Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'சிறந்த உடல் கட்டழகனாகுவதே எனது இலட்சியம்'
2017-01-01 15:17:54

உடற்­கட்டு (பொடி பில்டிங்) கலையே தனது வாழ்க்கை என்­கிறார் சமீர். 29 வய­தான சமீர், கொழும்பைச் சேர்ந்­தவர். உடற்­கட்டுக் கலையில் சாதிக்க விரும்பும் அவர் மற்­ற­வர்­க­ளுக்கும் பயிற்­சி­ய­ளிக்­கிறார்.

 

 

தன்னைப் பற்றி அவர் கூறு­கையில், “எனது பெயர் சமீர். 1987ஆம் ஆண்டு பிறந்தேன். கொழும்பில் வசிக்­கிறேன். மட்­டக்­கு­ளியில் உள்ள பாட­சா­லை­யொன்றில் பல கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் பாட­சாலைக் கல்­வியை நிறைவு செய்தேன்.

 

12 வயது இருக்­கும்­போது படித்­துக்­கொண்டே அச்­சகம் ஒன்றில் பகு­தி­நேர வேலை செய்தேன். ஒரு அண்ணா, இரண்டு தம்­பிகள், ஒரு தங்கை கொண்ட எனது குடும்­பத்தில், அப்­பா­வுக்கு வய­தா­ன­தாலும் வேலை இல்­லாத கார­ணத்­தி­­னாலும், நான் 16வய­தி­லேயே வேலை க்கு செல்லும் நிலை­மை­யாகி விட்­டது.

 

எனினும். எனது நீண்ட நாள் ஆசையும், கன­வு­மான ஜிம்மில் 19 வய­தி­லேயே பயிற்­சியில் ஈடு­படத் தொடங்­கி­விட்டேன். ஆரம்­பத்தில் எனது நிறை 41 கிலோ­கிராம் இருந்­தது. இப்­போது எனது நிறை 78 கிலோ­கிராம்.    

 

 

எனது  இலட்­சியம் ஒரு சிறந்த உடல் கட்­ட­ழ­க­னா­கு­வதே. இதனால், வேலை பார்த்­துக்­கொண்டே எனது கடை முத­லா­ளியின் சம்­ம­தத்­துடன் பொடி பில்டிங் பயிற்­சி­களில் ஈடு­பட்டு, போட்டி ஒன்றில் கலந்து கொண்டேன்.

 

அந்தப் போட்­டியில் வெற்றிவாகை சூடினேன். அப்­போ­து தான் பொடி பில்டிங் தான் எனது வாழ்க்கை என்று புரிந்து கொண்டேன். பல போட்­டி­களில் வெற்றி பெற்று வந்தேன்.

 

25 வயதில் திரு­மணம் செய்து, பின் 10 வருட காலம் வேலை பார்த்த கடையில் இருந்து விலகி, ஒரு வருட காலம் முச்­சக்­க­ர­வண்டி ஓட்­டினேன். பின்னர் என்னைப் போன்று உடற்­கட்டில் ஆர்­வ­மான இளை­ஞர்­களை உரு­வாக்க வேண்டும் என நினைத்தேன். 

 

பல இளை­ஞர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளித்து உறு­தி­யான உடல் கட்­ட­மைப்­பு­ களை உரு­வாக்கி போட்­டி­களில் கலந்துக்கொள்ள வைத்­தி­ருக்­கின்றேன். அவர்­க­ளோடு நானும் இணைந்து பல போட்­டி­களில் வெற்றி வாகை சூடி­யி­ருக்­கின்றேன்.

 

 

பல தோல்­வி­க­ளையும் சந்­தித்­தி­ருக்­கின்றேன். நான் பல வரு­டங்­க­ளாக பயிற்­சி­ய­ளித்த ஜிம்­மி­லி­ருந்து வரு­மானப் பற்­றாக்­குறை கார­ண­மாக விலக வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது.

 

அதன்பின் அஷிம் என்ற நண்­பனின் அறி­மு­கத்­தாலும் உத­வி­யாலும் நான். தற்­போ­ழுது சுப்பர் ஜிம்மில் தலைமைப் பயிற்­று­ந­ராக (ஹெட் கோச்) ஆக பணி­யாற்றி வரு­கின்றேன்.

 

உடல் கட்­ட­மைப்பில் சாதிக்க வேண்டும் என்­பது எமது இலட்­சியம். அதை அடை­வ­தற்கு உதவி செய்­வ­தற்­காக இந்த முயற்­சியை மேற்­கொண்­டுள்ளேன். இங்கு வந்தபின்னர் பல இளை­ஞர்­களை ஆரோக்­கி­ய­மான உடற் கட்­ட­மைப்பு மிக்­க­வர்­க­ளாக உரு­வாக்­கி­யுள்ளேன்.

 

எமது வருங்­கால இளை­ஞர்­களை மது­பா­வ­னை­யின்றி நற்
­ப­ழக்­கங்­க­ளு­டனும், ஆரோக்­கிய மிக்க உடற் கட்­ட­மைப்­பு­டனும் வாழ வேண்டும் என்­பதே எனது ஆசை.

 

இதற்­காக நான் பல இளை­ஞர்­களை பல உடற்­ப­யி
ற்­சி­களை (யோகா, ஓடுதல், நீச்சல், விளை­யாட்டு, நடத்தல்) போன்­ற­வற்றில் ஈடு­பட வேண்­டு­மென்று அறி­வு­ரை­க­ளையும் வழங்­கி­யுள்ளேன்.

 

மது­போ­தைக்கு அடி­மை­யான பல இளை­ஞர்கள் எனது வழி­காட்­ட­லுக்கு இணங்கி செயற்­பட்டு, தற்­போது மதுப்ப­ழக்­க­மின்றி சமூ­கத்தில் உலா வரு­கின்­றனர்.

 

உடற்­ப­யிற்­சியின் மூல­மான பயன்­களில் பிர­தா­ன­மாக, இரத்­தத்தில் கொழுப்பின் அளவு குறை­கின்­றது. உடற்­ப­யிற்சி செய்யும் நேரம் அதி­க­ரிக்கும் போது, கரையும் கொழுப்பின் அளவும் அதி­க­ரிக்­கின்­றது.

 

இதனால் உட­லி­லுள்ள கொழுப்பு வேக­மாகக் கரைந்து உட­லுக்குத் தேவை­யான சக்­தியை வழங்­கு­கி­றது.

 

ஆகவே உடல் எடையைக் குறைக்க உடற்­ப­யிற்சி உத­வு­கின்­றது. உடற்­ப­யிற்­சியில் ஈடு­படும் போது, இரத்த ஓட்டம் துரி­தப்­ப­டு­கின்­றது. உடல் உஷ்­ண­ம­டை­கின்­றது.

 

அதனால், நோய் எதிர்ப்புச் சக்தி அதி­க­ரித்து, கிரு­மிகள் அழிக்­கப்­ப­டு­கின்­றன. உடல் ஆரோக்­கியம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. சுறு­சு­றுப்­புடன் உடற்­ப­யிற்சி செய்யும் போது உடல் உஷ்­ண­மாகி வெள்ளை அணுக்­களின் எண்­ணிக்­கையும் செய­லாற்றும் திறனும் அதி­க­ரிக்­கின்­றன.

 

உடற்­ப­யிற்சி மூலம் வெளி­யாகும் விய ர்வை உடற் கழி­வு­களை வெளிப்­ப­டுத்­து­வதில் முக்­கிய பங்­கு­வ­கிக்­கின்­றது. உடற்­ப­யிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரி­தப்­ப­டுத்­தப்­ப­டு­வதால், உட­லுக்குச் சக்தி அதி­க­ரிக்­கின்­றது.

 

உடற்­ப­யிற்சி செய்யும் போது நுரை­யீரல் வேக­மாகச் சுருங்கி விரி­வ­டை­வதால்,  ஏனைய நேரங்­க­ளிலும் திற­மை­யாக  செயற்­ப­டு­கி­றது. இது உடல் எப்­போதும் சுறு­சு­றுப்பாய் இருக்கப் பயன்­ப­டு­கி­றது.

 

 

நல­மான வாழ்க்­கையை விரும்­பு­வ­தாக இருந்தால் நீங்கள் உடற்­ப­யிற்சி செய்­வதை தவிர்க்­கவே முடி­யாது. இள­மை­யி­லேயே உயி­ருக்கு உலை வைக்கும் இதய நோய், நீரி­ழிவு போன்ற நோய்­க­ளி­லி­ருந்து விடு­பட உத­வு­கின்­றது. 

 

எனது எதிர்கால குறிக்­கோ­ளா­னது இலங்கை முழு­வதும் எனது சேவையை வளர்த்து, இளைஞர், யுவ­தி­களை ஆரோக்­கிய உடற்­கட்­ட­மைப்­புடன் உரு­வாக்க வேண்டும் என்­ப­தாகும்” என்­கிறார்.

 

எனது வறு­மையின் கார­ண­மாக எனது குறிக்­கோள்­களில் தடங்கல் கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏதேனும் ஒரு போட்டியில் நான் முதல் வெற்றி வாகை சூடினால் எனது வருமானத்தை உயர்த்தி கொள்வதுடன் எனது சேவைகளையும் விஸ்தரிக்கலாம்.

 

ஆனால், தற்போது  போட்டிகளில் வெற்றி பெறுவதற்குரிய உணவு மற்றும் ஊட்டச்சத்துகளையும், கடுமையான பயிற்சிகளையும் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு பணத்தட்டுப்பாடு ஒரு தடங்கலாக உள்ளது. இவ் விடயத்தில் எவரேனும் எனக்கு உதவிசெய்து எனது இலட்சியத்திற்கு, கைகொடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.” எனவும் சமீர் கூறுகிறார்.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.