Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்த மருத்துவர்கள்
2016-10-24 15:36:26

தலைகள் ஒட்­டிப்­பி­றந்த இரு குழந்­தை­களை மருத்­து­வர்கள் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரித்­துள்­ளனர். அமெ­ரிக்­காவைச் சேர்ந்த கிறிஸ்­டியன் மெக்­டொனால்ட், நிகோல் மெக்­டொனால்ட் தம்­ப­தி­யி­ன­ருக்கு கடந்த வருடம் இரட்டைக் குழந்­தைகள் பிறந்­தன.

 

 

இவ்­விரு ஆண் குழந்­தை­களின் தலையும் நேருக்கு நேராக ஒன்­றுடன் ஒன்று ஒட்­டிக்­கா­ணப்­பட்­டன. துடிப்­புடன் காணப்­பட்ட இக்­கு­ழந்­தை­களால் அமர்ந்­தி­ருக்­கவோ, நடக்­கவோ முடி­ய­வில்லை.

 

படுத்த படுக்­கையில் அதுவும் ஒரு குழந்தை புரண்டால் மற்ற குழந்­தையும் புரளும் நிலை காணப்­பட்­டது. ஜேடன், அனியஸ் என பெய­ரி­டப்­பட்ட இக் ­கு­ழந்­தை­க­ளுக்கு தற்­போது 13 மாத வய­தா­கி­றது.

 


இந்­நி­லையில், அமெ­ரிக்­காவின் நியூயோர்க் சென் புரோன்ஸ் நக­ரி­லுள்ள மொன்ட்­டே­பியோர் மருத்­துவ நிலை­யத்தில் இக்­ கு­ழந்­தைகள் வெற்­றி­க­ர­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

 

 

சி.என்.என். தொலைக்­காட்­சியின் தலைமை மருத்­துவ செய்­தி­யா­ள­ரான நரம்­பியல் மருத்­துவர் டாக்டர் சஞ்சய் குப்தா இச்­ச­சத்­தி­ர­சி­கிச்சை அறைக்குச் செல்­வ­தற்­கான விசேட அனு­ம­தியைப் பெற்­றி­ருந்தார்.

 

அவரும் ஊட­க­வி­ய­லாளர் வெய்ன் ட்ரேஷும் இணைந்து இச் ­சத்­தி­ர­சிக்சை தொடர்­பான விப­ரங்­களை அறிக்­கை­யிட்­டுள்­ளனர். டாக்டர் ஜேம்ஸ் ரி. குட்ரிச் தலை­மை­யி­லான மருத்­து­வ குழு­வினர் இச் ­சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொண்­டனர்.

 

கடந்த 12 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை காலையில் ஆரம்­பித்த இச்­ சத்­தி­ர­சிகிச்சை மறுநாள் வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் ஒரு மணி­வரை நீடித்­தது. அதன் பின் 39 வய­தான பிளாஸ்திக் சத்­தி­ர­சி­கிச்சை நிபுணர் டாக்டர் ஒரே டேப்பர் இக் ­கு­ழந்­தை­களின் மண்­டை­யோட்டை மறு­சீ­ர­மைக்கும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்ளார்.

 

 

இச் ­சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்­ன­ரான மிக ஆபத்­தான ஆரம்­ப ­நாட்­களைக் இக்­ கு­ழந்­தைகள் கடந்­த­வுடன் இப்­ பெற்­றோ­ரான கிறிஸ்­டி­யனும் நிகோலும் பெரும் நிம்­மதி பெரு­மூச்­சு­விட்­டனர். இவர்­க­ளுக்கு 3 வய­தான மற்­றொரு மகனும் உள்ளான்.

 

உலகில், 25 இலட்சம் பிர­ச­வங்­களில் ஒன்றில் இவ்­வாறு இரட்டைக் குழந்­தைகளின் தலைகள் ஒட்டிப் பிறக்­கலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இக்­ கு­ழந்­தை­களில் 40 சத­வீ­த­மா­னவை இறந்து பிறக்­கின்­றன.

 

சுமார் 30 சத­வீ­த­மான குழந்­தைகள் பிறந்து 24 மணித்­தி­யா­லங்­களில் இறந்­து­வி­டு­கின்­றன. இந்­நி­லை­யி­லி­ருந்து தப்பும் குழந்­தை­களில் 80 சத­வீ­த­மா­னவை 2 வய­துக்குள் பிரிக்­கப்­ப­டா­விட்டால் இறந்­து­வி­டு­வ­தாக ஆய்­வுகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

 

டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச், நிகோல், குழந்தைகள்


 

நிகோல் மெக்­டொனால்ட் கர்ப்­ப­ம­டைந்­தி­ருந்த போது இரு குழந்­தை­களும் தலைப்­ப­கு­தியில் ஒட்­டி­யுள்­ள­தாக அறிந்­த­வுடன் அழு­து­விட்­டராம். ஆனால், “இவை கடவுள் உனக்குத் தந்­தவை” என தனது தாயார் கூறி­ய­போது தான் அழு­கையை நிறுத்­தி­ய­தா­கவும் இக்­ கு­ழந்­தை­களை பெற்று வளர்க்கத் தீர்­மா­னித்­ததா­கவும் 31 வய­தான நிகோல் மெக்­டொனால்ட் கூறு­கிறார்.

 

இச்­ சத்­தி­ர­சி­கிச்­சைக்­கான சுமார் 25 இலட்சம் அமெ­ரிக்க டொலர் (சுமார் 36 கோடி) எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதற்­காக மக்­க­ளி­ட­மி­ருந்து நிதி­தி­ரட்டும் நட­வ­டிக்­கையை கிறிஸ்­டியன், நிகோல் தம்­ப­தி­யினர் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

 

தற்­போது தமது பிள்­ளை­களின் சத்­தி­ர­சி­கிச்சை வெற்­றி­க­ர­மாக நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து, தமக்கு இன்னும் எவ­ரேனும் உதவ விரும்­பினால் தமக்குப் பதி­லாக, இரு சிறு­நீ­ர­கங்­களும் பழு­த­டைந்த ஜொனி டேனியல் எனும் ஒரு வயது குழந்­தை­யொன்­றுக்கு சத்­தி­ர­சி­கிச்­சைகள் செய்­வ­தற்­காக அக்­ கு­ழந்­தையின் பெற்­றோ­ருக்கு உத­வு­மாறு இவர்கள் கோரி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

சத்திர சிகிச்சையின்போது...


 

1980 களின் நடுப்­ப­குதி வரை இத்­த­கைய ஒட்­டிப்­பி­றந்த குழந்­தை­களை பிரிக்கும் சிக்­க­லான சத்­தி­ர­சி­கிச்­சை­க­ளின்­போது, இரு குழந்­தை­களில் மிகப் பல­வீ­ன­மான குழந்­தையை தியாகம் செய்து மற்­றைய குழந்­தையை காப்­பாற்றும் வழக்கம் கைகொள்­ளப்­பட்­டது. ஆனால், இப்­போது தொழில்­நுட்பம் வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

 

இச் ­சத்­திர சிகிச்­சைக்கு தலைமை தாங்­கிய டாக்டர் ஜேம்ஸ் ரி. குட்ரிச் 70 வய­தா­னவர். இதற்­குமுன் 2004 ஆம் ஆண்டு தலை ஒட்­டிப்­பி­றந்த இரு சிறு­வர்­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் அவர் வெற்­றி­க­ர­மாக பிரித்தார்.

 

பிலிப்­பைன்ஸை சேர்ந்த கார்ல் அகுய்ரே, கிளேரன்ஸ் அகெய்ரே எனும் இரு சிறு­வர்­க­ளுக்கு தற்­போது 14 வயது. இவர்கள் இன்னும் பாது­காப்புத் தலைக்­க­வசம் அணிக்­கின்­றனர்.

 

ஜேடன், அணியஸ்


 

இச்­ சத்­தி­ர­சி­கிச்­சையின் மூலம் புகழ் பெற்ற டாக்டர் குட்ரிச் உலகின் பல நாடு­களில் , வேறு உடற்­ப­கு­தி­களில் ஒட்­டிப்­பி­றந்த 5 சோடி குழந்­தை­களை இவர் பிரித்­துள்ளார். இவ் ­வ­ருட முற்­ப­கு­தியில், சிரி­யாவைச் சேர்ந்த இரு இரட்டைக் குழந்­தை­களை சவூதி அரே­பி­யாவில் வைத்து சத்­தி­ர­சி­கிச்சை மூலம் இவர் பிரித்­தெ­டுத்தார்.

 

12 வரு­டங்­களின் பின் இரண்­டா­வது தட­வை­யாக தலை ஒட்­டிப்­பி­றந்த குழந்­தை­களை டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளார். அவர் மேற்கொண்ட சத்திரசிகிச்சைகளில் இதுவே மிக அதிக நேரம் நீடித்தது.

 

வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருடனும் கலகலப்பாக பழகும் டாக்டர் ஜேம்ஸ் குட்ரிச்சின் தாரக மந்திரம் எதையும் இலகுவாக எடுத்துக்கொண்டு  மெதுவாகவும் கவனமாகவும் செய்யுங்கள் (Take it easy and slowly and carefully)    என்பதாகும்.

 

இதை வலியுறுத்தும் வகையில், சத்திர சிகிச்சைக் கூடத்தில் தான் தலையில் அணியும் ‘சேர்ஜிகல் கெப்பை’ ஆமை உருவங்களால் அலங்கரித்துள்ளார் டாக்டர் ஜேம்ஸ் ரி. குட்ரிச்.

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.