர­மான மாதிரி பயிர்ச் செய்­கையை ஏரா­ள­மான விவ­சா­யி­களும்  விவ­சா­யத்­துறை நிபு­ணர்கள் மற்றும் ஆர்­வ­லர்­களும் பார்­வை­யிட்டுச் சென்­றுள்­ளனர். 

 

குறித்த அசையும் நீர்ப் பாசனத் தொகுதி மூலம் நுண் நீர்ப்­பா­சனம், பசளைப் பாசனம் (பசளை கரைக்­கப்­பட்ட நீரை விசிறல்), விவ­சாய இர­சா­ய­னங்­களை (விவ­சாயப் பூச்சி கொல்லி) விசி­றலாம். 

 

 

இதன்மூலம் நிலக்­க­டலை, உழுந்து, பயறு, கௌப்பீ, வெங்­காயம், சோளம், மிளகாய், மரக்­கறி வகை­களை பயிர் செய்ய முடியும். சாதா­ரண தூவல் நீர்ப்­பா­சனத் தொகுதி அமைப்­ப­தற்­கான ஆரம்­ப­கால முத­லீட்­டினை விட இதற்­கான முத­லீடு மிகக் குறை­வாக உள்­ளது.

 

பக்க குழாய்­களின் உய­ரத்தை பயிரின் உய­ரத்­திற்­கேற்ப மாற்றி குறைந்­த­ளவு தொழி­லா­ளர்­க­ளுடன் மிகக்குறைந்த நேரத்தில் முழு­வ­யல்­க­ளுக்கும் சீரான முறையில் நீரை விசி­றி­ய­டிக்க முடியும்.

 

குறித்த தொகு­தி­யினை மனித வலு­வினால் அல்­லது இரு சில்லு, நான்கு சில்லு உழவு இயந்­திரம் மூலம் இழுக்க முடியும். இப்­ப­டி­யான சிறப்பு செயற்­றிட்­டங்­களின் ஊடாக தண்ணீர் மேலாண்­மையை நாம் சரி­வர மேற்­கொண்டு வந்தால் விவ­சா­யத்­திலும் நிச்­சயம் சாதிக்க முடியும்.

 

 

இவ்­வாறு நவீன தொழில்­நுட்­பங்­களை பயன்­ப­டுத்தி விவ­சா­யத்தை வினைத்திற­னுடன் வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­வதன் மூலம் இளை­ஞர்­க­ளையும் விவ­சாயத் துறைக்குள் ஈர்க்க முடியும். 

 

குறித்த நீர்ப்பாசனத் தொகுதி தொடர்பிலான மேலதிக விபரங்களையும் விளக்கங்களையும் இலங்கை விவசாயத் திணைக்களத்தின் கிளிநொச்சி விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். 

 

இதேவேளை, குறித்த செயற்றிட்டத்தினை பரந்தன் அரச விதை உற்பத்திப் பண்ணை நிலையத்துக்குச் சென்று நேரில் பார்வை யிடலாம்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.