Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
உடற்கட்டினால் பலரையும் கவர்ந்த டாக்டர் பண்டுல பஸ்நாயக்க கண்டி வைத்தியசாலையில் கண் வைத்தியராக பணியாற்றுகிறார்; உடலை முறுக்கேற்றுவதற்கு ஹோர்மோன் மருந்துகளை பயன்படுத்த வேண்டாமென இளைஞர்களுக்கு அறிவுரை
2016-10-16 11:10:58

(எஸ்.கே)

 

கண்டி வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றும் இளை­ஞ­ரான வைத்­தியர் ஒருவர் குறித்து சமூக ஊட­கங்­களில் சுவா­ரஷ்­ய­மான செய்­திகள் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

 

 

 

டாக்டர் பண்­டுல பஸ்­நா­யக என்ற இவர், சாதா­ர­ண­மாக வைத்­தி­யர்கள் நமது எண்­ணத்தில் தோன்றும் தோற்­றத்தை விட முற்­றாக மாறு­பட்டு கட்­டுடல் கொண்ட கம்­பீ­ர­மான கட்­டுடல் தோற்­றத்­துடன் காணப்­ப­டு­கின்றார்.

 

 

கடந்த சில வரு­டங்­க­ளாக ‘மிஸ்டர் ஸ்ரீலங்கா’ மற்றும் ‘மிஸ்டர் கென்டி’ ஆகிய பட்­டங்­களைப் பெற்று காண்­போரை மீண்டும் திரும்பிப் பார்க்கச் செய்யும் கட்­டு­டலைக் கொண்­ட­வ­ராக வைத்­தி­ய­சா­லைக்குள் பிர­வே­சிக்கும் இவர் கண் வைத்­தி­ய­ராவார்.

 

தனது உடல்­தோற்­றத்தைப் பார்த்து தன்­னிடம் சிகிச்சை பெற தயங்­கு­வ­துடன் சில வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு இவர் செல்­லும்­போது இவரைப் பற்றி அறி­யாத பாது­காப்புப் பிரி­வினர் தன்னை நிறுத்தி ‘குண்டர்’ என சந்­தே­கித்து விசா­ரணை மேற்­கொள்­வ­தா­கவும் டாக்டர் பண்­டுல பஸ்­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

 

பாட­சா­லையில் எது­வித விளை­யாட்­டுக்­க­ளிலும் ஈடு­ப­டாமல் பல்­க­லைக்­க­ழக வாழ்க்­கையில் “டைகொண்டோ” சண்டைக் கலை­யிலும் பயிற்சி பெற்ற இவர், பின்னர் தொழில்­ப­யிற்சி பெறும் காலத்தில் ஜிம்­முக்கு செல்ல சந்­தர்ப்பம் கிடைத்த பின்னர் அவர் தனது உடலை முறுக்­கேற்றத் தொடங்­கினார்.

 

இரண்டு சகோ­த­ரி­களைக் கொண்ட குடும்­பத்தைச் சேர்ந்த இந்த வைத்­தி­யர், தற்­போது தனது வைத்­தியத் தொழில் வாழ்க்­கைக்கு மேல­தி ­க­மாக நாள் ஒன்­றுக்கு மூன்­றரை மணித்­தி­யா­லங் கள் உடம்பை முறுக்­கேற்றி கட்­டு­டலை பாது­காக் கும் பயிற்­சியில் ஈடு­ப­டு­கின்றார்.

 

 

தற்­போது ஹோர்மோன் அடங்­கிய மருந்­து­களை பாவித்து திடீ­ரென உடலை பெருப்­பிக்க முயற்­சிக்கும் இளை­ஞர்­க­ளுக்கு அப்­படிச் செய்ய வேண்­டா­மென அறி­வுரை கூறு­கிறார் டாக்டர்  பண்­டுல பஸ்­நா­யக.

 

“நான் ஒருபோதும் எனது உடலை பெருப்­பிப்­ப­தற்கு ஹோர்மோன் கலந்த ஊக்க மருந்து மற்றும் ஊசி ஏற்­று­வது போன்ற முறை­யற்­ற­வற்றை நான் பாவித்­த­தில்லை.

 

 

எனக்கு இது போன்று  எனது உடம்பை முறுக்­கேற்றி கட்­டுக்­கோப்­பாக வைத்துக் கொள்ள முடி­யு­மென்றால் ஏனை­யோ­ருக்கும் இதுபோல் உடம்பை முறுக்­கேற்றிக் கொள்ள ஏன் முடி­யாது? குறு­கிய கால செயன்­மு­றை­களில் பிர­தி­பலன் துரி­த­மாக கிடைத்தபோதும் அதன் பக்க விளை­வுகள் நீண்ட காலம் நீடிக்கும்” எனவும் அவர் தெரிவிக் கின்றார்.

 

தொலைக்காட்சி அலைவரிசைகளில் உடலை முறுக்கேற்றி கட்டுக்கோப்பாக வைத்திருப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்க வைத்தியர் பண்டுல பஸ்நாயக ஆர்வம் காட்டுகின்றார்.

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.