Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
எச்.ஐ.வி தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள சில அறிவுறைகள் - வைத்திய நிபுணர் சிசிர லியனகே
2016-01-31 12:24:18

(இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பாக பாலியல் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே வழங்கிய தகவல்களின் கடந்த வாரத் தொடர்ச்சி...)

 


முன்­னைய காலங்­களில் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் பிள்­ளையை சந்­தித்தால் விருப்பப்­பட்டு முக­வ­ரியை வழங்கி தொடர்பு கொள்ள பல நாட்கள் செல்லும்.

 

ஆனால், இன்­றைய காலத்தில் கைய­டக்கத் தொலை­பேசி, பேஸ்புக், வட்ஸ்அப் என பல புதிய முறை­களில் மிக விரைவில் மிக குறு­கிய கால இடை­வெ­ளிக்குள் தொடர்பு கொண்டு தவ­றான முறையில் ஈடு­பட்டு­ எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளாகி விடு­வார்கள் என்கிறார் வைத்தியர் சிசிர லியனகே. 

 

எச்.ஐ.வி. தொற்றிலிருந்து எவ்­வாறு விடு­ப­டலாம் என்­பது  பற்றி பிள்ளை­க­ளுக்கு தெளி­வு­படுத்த வேண்டும்.

 

இவ்­வாறு நாம் செயற்­ப­டாமல் விட்டு விட்டால் இளைய சமு­தா­யத்தை பாது­காக்க முடி­யாமல் போய்விடும். அதனால் வெள்ளம் வரும் முன் அணை­கட்டவேண்டும் என்ற  மூத்­தோரின் முதுமொழிக்கு ஏற்ப நாம் செயற்­பட்டு எமது இளைய சமு­தா­யத்தை காப்­பாற்ற வேண்டும். 

 

எச்.ஐ.வி தொற்றின் போது தொண்டை வலி போன்ற சாதா­ரண அறி­கு­றி­களை காட்டும். வேறு எந்த வித­மான பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது.

 

ஆனால், எயிட்ஸ் நோய்க்­குள்­ளான பிறகு நிமோ­னியா, டி.பி., புற்று நோய், வயிற்­றோட்டம் போன்ற நோய்­க­ளுக்­குள்­ளாகி தீவி­ர­மான பாதிப்­புக்­குட்­ப­டுத்­தப்­பட்டு மர­ணிக்க அதிக வாய்ப்­புள்­ளது.

 

இப்­போது எந்த நோயா­ளி­க­ளாக இருந்­தாலும் அவர்­க­ளுக்கு எச்.ஐ.வி பரி­சோ­தனை செய்­யு­மாறு வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு கட்­ட­ளை­யிட்­டுள்ளோம். பாலியல் உறவு மேற்­கொள்ளும் போது (கொண்டம்) பாதுகாப்பு உறையை பயன்­படுத்­தினால் எச்.ஐ.வி. தொற்­றி­லி­ருந்து பாது­காத்­து­க் கொள்­ளலாம்.

 

இலங்கையை பொறுத்தமட்டில் அதி­க­ளவு எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் வெளி­நாட்­டு­களுக்கு தொழில் நிமித்தம் சென்­ற­வர்கள் என அறிக்கைகள் தெரி­விக்­கின்­றன. 

 

எச்.ஐ.வி தொற்று ஒரு வைரஸாகும் 


*இந்த வைர­ஸா­னது மனித உடலில் மாத்­திரமே வாழ முடியும். 


*எச்.ஐ.வி வைர­ஸா­னது மனித உடலில் சேர்­வதால் மனிதன் பிறக்கும் போது இருந்த அனைத்து சக்­தி­களும் இழக்­கப்­பட்டு உடல் பல­வீ­ன­ம­டையும்.


*பல­வீ­ன­ம­டைந்த உடலில் பல­வி­த­மான நோய்த் தொற்­றுக்கள் இல­குவில் தொற்­றிக்­கொள்ள வாய்ப்பு அதி­க­முள்­ளது. 


*எயிட்ஸ் என்­பது உடலின் இயல்பு நிலை மாற்­ற­ம­டைந்து  உடல் பல­வீன­ம­டைந்­தி­ருப்­பதால் உடலில் பல வித­மான நோய்கள் ஏற்­ப­டலாம். 

 

எச்.ஐ.வி. பரவும் முறை


*முறை­யற்ற உடல் உற­வினால் ஏற்­பட வாய்ப்­புள்­ளது.


*பெற்­றோர்­களால் குழந்­தை­க­ளுக்கு பர­வுதல். (தாய் கரு­வுற்ற நிலையில், குழந்தைக்கு பாலூட்டுவதன் மூலம்)


*எச்.ஐ.வி தொற்­றுக்­குள்­ளா­ன­வர்கள் குருதி வழங்­கு­வதன் மூலம் பர­வலாம்.

 

எச்.ஐ.வி. பர­வாத நிலை


*கை கு­லுக்கல்


*அருகில் அம­ர்தல்


*ஒரே நீர் தடா­கத்தில் நீரா­டுதல்


*ஒரே பீங்கான், கோப்­பை­களை பாவித்தல்


*நுளம்பு, ஈக்களால் பரவுதல்.

 
*பொது மல­சல கூடங்­களை பாவித்தல்.

 

எச்.ஐ.வி. வராமல் பாது­காத்தல் 


*முறை­யற்ற பாலியல் உறவை தவிர்த்தல்


*திரு­ம­ணத்­திற்கு முன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வதை தவிர்த்தல்


*ஒரு ஆணி­டமோ அல்­லது ஒரு பெண்­ணிடமோ மாத்­திரம் நிரந்­த­ரமாக பாலியல் உறவில் ஈடு­ப­டுதல்


*சரி­யான முறையில் (கொண்டம்) பாதுகாப்பு உறையை பாவித்தல்

 

எச்.ஐ.வி. தொற்றை எவ்­வாறு அறிந்து­ கொள்­ளலாம்.


*எச்.ஐ.வி. தொற்றை இரத்த பரி­சோ­தனை மூலம் அறிந்து கொள்­ளலாம்.

 

*உங்­க­ளுக்கு சந்­தேகம் எழும் பட்­சத்தில்  பாலியல் பிரச்­சினை தொட­ர்பாக பிர­தே­சத்தின் பெரிய வைத்­தி­ய­சா­லைக்கு சென்று மிகவும் இர­க­சி­ய­மான முறையில் பரி­சோ­தனை செய்து பார்க்­கலாம்.


*எச்.ஐ.வி. தொற்­று இருக்குமானால் உட­ன­டி­யாக மருந்தை எடுத்து சிகிச்சை­ பெற்­றுக்­கொள்­ளுங்கள்.

 


*எச்.ஐ.வி. தொற்று பற்­றிய விட­யத்தை இர­க­சி­ய­மாக பாது­காத்­து­கொள்­ளலாம். 

 

எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டுள்­ளது என சந்­தேகம் கொள்ளும் நப­ருக்கு எச்.ஐ.வி. இரத்­த­ப­ரி­சோ­த­னையோ அல்­லது அது பற்­றிய விளக்கமோ இல­வ­சமாக வழங்­கப்­பட்டு இர­கசியம் பேணப்­படும். 

 

உங்­களின் பெயர், முக­வரி அறி­விக்­காமல் உங்­க­ளிடம் பிர­த்தியேக இலக்கம் வழங்­கப்­படும்.

 

அவனோ, அவளோ எச்.ஐ.வி. தொற்­றுக்­குள்­ளானால் அவர்­க­ளுக்கு தேவை­யான சகல வச­தி­களும் செய்து உபதேசம் வழங்­கப்­பட்டு அனைத்து விடயங்­களும் இர­க­சி­ய­மாக பேணப்­படும்.

 

 

 

மேலதிக விபரங்களுக்கு:
பாலியல் தொற்றுநோய் 
தடுப்புப் பிரிவு பணிப்பாளர் 
வைத்தியர் சிசிர லியனகே,
தேசிய பாலியல் நோய் / 
எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு,
29, டி சேரம் பிளேஸ், 
கொழும்பு 10.

 
011 2667163

011 2687625

071 4483914

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.