Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மது, புகைத்தல் பழக்கமற்ற டொனால்ட் ட்ரம்ப்
2016-11-13 11:54:33

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட்  ட்ரம்ப் வெற்­றி­யீட்­டி­யுள்ளார். 70 வய­தான  இதற்­கு முன் எந்­த­வொரு அர­சியல் பத­வி­யையும் வகிக்­கா­தவர் டொனால்ட் ட்ரம்ப்.

 

பெற்றோருடன் டொனால்ட் ட்ரம்ப்


 

டொனால்ட் ட்ரம்பின் தாத்தா, அதா­வது, தந்­தையின் தந்­தை­யான பிரெட்ரிக் டரம்ப், தற்­போது ஜேர்­ம­னிய பிராந்­தி­ய­மா­க­வுள்ள பவே­ரியா ராஜ்­ஜி­யத்தில் 1869 ஆம் ஆண்டு பிறந்­தவர். 1885 ஆம் ஆண்டு தனது 16 வயதில் அமெ­ரிக்­கா­வுக்கு குடி­பெ­யர்ந்தார்.

 

1901 ஆம் ஆண்டு ஜேர்­ம­னிக்குத் திரும்பி எலி­ஸபெத் கிறிஸ்ட் என்­ப­வரை திரு­மணம் செய்தார். எனினும், அவர் இரா­ணுவ சேவையை தவிர்ப்­ப­தற்­கா­கவே அமெ­ரிக்­கா­வுக்கு சென்­ற­தாக ஜேர்­ம­னிய அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­தினர்.

 

பிரெட்ரிக் ட்ரம்ப், இராணுவ கல்லூரியில்...


 

அப்­போ­தி­ருந்த சட்­டப்­படி இவ்­வாறு இரா­ணுவ சேவையை தவிர்ப்­ப­தற்­காக வட அமெ­ரிக்­கா­வுக்கு குடி­பெ­யர்­வது குற்­ற­மாகும். இதனால் ஜேர்மன் குடி­யு­ரிமை பறிக்­கப்­படும்.

 

பிரெட்ரிக் ட்ரம்ப் பல மேன்­மு­றை­யீ­டு­களை செய்­த­போ­திலும் அவர் நாட்­டி­லி­ருந்து வெளி­யேற நிர்ப்­பந்­திக்­கப்­பட்டார். அதனால் அவரின் குடும்பம் 1905 ஆம் ஆண்டு மீண்டும் அமெ­ரிக்­கா­வுக்குத் திரும்­பி­யது.

 

பிரெட்ரிக் ட்ரம்ப், எலி­ஸபெத் தம்­ப­தி­யி­ன­ருக்கு எலி­ஸபெத், பிரெட்ரிக், ஜோன் என 3 பிள்­ளைகள் பிறந்­தனர். இவர்­களில் பிரெட் எனும் பிரெட்ரிக் கிறிஸ்ட் ட்ரம்ப் (தந்­தையின் பெயரே மக­னுக்கும்) 1905 ஒக்­டோபர் 11 இல் நியூயோர்க்கில் பிறந்தார். ரியல் எஸ்டேட் (வீட்டு மனை) வர்த்­த­கத்தில் வெற்றி பெற்று நியூயோர்க்கின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் வர்த்­த­கர்­களில் ஒரு­வ­ராக அவர் விளங்­கினார்.

 

ஸ்கொட்­லாந்தில் பிறந்த மேரி ஆன் மெக்­லி­யொட்டை 1936 ஆம் ஆண்டு பிரெட்ரிக் ட்ரம்ப் திரு­மணம் செய்தார்.

 

இத்­ தம்­ப­தி­யி­ன­ருக்கு மேரியன், பிரெட்ரிக் ஜூனியர், எலி­ஸபெத், டொனால்ட், ரொபர்ட் என 4 பிள்­ளைகள் பிறந்­தனர்.

 

இவர்­களில் நான்­கா­ம­வர் தான் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்ப். 1946 ஜூன் 14 ஆம் திகதி நியூயோர்க்கில் டொனால்ட் ட்ரம்ப் பிறந்தார்.

 

பின்னர் அவர் பாட­சா­லை­யயில் தவ­றாக நடந்து கொண்­டதால் 13ஆவது வய­தி­லேயே இரா­ணுவப் பாட­சாலை ஒன்­றுக்கு அனுப்­பப்­பட்டார். பின்னர் அவர் பென்­சில்­வே­னியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் உள்ள வொர்ட்டன் கல்­லூ­ரியில் இணைந்தார்.

 

1968 ஆம் ஆண்டு பொரு­ளா­தா­ரத்­துறையில் அவர் பி.எஸ்.சி. பட்டம் பெற்றார். 1968 ஆம் ஆண்டு தனது 22 ஆவது வயதில் தனது தந்­தை யின் ட்ரம்ப் மெனேஜ் மென்ட் கம்­ப­னியி­ல் டொனால்ட் ட்ரம்ப் இணைந்தார்.

 

1974 ஆம் ஆண்டு அந்­நி­று­வ­னத்தின் தலை­வ­ரா­ன­துடன் அதை ‘ட்ரம்ப் ஓர்­க­னை­ஸேஷன்’ என பெயர் மாற்­றினார். டொனால்ட்டின் தந்தை பிரெட் ட்ரம்ப் 1999 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் கால­மானார்.

 

அவ­ருக்கு முன்­ன­ராக பிரெட் ட்ரம்ப்பின் மூத்த மக­னான பிரெட் ஜூனியர், அதிக மது­பா­வனை கார­ண­மாக 1981 அம் ஆண்டு தனது 43 ஆவது வயதில் கால­மானார்.

 

டொனா ல்ட் ட்ரம் பின் தந்­தை ஃ­பிரெட் டிரம்ப் மதுப் பழக்­கத்தால் 1999 ஆம் ஆண்டு 43 ஆவது வயதில் கால­மானர். தனது சகோ­த­ரி­ரி­ட­மி­ருந்த பாடம் கற்­றுக்­கொண்­ட­தாக கூறும் டொனால்ட் ட்ரம்ப் மது அருந்­து­வ­தில்லை. அத்­துடன் சிகரெட் புகைப்­ப­து­மில்லை.

 

பல்­வேறு வகையில் மோச­மாக விமர்­சிக்­கப்­படும் டொனால்ட் ட்ரம்பின் சிறந்த குணாம்­சங்­களில் ஒன்­றாக இதை கரு­தலாம். ட்ரம்ப் தனது குடும்ப வணி­கத்தை, நியூயோர்க் மாநி­லத்தின் புரூக்லின் மற்றும் குவீன்ஸ் பகு­தி­களில் நடத்­திய குடி­யி­ருப்புத் திட்­டங்­க­ளி­லி­ருந்து, கவர்ச்­சி­க­ர­மான மன்­ஹாட்டன் திட்­டங்­க­ளுக்கு மாற்றி, மோச­மான நிலையில் இருந்த கமோடார் ஹோட்­டலை, கிராண்ட் ஹையாட் ஹோட்­ட­லாக மாற்­றி­ய­துடன், ஐந்­தா­வது அவென்­யூவில் 68 மாடிகள் கொண்ட டிரம்ப் டவரைக் கட்­டினார்.

 

டிரம்ப் பிளேஸ், டிரம்ப் டவர் மற்றும் டிரம்ப் சர்­வ­தேச ஹோட்டல் போன்ற தனது பெயரைத் தாங்­கிய பல கட்­ட­டங்­களை நிர்­மா­ணித்தார். இது போன்ற டிரம்ப் டவர்கள் உலகில் மும்பை, இஸ்­தான்புல் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்­களில் கட்­டப்­பட்­டன.

 

ஹோட்­டல்­க­ளையும், சூதாடும் விடு­தி­க­ளையும் நிர்­மா­ணித்தார் டிரம்ப். ஆனால், அந்த நிறு­வ­னங்­களில் நான்கு நிறு­வ­னங்கள் வங்­கு­ரோத்­தா­கின. கேளிக்கை வர்த்­த­கத்­திலும் டிரம்ப் வெற்றி கண்டார்.

 

1996 ஆம் ஆண்­டி­லி­லி­ருந்து 2015 வரை அவர் மிஸ் யுனிவர்ஸ், மிஸ் யு.எஸ்.ஏ, மிஸ் டீன் யூ.எஸ்.ஏ போன்ற அழகிப் போட்­டி­களை நடத்­தினார். என்.பி.சி. அலை­வ­ரி­சையில் இப் ­போட்­டிகள் ஒளி­ப­ரப்­பா­கின.

 

ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரத்தை ஆரம்­பித்த முதல் கூட்­டத்­தி­லேயே, மெக்­ஸிகோ குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்­பாக கூறிய கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. அதை­ய­டுத்து டொனால்ட் ட்ரம்­பு­ட­னான ஒப்­பந்­த­ததை என்.பி.சி. முறித்­துக்­கொண்­டது.

 

 

2005ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் மெலனியா திருமணத்தின்போது கிளிண்டன் ஹிலாரியுடன்...


 

இப்­ போட்­டி­களை நடத்தும் உரி­மையை  டபிளயூ.எம்.ஈ நிறு­வ­னத்­துக்கு டொனால்ட் ட்ரம்ப் விற்­று­விட்டார். சில திரைப்­ப­டங்கள், தொலைக்­காட்சித் தொடர்­களில் டொனால்ட் ட்ரம்ப் நடித்­துள்ளார்.

 

என்.பி.சியில் ஒளி­ப­ரப்­பான ‘அப்­ரென்டிஸ்’ எனும் ரியா­லிட்டி தொடரை டொனால்ட் ட்ரம்ப் தயா­ரித்து அந் ­நி­கழ்ச்­சி­யையும் அவர்  நடத்­தினார். இதற்­காக தனக்கு 213 மில்­லியன் டொலர்கள் தரப்­பட்­ட­தாக அவர் குறிப­பிட்­டி­ருந்தார். ஹொலிவூட் வோக் ஒவ் ஃபேமில் 2007 ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் சேர்க்­கப்­பட்டார்.

 

சில புத்­த­கங்­களை அவர் எழு­தி­யி­ருக்­கிறார். (இது தொடர்­பாக சர்ச்­சை­களும் உள்­ளன). டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின்  156 ஆவது பெரும் செல்வந்தர் எனவும் உலகின்  324 ஆவது பெரும் செல்வந்தர் எனவும் போர்ப்ஸ் சஞ்சிகை இவ் வருடம் தெரிவித்திருந்தது.

 

பல ஆண்­டு­க­ளா­கவே ஜனா­தி­பதி பத­விக்குப் போட்­டி­யிடும் வாய்ப்­பு­களை எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருந்தார் ட்ரம்ப். ரொஸ் பெரோ என்­பவர் தொடங்­கிய ‘சீர்­தி­ருத்தக் கட்சி’ எனும் அனா­ம­தேயக் கட்­சியின் சார்பில் 2000 ஆம் ஆண்டு வேட்­பா­ள­ரா­கு­வ­தற்கு அவர் முன்­வந்தார். பின்னர் அவர் வாபஸ் பெற்றார்.

 

2000 ஆம் ஆண்டு அவர் குடி­ய­ரசுக் கட்­சிக்கு வந்தார். ஒபாமா அமெ­ரிக்­காவில் பிறக்­க­வில்லை என 2012 ஆம் ஆண்டு சர்ச்சை கிளப்­பி­யவர் இவர்.

 

குடும்பம்


குடும்பத்தினருடன்...


 

டொனால்ட் ட்ரம்ப் 3 தட­வைகள் திரு­மணம் செய்­தவர். அவ­ருக்கு 5 பிள்­ளைகள் றஉள்­ளனர். அவரின் முதல் மனை­வி­யான இவானா ஸெல்­னிக்­கோவா என்ற செக் நாட்டைச் சேர்ந்த மெய்­வல்­லுநர் வீராங்­க­னையும், மொடலும் ஆவார்.

 

டொனால்ட் ஜூனியர் (1977 ஆம் ஆண்டு), இவான்கா (1981), எரிக் (1984) ஆகிய 3 பிள்­ளைகள் பிறந்தர். பின்னர் 1993 ஆம் ஆண்டு மர்லா மேப்­பிள்ஸை டொனால்ட் ட்ரம்ப் திரு­மணம் செய்தார். இத் ­தம்­ப­திக்கு டிஃபனி என்ற மகள் பிறந்தார். 1999 இல் இவர்கள் விவா­க­ரத்து செய்­தனர்.

 

2005 ஆம் ஆண்டில் மெல­னி­யாவை திரு­மணம் செய்து கொண்டார் ட்ரம்ப். தற்­போது 46 வய­தான மிலே­னியா ட்ரம்ப், யூகோஸ்­லா­வியின் ஒரு பகு­தி­யாக இருந்த ஸ்லோவேனியாவில் பிறந்தவர். 2006 ஆம் ஆண்டுதான் அவர் அமெரிக்கப் பிரஜையானார்.

 

இத் தம்பதியின் மகனான வில்லியம் பரோன் ட்ரம்ப் 2006 ஆம் ஆண்டு பிறந்தார். டொனால்ட் ட்ரம்பின் மூத்த சகோதரியான மேரியன் ட்ரம்ப் பெரி 1999 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமெரிக்க மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவி வகித்தார்.

 

மேரியன் ட்ரம்ப் பெரியை இப் பதவிக்கு நியமித்தவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனின் கணவரான அப்போதைய ஜனாதிபதி பில் கிளின்டன்.

 

கிளின்டன் குடும்­பத்­தினர் ஒரு காலத்தில் ட்ரம்ப்­பின் நண்­பர்கள் என்­பது வேறு­ க­தை...

 

- நரேன்

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.