Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தோள்பட்­­டை நோய்க்­கான கார­ணங்­களும் அவ­ற்­றுக்­கான தீர்­வு­க­ளும் - வைத்தியர் எஸ்.சிவஞானசுந்தரம்.
2016-01-10 16:08:46

தோள்பட்டையில் வலி ஏற்படும் போது நம் உடம்பில் உள்ள மொத்த பலத்தையும் இழந்து விட்ட ஓர் உணர்வு தோன்றும். அந்த அளவுக்கு தோள்பட்டை நம்முடைய அன்றாட நடவடிக்கைகளில் மிகவும் தேவைப்படும் உடலின் ஒரு பகுதியாகும் என்கிறார் வைத்தியர் எஸ்.சிவஞானசுந்தரம்.

 

தோள்பட்டை வலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக 40 வயதை தாண்டியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

 

அதிலும் பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதை தவிர நீரிழிவு நோய் உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்,  வாத நோய் உள்ளவர்கள், தைரொயிட், ஹோர்மோன் சுரப்பு குறைவாக  உள்ளவர்கள், இரு சக்கர வாகனங்களில் அதிகம் பயணம் செய்பவர்கள் கணினியின் முன்­ அமர்ந்து அதிகம் வேலை பார்ப்பவர்கள், இருக்கையில் சரியான முறையில் அமராதவர்கள், பாரம் தூக்குபவர்கள் கையை தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குபவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள் மற்றும் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீசுபவர்கள் என இப்படியாக யாருக்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம்.

 

தோள்பட்டை மூட்டு ஓர் பந்து கிண்ண மூட்டு வகையைச் சேர்ந்த ஒன்றாகும். இதன் அசைவுக்கு புஜ எலும்பின் தலைப்பாகமும் (பந்து) அது பொருந்தி இருக்கும். தோள்பட்டை எலும்பின் கிண்ணமும் சீரான அமைப்பில் இருப்பது முக்கியம்.

 

அதனுடன் பல திசைகளிலும் கையை அசைக்கக்கூடிய விதத்தில் அமையப் பெற்ற தசைகளின் ஒருங்கிணைந்து அசையும் தோள்மூட்டை சீராக செயற்பட உதவுகின்றது. 

 

தோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படும். இதனை ஆங்கிலத்தில் (Frozen Shoulder) தோள்பட்டையில் இறுக்கும்  Rotator  cuff என்ற தசையை நான்கு விதமாக பிரிக்கலாம்.

 

இவற்­றில் suprasPinatus என்ற தசையில் வீக்கம் ஏற்படும் போது கைகளை தூக்கினால் வலிக்கும். ஆனால், குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் கையை தூக்கினால் வலிக்காது இது தோள்பட்டை வலியின் ஆரம்ப நிலையாகும். இந்நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் இலகுவில் தோள்பட்டை வலியில் இருந்து முழுமையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

 

சிகிச்சை  எடுக்க தவறும் பட்சத்தில் தோள்பட்டை வலி அதிகரித்து தோற்பட்டையை சுற்றியுள்ள  தசைகளும் இறுக்கமடைந்து கையை குறிப்பிட்ட உயரத்திற்கு உயர்த்த முடியாத நிலைமையைக் கொண்டு வந்து விடும். 

 

தசை நார்களில் கல்சிய உப்பு படிவதனாலும் தோள்பட்டை தசை இறுக்கம் ஏற்படலாம். தோள்பட்டை இறுக்க நிலையின் அறிகுறிகளாக தோள்பட்டை வலி ஏற்பட்டு கையை தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, இரவில் தூங்கும் போது எந்த பக்கம் வலி இருக்கின்றதோ அந்தப் பக்கம் படுக்கும் போது கடுமையான வலி ஏற்படும்.    

 

தலை முடியை சீவும் போது பாதிக்கப்பட்ட கையால் செய்ய முடியாத நிலை போன்றவற்றை குறிப்பிடலாம். இடது பக்கம் ஏற்படும் தோள்பட்டை வலியை பெரும்பாலானோர் மிகவும் பாரதூரமாக எடுத்துக்கொள்கிறார்கள்.  

 

காரணம் இதய நோயின் ஓர் அறிகுறியாகவும் தோள்பட்டை வலி இருப்பதனால், குறிப்பாக, ஒருவருக்கு இதய பாதிப்பால் நெஞ்சுப்பகுதியில் வலி உருவாகி அது கழுத்துக்குப் போய் இடது பக்கம் தோளுக்கு பரவுகின்றது.

 

இதனால் ஏற்படுகின்ற தோள்பட்டை வலியையும் தசை இறுக்கத்தால் ஏற்படுகின்ற தோள்பட்டை வலியையும் சாதாரண மக்களால் துள்ளியமாக வேறுபடுத்தி அறிந்து கொள்ள முடிவதில்லை எனவே சாதாரண தசை இறுக்கத்தால் ஏற்படும் மூட்டு வலியை இதய நோயின் அறிகுறியாக எண்ணி அச்சப்படாமல் வைத்தியரின் ஆலோசனையை பெறுவது நல்லது. 

 

தோள்பட்டை இறுக்கத்தால் ஏற்படும் வலிக்கு பல்வேறு வகைப்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. எனவே, சாதாரண வலி என அலட்சியம் காட்டாமல் ஆரம்பத்திலேயே சிகிச்சையை பெற்றுக் கொண்டால் கூடிய விரைவில் முழுப்பயனையும் பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமல்லாது, அறுவைச் சிகிச்சை ஒன்றுதான் தீர்வு என்ற நிலைக்குள் செல்வதையும் தவிர்த்துக்கொள்ளலாம். 

 

உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் உளவியல் ரீதியான சிக்கல்களை  ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, பாதிக்கப்பட்டவர்கள்  ஆரம்ப நிலையிலேயே சிகிச்சையை  பெற்றுக் கொண்டால் உடல் நலமும், தன நலமும் சீராக அமையும். 
தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்து வந்தால் தோள்பட்டை வலியில் இருந்து விடுதலை பெறலாம். தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை தோள்பட்டை வலி  உள்ளவர்கள் தான் செய்யவேண்டும் என்பதில்லை.

 

மற்றவர்களும் செய்வது தோள் பட்டை  தசைகளை வலுவுடன் வைக்க உதவும். நடைபயிற்சி,  யோகா மற்றும்  சூரிய நமஸ்காரம் போன்ற எளிய பயிற்சிகள் மூலமும் தோள்பட்டை வலியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

 

மேலதிக விபரங்களுக்கு:            

வைத்தியர் எஸ்.சிவஞானசுந்தரம்,

136 B சென்.ஜேம்ஸ் வீதி,            

கொழும்பு – 15.   

077- – 3084556    
011- – 2521297  

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.