Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பாகிஸ்தான் தெருவோரக் கடையில் தேநீர் தயாாித்த வசீகர இளைஞர்; ஒரு யுவதி பிடித்த படத்தினால் உலகப் புகழ் பெற்றாா்
2016-10-21 16:57:42

பாகிஸ்­தா­னி­லுள்ள கடை­யொன்றில் தேநீர் விற்­றுக்­கொண்­டி­ருந்த 18 வய­தான ஒரு இளைஞர் ஒரு புகைப்­ப­டத்­தினால் உல­க­ளா­விய ரீதி­யி­லான புகழ்­ பெற்­று­விட்டார்.

 

இப்­ பு­கைப்­படம் இணை­யத்தில் வெளி­யாகிய சில தினங்­க­ளுக்குள் பெஷன் மொட­லா­கவும் மாறி­யுள்ளார். 

 

இஸ்­லா­மாபாத் நக­ரி­லுள்ள இத்வார் பஸார் எனும் ஞாயிறு பஸாரில்  தேநீர் விற்­ப­னை­யா­ள­ராக பணி­யாற்­றி­யவர் அர்ஷாத் கான். (வட இந்­தியா மற்றும் பாகிஸ்­தானில் இவ்­வாறு தேநீர் தயா­ரிப்­ப­வர்கள், பரி­மா­று­வர்­களை சாய்­வாலா என அழைப்பர்). வசீ­க­ர­மான முகத்­தோற்­றத்தை கொண்­டவர் அவர். நீல நிற­மான கண்­க­ளையும் கொண்­டுள்ளார்.

 


அந்த இளைஞர் தேநீர் தயா­ரிப்­பதைப் படம் ­பி­டித்து இன்ஸ்­டகிராம் சமூக வலைத்­த­ளத்தில் ஒக்­டோபர் 14 ஆம் திகதி வெளி­யிட்டார் புகைப்­படக் கலை­ஞ­ரான ஒரு யுவதி. 

 

அதன்பின் இந்த ஹொட்­டான சாய்­வாலா குறித்து பலரும் பேசத் தொடங்­கினர். மெல்ல மெல்ல இப் ­பு­கைப்­படம் சமூக வலைத்­த­ளங்­களில் பரவத் தொடங்­கி­யது. பாகிஸ்­தானில் மாத்­தி­ர­மல்லால், இந்
­தி­யா­விலும் ஏரா­ள­மா­னோரை இந்த இளைஞர் கவர்ந்தார்.  

 

ஐஸ்­வர்யா, ரன்பீர் கபூர் பிர­தான வேடத்தில் நடித்த ‘ஏ தில் ஹாய் முஸ்கில்’ படத்தில் பாகிஸ்தான் நடிகர் பவாத் கானும் நடித்­ததால் அப்­ ப­டத்தை வெளி­யி­டு­வ­தற்கு மஹ­ராஷ்ரா அடிப்­ப­டை­வாத கட்­சி­யொன்று எதிர்ப்பு தெரி­வித்தநிலையில் இந்த சாய்­வாலா இளைஞர் மீது இலட்சக்கணக்­கா­னோ­ருக்கு நாடு கடந்த காதல்.

 

“பாகிஸ்தான் இப்­ப­டி­யொரு சாய்­வா­லாவை கொண்­டுள்­ளது. தயவு செய்து அதன்மீது குண்­டு­ போ­டா­தீர்கள் என ஸ்ருதி எனும் ஒரு யுவதி எழு­தினார். பிர­ப­லங்கள் பலரும் இந்த இளை­ஞரை பாராட்டத் தொடங்­கினர். அவரின் பெயர், விபரம் எதுவும் அப்­போது வெளி­யா­கி­யி­ருக்­க­வில்லை. 

 

 

இப் ­பு­கைப்­படம் சமூ­க­ வ­லைத்­த­ளங்­களில் அதி­க­மாக பகி­ரப்­பட்ட நிலையில் அவரைப் படம்­பி­டித்த யுவதி, அந்த இளை­ஞரின் வேறு புகைப்­ப­டங்­க­ளையும் இணை­யத்தில் பகிர்ந்தார். இஸ்­லா­மாபாத் இத்வார் பஸாரில் அவரை காணலாம் என்ற குறிப்­பையும் அவர் வெளி­யிட்டார். 

 

இதை­ய­டுத்து, அந்த இளை­ஞரை நேரில் சந்­திப்­ப­தற்கும் அவ­ருடன் படம்­ பி­டித்­துக்­கொள்­ளவும் ஆர்வம் காட்­டினர். இரு தினங்­க­ளுக்குள் சுமார் 50 இளம்­பெண்கள் அவரைத் தேடி­வந்­த­துடன் அவ­ருடன் படம்­பி­டித்துக் கொள்ள விரும்­பி­னராம். 

 

இந்­நி­லையில், அந்த இளை­ஞரை படம்­பி­டித்த யுவ­தியின் சமூக வலைத்­தளப் பக்­கங்­களின் ரசி­கர்கள் எண்­ணிக்­கையும் திடீ­ரென அதி­க­ரிக்கத் தொடங்­கி­யது. 

 

ஜவே­ரியா அலி எனும் யுவ­தி தான் அப் ­பு­கைப்­ப­டக்­க­லைஞர். ஜியா அலி எனும் பெயரில் இவர் செயற்­ப­டு­கிறார்.

 

 

பின்னர் அந்த இளை­ஞரை சந்­தித்து அவ­ருடன் தான் பிடித்­துக்­கொண்ட படத்தை வெளி­யிட்ட ஜவே­ரியா அலி, நானே சாய்­வா­லாவை கண்­டு­பி­டித்தேன் என்ற குறிப்­புடன் அப்­ ப­டங்­க­ளையும் வெளி­யிட்டார். 

 

இந்த இளைஞர் நிச்­ச­ய­மாக ஊட­கங்­களின் கவ­னத்தை ஈர்ப்பார். அவர் ஒரு மொட­லாக மாறி­வி­டுவார் என சமூக வலைத்­த­ளங்­களில் பலர் கருத்துத் தெரி­வித்­தனர். 

 

அது விரை­வி­லேயே உண்­மை­யா­கி­யது. அந்த இளைஞர் யார் என பாகிஸ்­தா­னிய ஊட­கங்கள் தேடத் தொடங்­கின.

 

அவர் பெயர் அர்ஷாத் கான். 18 வய­தா­னவர் என்­பது தெரி­ய­வந்­தது. இவரின் தந்தை இரு தட­வைகள் திருமணம் செய்­தவர். இவ­ருக்கு 17 சகோ­தர சகோ­த­ரிகள் உள்­ளனர். 

 

பாகிஸ்­தானின் கைபர் பக்­துன்க்வா மாகா­ணத்தின் மர்தான் நக­ரி­லி­ருந்து வந்த குடும்­ப­மொன்றைச் சேர்ந்த அர்ஷாத் கான். தனது குடும் பம் 25 வரு­டங்­க­ளாக இஸ்­லா­­மா­பாத்தில் வசிப்­ப­தாக இவர் தெரி­வித்­துள்ளார். 

 

4 வரு­டங்­க­ளாக இஸ்­லா­மாபாத் இத்வார் பஸாரில் அர்ஷாத் கான்  பணி­யாற்­று­கி­றராம். தேநீர் விற்­ப­னை­யா­ள­க­ராக பணி­யாற்­று­வ­தற்கு முன்னர் பழங்­களை விற்­பனை செய்தார். 

 

அப்­ப­டி­யானால் இவர் முறை­யாக பாட­சா­லைக்கு செல்­ல­வில்­லையா என்ற கேள்வி எழு­கி­றதா? ஆம். குடும்­பத்­தி­னரின் வறுமை கார­ண­மாக அவரால் பாட­சா­லைக்கு செல்ல முடி­ய­வில்­லையாம்.

 

 

இன்ஸ்­ட­கிராம், பேஸ்புக், டுவிட்டர் போன்­ற­வற்றில் தனது புகைப்­
ப­டங்கள் வேக­மாக பரவ ஆரம்­பத்­த­போது, இந்த சமூக வலைத்­தள சமாச்­சா­ரங்கள் எதுவும் அவ­ருக்குத் தெரிந்­தி­ருக்­க­வில்லை.

 

‘‘நீங்கள் உல­க­ளா­விய ரீதியில் புகழ்­ பெற்­றுள்­ளதைப் பற்றி உங்­க­ளுக்குத் தெரி­யுமா?” என்று கேட்டால், ஆம். நான் புதி­தாக பிர­ப­ல­
ம­டைந்­தி­ருப்பதை நான் அறிவேன். இது குறித்து மிகவும் மகிழ்ச்­சி
­ய­டை­கிறேன்.

 

எனது புகைப்­ப­டங்­களை (இணை­யத்தில்) எனது நண்­பர்கள் காண்­பித்­தனர். மக்கள் என்­னுடன் இணைந்து 150 இற்கு மேற்­பட்ட படங்­களை பிடித்­துக்­கொண்­டுள்­ளனர்.

 

இத்­ திடீர் புகழ் மகிழ்ச்­சி­யா­ன­தாக இருந்­­தாலும் வாழ்­வ­தற்­காக உழைக்கும் வேலை நேரத்­திலும் என்னைச் சூழ்ந்­தி­ருந்து சிலர் படம்­பி­டிக்க முற்­ப­டு­வது எரிச்­சலை ஏற்­ப­டுத்­து­கி­றது” என சில தினங்
­க­ளுக்­கு முன் தெரி­வித்தார். உழைப்பின் அவ­சி­யத்தை உணர்ந்த அர்ஷாத் கான்.

 

ஆனால், இப்­போ­தைய நிலைமை வேறு. எதிர்­பார்க்­கப்­பட்­டதைப் போலவே தற்­போது ஒரு மொட­லா­கி­விட்டார் அர்ஷாத் கான். பாகிஸ்­தானின் ஒன்லைன் ஷொப்பிங் இணை­யத்­தள­மான Fitin.pk தனது ஆடை­க­ளுக்­கான பெஷன் மொட­லாக பணி­யாற்­றுவதற்கு அர்ஷாத் கானுடன் ஒப்­பந்தம் செய்­து­கொண்­டுள்­ளது.

 

 

அர்ஷாத் கான் பெஷன் மொட­லாக தோன்றும் புகைப்­ப­டங்­களும் வெளி­யாக ஆரம்­பித்­துள்­ளன. “சாய்­வாலா, இப்­போது சாய்­வாலா அல்ல. அவர் ஒரு பெஷன் வாலா” என பதி­வொன்றை வெளி­யிட்­டுள்­ளது மேற்­படி நிறு­வனம்.

 

பி.பி.சி. உட்­பட சர்­வ­தேச ஊட­கங்­க­ளிலும் அர்ஷாத் கான் குறித்த செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. “சாய்­வா­லா­வாக அர்ஷாத் கானை படம்­ பி­டித்த ஜவே­ரியா அலி கருத்துத் தெரி­விக்­கையில், அப் ­பு­கைப்­படம் இவ்­வ­ளவு பிர­சித்­த­மை­டையும் என தான் எதிர்­பார்க்­க­வில்லை எனக் கூறி­யுள்ளார்.

 

ஊட­கத்­து­றையில் அண்­மையில் பட்டம் பெற்ற ஜவே­ரியா அலி, திரு­ம­ணங்கள் மற்றும் நிகழ்­வு­களை படம்­ பி­டிப்­பவர். சில மாதங்­க­ளுக்கு முன்னர் இத்வார் பஸாருக்குச் சென்றபோது மேற்படி இளைஞரை முதன்முதலில் தான் கண்டதாக ஜவேரியா தெரிவித்துள்ளார். 

 

வழக்கமாக சமூக வலைத்தளங்களில் படங்களை தரவேற்றுவது போலத் தான் அப் புகைப்படத்தையும் நான் வெளியிட்டேன். சில தினங்களுக்குப் பின்னர் தான் இப் படம் வேகமாக பரவத் தொடங் கியது என்கிறார் அவர். 

 

“அர்ஷாத் கானுக்கு கிடைத்த திடீர் புகழ் குறித்து மகிழ்ச்சியடை கிறேன். அவர் ஒரு அருமையான பிள்ளை. அவர் தனது புகழை சரி யாக கையாள்வார் எனவும் பேராசை கொண்ட மக்களால் அவர் சுரண்டப்படாதிருப்பார் எனவும் நம்புகிறேன்” என் ஜவேரியா அலி தெரிவித்துள்ளார்.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.