Thursday  19 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
அதிக பணத்துக்கு ஆசைப்பட்டேன் எச். ஐ..வி தொற்றியது
2016-12-04 11:35:37

(சிலாபம் திண்­ண­னூரான்)

டிசம்பர் 1 ஆம் திகதி உலக எய்ட்ஸ் விழிப்­பு­ணர்வு தினம் அனுஷ்­டி­க்கப்­பட்­டது. இந்­நி­லை­யில், பணத்­தா­சையால் தவ­றான வழியில் சென்­று, எச்.ஐ.வி. தொற்­றுக்­குள்­ளான பெண் தனது அவலக் கதையை கூறு­கிறார்.

 


'செல்­வத்தை இழந்தால் கேடு இல்லை. உடல் நலத்தை இழந்தால் கேடு விளையும். ஒழுக்­கத்தை இழந்தால் எல்­லா­வற்­றையும் இழக்க வேண்­டி­ய­து தான்.

 

இது நான் கற்றுக் கொண்ட பாடம். வாழ்க்­கையை பல­முறை இழந்து புத்­தி­கெட்டுப் போய் இன்று காய்ந்­து­ போன கரு­வாடைப் போலா­கி­விட்டேன்.

 

எனது பெயர் கௌரி. (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) வயது 43. இரண்டு கண­வர்­கள், முதல் கண­வ­ருக்கு மூன்று பிள்­ளைகள். மூத்­தவள் திரு­மணம் முடித்­து­விட்டாள். இளை­யவள் பாட­சாலைக் கல்­வியை முடித்­து­விட்டாள். மகன் கல்வி கற்­கின்றான்.

 

எனது கணவர் (முத­லா­வது) எனது 35 ஆவது வயதில் மர­ண­மானார். இவர் பழ வர்த்­த­கர­ாகவும் வீட்டு தர­க­ரா­கவும் பணி­யாற்­றி­யவர். எனது 19 வயதில் இவரைக் காதலித்து திரு­மணம் செய்து கொண்டேன்.

 

எனது அழகு அவரை வசீ­க­ரித்­தது. அப்­போ­து, எனது கூந்தல் எனது குதிக்­கால்­வரை நீண்டு குதி­ரையின் வாலைப் போன்று இருக்கும். வீதியில் நடந்து சென்றால் எல்­லோ­ரையும் எனது கூந்தல் நின்று பார்க்க வைக்கும்.

 

பல பெண்கள் பொறா­மைப்­ப­டு­வார்கள். எனது முதல் கணவர் எனக்கு எந்தக் குறையும் வைக்­க­வில்லை. நன்­றா­கவே கவ­னித்து என்னை சிங்­கா­ரி­யாக வாழ­வைத்தார்.

 

அந்த சிங்­கார வாழ்க்­கையின் அறு­வ­டை­யாக அடுத்­த­டுத்து மூன்று பிள்­ளை­களை இவ்­வு­ல­குக்கு கொண்டு வந்தோம். இடையில் அவர் சர்க்­கரை வியா­தி யால் அவ­திப்­பட்டார்.

 

பல வைத்­தியம் செய்தும் பலன் கிடைக்­க­வில்லை. இறு­தியில் 2007 இல் அவர் கால­மானார். அவரின் மர­ணத்தை அடுத்து எனது வாழ்க்கை புரண்­டது.

 

இரு பிள்­ளைகள் பாட­சாலை சென்­றனர். ஒரு வயதில் ஆண் மகன். பொரு­ளா­தார நெருக்­கடி என்னை நெருக்­கி­யது. வீட்டு வாட­கை, பிள்­ளை­களின் கல்விச் செலவு என செலவுப் பட்­டியல் நீண்டு வளர எனது கண­வரின் சேமிப்பும் கரைந்­தது.

 

நான் சிறு வய­தி­லி­ருந்தே எனது இயற்கை அழகை பாது­காத்து வந்தேன். 'மேக் அப்' செய்து அழகைச் சீர­ழித்­துக்­கொள்ள மாட்டேன். இந்­நி­லையில், அடுத்த வீட்டு மாமி­யி­ட­மி­ருந்து சகோ­தர மொழி ஞாயிற்­றுக்­கி­ழமை பத்­தி­ரிகை ஒன்றை பொழுது போக்­கு­வ­தற்­காக வாங்­கினேன்.

 

சுமார் ஒரு மணித்­தி­யா­லம் வரை பத்­தி­ரி­கையை வாசித்­ததன் பின்னர் விளம்­பரப் பகு­தியை கையி­லெ­டுத்தேன். அந்த விளம்­பரம் என் வாழ்க்­கை­யையே புரட்டிப் போட்­டு­விட்­டது.

 

ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்ட நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­
உள்­ள, பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்­டுகள் தேவை எனவும் மாதம் 75 ஆயி­ரத்­துக்கு மேல் சம்­பா­திக்­கலாம் எனவும் அந்த விளம்­ப­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

 

இந்த விளம்­ப­ரத்தில் காணப்­பட்ட '75 ஆயிரம்' என் மன­திற்குள் தலை தூக்கி கூத்­தா­டி­யது. இக் ­கூத்து மறுநாள் என்னை குறிப்­பிட்ட நிறு­வ­னத்­திற்கு அழைத்துச் சென்­றது.

 

அந்­ நி­று­வ­னத்­துக்கு சென்றேன். நல்ல மரி­யா­தை­யுடன் நிர்­வாகி என்னை அழைத்து விப­ரங்­களை பெற்றார். என் அழகு அவரை சொக்க வைத்­து­ விட்­டது.

 

அங்­குள்ள மற்­றைய இளம் யுவ­திகள் சிங்­கா­ரமாய் இருந்­தனர். அவர்கள் என்­னுடன் பேச்சைத் தொடுத்­தனர். நாங்கள் எல்லாம் உண்­ணு­வ­தற்கே வசதி இல்­லாது மர­வள்ளிக் கிழங்கை தின்­ற­வர்கள்.

 

இங்கு வந்த பின் பெரும் வச­தி­யோடு வாழ்­கின்றோம் என ஆசை வார்த்­தை­களை கொட்­டினர். நான் அப்­போது சொர்க்­கத்­துக்கே போய்­விட்டேன். அவர்­களின் கைகளில் ஒரு இலட்ச ரூபா பெறு­ம­தி­யான கைய­டக்கத் தொலை­பே­சி கள் இருந்­தன.

 

இதுவும் என்னை ஆசைக்குள் தள்­ளி­விட்­டது. ஆனால், என்­ன­வி­த­மான தொழில் என எவரும் தெரி­விக்­க­வில்லை. நானும் முதலில் சம்­ம­தித்­து­விட்டு மறுநாள் தொழி­லுக்குச் சென்றேன். அது 2008 ஆம் ஆண்டு.

 

முதல்நாள் ஆயுர்­வேத முறைப்­படி உடல் பிடித்­து­வி­டல், தேய்த்­தல், சிகிச்சை முறைகள் எனக்குப் பயிற்­று­விக்­கப்­பட்­டன. இரண்­டொரு நாட்­களின் பின்பே அங்கு இடம்­பெறும் தொழில் முறைகள் எனக்கு தெரி­ய ­வந்­தது.

 

அதிர்ந்து போய்­விட்டேன். குடும்ப வறுமை என்னை அதற்குள் தள்­ளி­யது.

 

பல நாட்கள் மனத் துய­ரத்­துடன் இத் தொழிலை புரி­கையில் ஏனைய பழைய தெர­பிஸ்ட்கள் தங்­களின் வரு­மா­னத்தை தினம் தினம் காட்டி என்னை ஊக்­கப்­ப­டுத்­தினர்.

 

மனம் மாறி­யது. நானும் அவர்கள் வெட்­டிய குழிக்குள் விழுந்தேன். குழிக்குள் விழுந்த என்னால் பழைய வாழ்க்­கைக்குத் திரும்ப இய­ல­வில்லை. எனது அழகு பலரை பர­வ­சப்­ப­டுத்­தி­யது.

 

மூட்டை சுமக்கும் நாட்­டாமை முதல் பல தரப்­பட்ட வர்த்­த­கர்­கள், உயர்­மட்ட அதி­கா­ரிகள் என அனைத்துத் தரப்­பி­னரும் இங்கு வரு­வார்கள்.

 

எனக்கு வாடிக்­கை­யாளர்கள் பெருகப் பெருக பணம் என் கைகளில் தவழத் தொடங்­கி­யது. இதனால் இந்­ நி­று­வ­னத்தில் எனக்கு பெரும் மௌசும், நல்ல கிராக்­கியும் வளரத் தொடங்­கி­ன.

 

இந்நிலையில் உடல் பிடித்­து­விடும் இத் தொழிலை மேலும் நான் வளப்­ப­டுத்திக் கொள்ள ஆயுர்­வேத திணைக்­க­ளத்தின் ஊடாக பயிற்சி பெற்று சான்­றி­த­ழையும் பெற்றேன்.

 

இவ்­வா­றான வாழ்க்கைப் போராட்டம் இடம்­பெ­று­கையில், எனது வீட்­டுக்கும் அடுத்த வீட்டில் வசிக்கும் இளைஞன் தினமும் என்னைப் பார்த்து மெல்­லிய சிரிப்பு சிரித்து கண் சிமிட்­டுவான்.

 

நான் கண் சிமிட்ட மாட்டேன். இரவு 9, 10 மணி­ய­ளவில் தொழில் முடிந்து எனது உடல் எல்லாம் வலி எடுக்க 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை உழைத்த பணத்­துடன் களைப்­போடு வீடு திரும்­புவேன்.

 

அந்நேரத்­தில் எனக்­காக வீதியில் காத்து நிற்பான்' என்ற கௌரியின் பேச்சை நிறுத்தி நெடு நேர காத்­தி­ருப்­புக்குப் பின் நங்­கூ­ரத்தை போட்டோம்.

 

'ஏன் அந்த இளைஞன் உங்­களின் மீது கண் வைத்தான். பணத்தை பறிக்­கவா?' என்றதும், வயிற்றில் புழு நெளி­வதைப் போன்று நெளிந்து 'ச்சே! அதெல்லாம் ஒன்றும் இல்லை எனக் கூறிய கௌரி, தன் முகத்தை விரலால் தடவிக் கொண்­டு, தொடர்ந்து பேசினார்.

 

'சங்கர் எனும் இளைஞர் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்னை திரு­மணம் செய்து கொள்­ளு­மாறு வற்­பு­றுத்­தினார். அப்­போது அவ­ருக்கு வயது 20. எனக்கு வயது 35.

 

அவர் வயதளவில் வீட்டில் மகள் இருந்தாள். அந்த இளை­ஞனின் பிடி­வாதம் என்னை சிந்­திக்கத் தூண்­டி­யது. எனக்கு இப்­போது துணை தேவை. பாது­காப்புத் தேவை. மூன்று பிள்­ளைகள் இவர்­களின் எதிர்­காலம் எல்லாம் என்னை சிந்­திக்க வைத்­தது.

 

அந்த இளை­ஞனின் பிடி­வாதம் ஒரு புறம். மறு­புறம் காலை­யி­லி­ருந்து உடலை வருடி உடல் வலி­யுடன் வீட்­டுக்கு வந்தால் இரவில் தூக்கம் இல்லை. என்­னோடு இருந்த தெர­பிஸ்ட்­களும் என்னைப் போன்றே கண­வனை இழந்­த­வர்­களும் கண­வனால் கைவி­டப்­பட்­ட­வர்­க­ளுமே. அவர்­க­ளிடம் ஆலோ­சனை கேட்டேன்.

 

'போடி முட்டாள். நாங்கள் எல்­லோரும் ஓர் ஆணை பாது­காப்­புக்­காக வைத்­தி­ருக்­கிறோம். உழைக்கும் பணத்தை அவனின் கண்ணில் காட்­டக்­கூ­டாது.

 

அவனை அதட்­டி, பயம் காட்டி நமக்கு அடி­மை­யாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்­றனர். அவர்­களின் பதில் என்னை உசுப்பி விட்­டது. எனக்கும் அந்த இளை­ஞ­னுக்­கு­மான காத­லையோ திரு­ம­ணத்­தையோ சமூகம் ஏற்க மறுக்கும்.

 

எனக்கு குரூ­ர­மான தண்­ட­னையை சமூகம் வழங்கும். துணிந்து சங்­கரை 2008  இல் எனது வீட்­டுக்குள் நுழைந்து குடும்பம் நடத்த உரிமை வழங்­கினேன். பலர் கேலி செய்­வார்கள் என்ற பய­மின்றி வீதியில் இரு­வரும் பய­ணித்தோம்.

 

என்னை மறு­மணம் செய்ய முனைந்த பலர் திகைப்­புற்­றனர். எனது தொழில் எல்லாம் அந்த இளை­ஞ­ருக்குத் தெரியும். ஏனை­யோ­ருக்கு நான் தனியார் மருத்­து­வ­ம­னை­ ஒன்றில் நேர்ஸ் (தாதி) வேலை செய்­வ­தாக கூறி வந்தேன்.

 

சங்கர் கல்­வி­ய­றிவு இல்­லா­தவர். அவர் வேலைக்குப் போக மாட்டார். கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. நான் வேலைக்கு போனதும் எனது ஒன்­றரை வயது மகனை அவரே பார்த்துக் கொள்வார்.

 

எனது உழைப்பின் மூல­மாக பிள்­ளை­களை படிக்க வைத்தேன். குடும்ப அங்­கத்­த­வர்­க­ளுக்கு உத­வினேன். இதனால் சங்கர் என்­னுடன் வாழ்­வ­தற்கு குறைந்­த­ளவே எதிர்ப்புக் காட்­டினார்.

 

பணம் அவர்­களின் வாயை மூட வைத்­தது. இரு­வரும் குடும்­ப­மாக வாழ்ந்­தாலும் அவரை நான் பதிவு திரு­ம­ணமோ எனக்குத் தாலி கட்­டவோ அனு­ம­திக்­க­வில்லை.

 

எங்கள் இரு­வ­ருக்­குள்ளும் நல்ல பாசம் இருந்­தது. என் மீது பெரும் பாசத்தை சங்கர் பொழிய அதை­விட இரு மடங்கு பாசத்தை நான் பொழிந்தேன். இருந்­தாலும் எனது தெரபிஸ்ட் தொழிலை கைவிட மனம் இடம் கொடுக்­க­வில்லை. காரணம் பண ஆசையே.

 

2008 ஆம் ஆண்­டு ­வரை ஐந்து முறை இரத்த தானம் செய்­துள்ளேன். 2009 ஆம் ஆண்டு இரத்த தானம் செய்தேன். இந்த இரத்­தத்தை பரி­சோ­தனை செய்­த­போது ஏதோ கிருமி உள்­ளமை தெரி­ய­ வந்­தது.

 

இந்த  இரத்த மாதி­ரி­யை தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு வேலைத் திட்டப் பிரிவு மீளவும் பரி­சோ­த­னையை மேற்­கொண்­ட­போது எனது இரத்­தத்தில் எச்.ஐ.வி. தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

சங்கரின் இரத்­தமும் சோத­னைக்­குட்­பட்­டது. அப்­போது அவ­ருக்கும் எச்.ஐ.வி. தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இரு­வரும் இர­க­சி­ய­மாக எச்.ஐ.வி. தொற்று இருப்­பதை வெளி­வி­டாது மறைத்து வாழ்ந்தோம்.

 

எச்.ஐ.வி. தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­போதும் எனது வறுமை என்னை விட­வில்லை. தொடர்ந்தும் மசாஜ் கிளினிக் தொழிலை செய்தேன். அப்­போது கொழும்பு 5 இல் ஒரு மசாஜ் நிலை­யத்தில் தொழில் புரிந்தேன்.

 

இது பாவம் இல்­லையா? எனக் கேட்டோம். படார் என மின்­சா­ரத்தில் கைபட்­டது போல் துடி­து­டித்து எங்­களைப் பார்த்த கௌரி, 'எனக்கு பணம் தேவை என்ற நோக்­கமே கார­ண­மாகும்.

 

பிள்­ளை­களின் எதிர்­காலம் இதை­யெல்லாம் நினைக்­கும்­போது பயம் என்னை கௌவிக் கொள்­கின்­றது. எச்.ஐ.வி. தொற்றை பரவ விடும் எண்ணம் கொஞ்சம் கூட இருக்­க­வில்லை.

 

எனக்கு எவரின் துணையும் இல்லை. முத­லா­வது கணவர் இறந்தப் பின்னர் எனது மாமி­யா­ரான அவரும் என்னை கண்டுகொள்­வ­தில்லை. நான் செய்­வது பாவம் தான் அதை ஏற்றுக் கொள்­கின்றேன்.

 

எவ்­வாறு இரு­வ­ருக்கும் எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டது? எனக் கேட்டோம். எங்­க­ளது கேள்­வியின் வலி கௌரிக்கு அமி­லத்தின் கொதிப்பை விட அதி­க­மாக இருப்­பது அவ­ரது முகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்­டி­யது.

 

எச்.ஐ.வி. தொற்று எங்­க­ளுக்குள் எவ்­வாறு தொற்­றி­யது என்­பது இது­வரை தெரி­ய­வில்லை. சங்கர் மீது முழு­மை­யான நம்­பிக்கை உள்­ளது. எனக்கும் என் மீது நம்­பிக்கை உண்டு.

 

உண்­மையில் மசாஜ் கிளி­னிக்கில் உடம்பை பிடித்­து­விடும் சிகிச்சை இடம்­பெற்­றாலும் எங்­களின் மேல­திக வரு­மா­னத்­துக்­காக அதா­வது டிப்ஸ் பெறு­வ­தற்­காக மறை­மு­க­மான பாலியல் செயல்­க­ளிலும் ஈடு­பட்டோம்.

 

இதன்மூல­மா­கவே நாம் மேல­திக வரு­மானம் பெற்றோம். இது ஆயுர்­வேத சிகிச்சை சட்­ட­வி­தி­க­ளுக்கு விரோ­த­மான செய­லாகும்' என்றார்.

 

பாலியல் தொழிலில் ஈடு­ப­டு­வீர்­களா? எனக் கேட்டோம். அவர் எவ்­வித பயமும் இல்­லாது சில அதி­ர­டி­யான பதிலை எம் ­மீது வீசினார். 'என்னை நாடி மசாஜ் கிளினிக் வரும் வழ­மை­யான வாடிக்­கை­யா­ளர்கள் அழைக்­கும்­போது ஹோட்­டல்­களில் அறை எடுத்து தங்­குவேன்.

 

என்னை அழைத்துச் செல்லும் நபரே முழுச் செல­வையும் ஏற்றுக் கொள்வார்.
கனடா தமி­ழர்கள் பலர் எனக்கு நிரந்­தர வாடிக்­கை­யாளர்­க­ளாக உள்­ளனர்.

 

எனது தொலை­பேசி இலக்­கத்தை இங்கு வரும்­போது முதலில் பெற்றுச் செல்­வார்கள். பின் இலங்கை வரு­கையில் தொலை­பேசி மூல­மாக தொடர்பு கொள்­வார்கள்.

 

இவர்கள் ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளுக்கே அழைத்துச் செல்­வார்கள். சுமார் 4, 5 நாட்கள் தொடர்ச்­சி­யாக இவர்­க­ளுடன் இருப்பேன். இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேல் பணம் தரு­வார்கள்.

 

ஒரு வாடிக்­கை­யா­ள­ருடன் 5 நட்­சத்­திர ஹோட்­டலில் 14 தினங்கள் இருந்தேன். பின் திக­தி­யிட்ட ஐம்­ப­தா­யி­ரத்­திற்­கான காசோ­லையை வழங்கிச் சென்றார்.

 

காசோ­லையை பண­மாக வங்­கியில் மாற்ற வேண்­டிய திக­திக்கு முதல் நாள் அவர் எனக்கு பணத்தை கொடுத்­து­விட்டார். இவரும் கன­டாவைச் சேர்ந்த வட பகுதி இளைஞர்.

 

இத்­த­கை­ய­வர்கள் மூல­மாக எச்.ஐ.வி. தொற்று எனக்குள் தொற்றி சங்­க­ருக்கு பரவி இருக்­கலாம் என சந்­தே­கிக்­கின்றேன். சங்கர் முறை­யாக சிகிச்சைப் பெறா­ததால் கடந்த வருடம் மர­ண­மானார்.

 

சங்கர் மர­ணிக்கும் தரு­ணத்தில் தொழில் செய்தேன். சங்­கரின் மர­ணத்தின் பின்னர் எனக்கும் எச்.ஐ.வி. தொற்று இருப்­பது தெரி­ய­வரவே வீட்டை விட்டு துரத்­தப்­பட்டேன்.

 

நான் இன்­னொ­ரு­வரை பணத்­துக்­காக மகிழ்­வித்து தேடிய ஆடம்­பர பொருட்கள் அனைத்­தையும் குறைந்த விலைக்கு விற்று பிள்­ளை­க­ளுக்கு கொடுத்தேன்.

 

எனது மூத்த மகள் அவரின் கண­வ­ரோடு இணைந்­து, தனது வீட்­டுக்கு நான் வரு­வ­தற்கு தடை விதித்­து­விட்டாள். பிள்­ளைகள் எனது அம்­மா­வி­டமும் மாமி­யி­டமும் வாழ்­கின்­றனர்.

 

இப்­போது நான் மசாஜ் நிலை­யத்­திலும் தொழில் செய்ய இயலாது தடை விதிக் கப்பட்டுள்ளது' என்றார் கௌரி.

 

வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தவறான விளம்பரம் மூலம் என்னைப் போன்று எத்தனையோ இளம் பெண்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர்.

 

இவ்­வாறு உழைக்கும் பணமும் நிரந்­த­ர­மாக நிற்­ப­தில்லை. பலர் என்னைப் போன்று எச்.ஐ.வி. தொற்­றுடன் மசாஜ் நிலை­யங்­களில் தொழில் புரி­யக்­கூடும். எச்.ஐ.வி. நோயா­ளர்­களை குடும்பம் ஒதுக்கக் கூடாது.

 

இவ்­வா­றா­ன­வர்­க­ளுடன் உட­லு­றவு கொள்­ளக்­கூ­டாது. இந்­நோ­யினால் முழுக் குடும்­பமும் பாதிக்­கப்­ப­டு­கி­றது. இன்று என் பிள்­ளை­களே ஒதுக்கி விட்­டனர்.

 

என் அழகைக் காட்டி பணம் பணமாய் உழைத்த நான் இன்று இருக்க இட­மில்­லாது பணம் இல்­லாது நிம்­ம­தியைத் தொலைத்து எங்­களைப் போன்­ற­வர்­க­ளுக்கு அடைக்­கலம் தரும் திரு­மதி பிரின்சி மங்­க­லிக்­காவின் 'பொசிட்டிவ் வுமன்ஸ் நெட்வேர்க் (Positive Women's Network) நிறு­வ­னத்தில் அடைக்­கலம் பெற்­றுள்ளேன்' என கௌரி தன்னை மீறிய உள்­ளார்ந்த வலியை அவரால் தாங்கி கொள்ள முடியாத நிலையில் எம்மிடம் தெரிவித்தார்.

 

 

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.