Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
தோலை பாதுகாத்து கொள்வோம் - தோல் சிகிச்சை டாக்டர் சானிக்கா.
2016-02-15 12:34:59

பருக்களைப் போக்க உதவும் இயற்கை வழிமுறைகளை ஓரங்கட்டிவிட்டு, சந்தைகளில் கிடைக்கும் செயற்கை அழகு சாதனப் பொருட்களை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதால் தோல் சேதமடைகின்றது என்கிறார் தோல் சிகிச்சை டாக்டர் சானிக்கா.

 

தோல் வறட்சி ஏற்படக் காரணம் என்ன?


பொதுவாக தோல் சாதாரண தோல், வறண்ட தோல், எண்ணெத் தன்மையான தோல் என மூன்று வகையில் காணப்படுகின்றது. தோல் வறட்சிக்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று பரம்பரையாகவும் இருக்கலாம். 

 

சாதாரணமாக தோலுக்கு தேவையான தண்ணீரை தினந்தோறும் பருக வேண்டும் பழங்கள், காய்றிகளை உண்ண வேண்டும். ஏசியில் இருக்கும் போது தோல் உலர்வதால் வறட்சி ஏற்படுகின்றது.

 

தாகம் ஏற்படும் நேரத்தில் மாத்திரம் நீரை பருகாமல் அடிக்கடி பருகவேண்டும். சாதாரணமாக ஒரு நாளைக்கு மூன்று லீற்றர் நீரை அருந்தினால் எங்களின் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் அத்தோடு  (Moisturizer) மொஸ்ரைஸ்சர் தரக் கூடி சக்தி குடி தண்ணீரில் இருக்கிறது.  

 

குளிர்மை ஒரு காரணம் என்றும் கூறலாம். அதாவது ஏசியில் இருப்பவர்களுக்கும் குளிர் காரணமாக தோல் வறட்சி ஏற்பட காரணமாக அமையலாம். சிலவேளை தோலுக்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தாமல் தவறனா கீறிம்களை பயன்படுத்துவதால் தோல் வறண்டு பாதிப்படைகின்றது.

 

சிலருக்கு தோல் உரிதல், சொடுகு போன்று தோல் பொரிந்து கொள்ளுதல் போன்ற பின் விழைவுகளை ஏற்படுத்தும். மற்றையது கொதி நீரில்  நீராடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

 

உங்களின் தோலை பாதுகாத்து கொள்ள வேண்டுமென்றால்  இதற்குரிய வைத்தியரை நாடி சரியான 
முறையில் கிசிச்சைபெற்றுக் கொள்ளுங்கள்.

 

வோட் குறித்து  விளக்கம் தாருங்கள்?


வோட் என்பது ஒரு வைரஸாகும் இது பற்றிய விளக்கம் மக்கள் மத்தியில் மிக குறைவாக இருக்கிறது பருக்கள் போன்று சிறுசிறு குருணலாக இருக்கும். சிறுசிறு குருணல் ஏற்பட பல காரணங்கள் உண்டு.

 

இது ஒருவகையான பருக்களாகும். இது பலருக்கும் பலவிதமாக காணப்படும். ஒரு சிலருக்கு அவர்கள் உபயோகிக்கும்  கிரீம்களால், வாசணை திரவியல்கள் அல்லது  இவர்கள் இடும் மேக்கப் ஒவ்வாமை காரணமாக ஏற்படலாம். வெப்பம் காரணமாகவும் ஏற்படலாம். 

 

தலையில் இருக்கும் சொடுகு காரணமாகவும் ஒரு சிலருக்கு எண்ணெய்த் தன்மையாக தோல் இருப்பவர்களுக்கும் பருக்கள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. இதனை ஐந்து மாதங்களில் சரியான முறையில் வைத்திய சிகிச்சை கிரீம்களை உபயோகிப்பதன் மூலம் பூரணமாக சுகப்படுத்தி கொள்ளலாம். மீண்டும் வராமல் பாதுகாத்துகொள்வதை பற்றி நாங்கள் உபதேசிப்போம். 

 

கண்களில் கருவளையம் வருவதை பற்றி கூறுங்கள்?


கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்பட பல காரணங்கள் உண்டு கண்களை விழித்து புத்தங்கள் பார்த்தல், சரியான முறையில் உறக்கமின்மை, அதிக வேலைபளு, துக்கம், மனதில் யோசனை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது. 

 

மிதமான மசாஜ் கண் இமை மீது அழுத்தாமல் நடு விரலால் இடப் பக்கம், வலப்பக்கம் சுற்றுவது போல் மசாஜ் செய்யவும், கைகளை குவித்து கண்களைப் பொத்தி பொத்தி எடுக்கவும், மூக்கில் கண் ஆரம்பிக்கும் இடத்தில் ஆட்காட்டி விரலை வைத்து இடப்பக்கம், வலப்பக்கம் என மெதுவாக சுற்றவும்.

 

இரவில் உறங்க முன்பு கண்டிப்பாக ஐ மேக்கப்பை கலைத்து விடவும்.
சுற்றுவது போல் மசாஜ் செய்யவும், கைகளை குவித்து கண்களைப் பொத்தி பொத்தி எடுக்கவும், மூக்கில் கண் ஆரம்பிக்கும் இடத்தில் ஆட்காட்டி விரலை வைத்து இடப்பக்கம் வலப்பக்கம் என மெதுவாக சுற்றவும். இரவில் உறங்க முன்பு கண்டிப்பாக ஐ மேக்கப்பை கலைத்து விடவும்.

 

கருதிட்டுக்கள் பற்றி விளக்கம் தாருங்கள்?


கறுப்பு திட்டுகள் மறைய இயற்கை தரும் க்ளென்சரை பயன்படுத்துவதன் மூலம் பிரச்சினையிலிருந்து விலகிக்கொள்ள முடியும். வீடுகளில் கிடைக்கும் பொருட் களை பயன்படுத்தலாம். வைத்தியரை நாடுவதன் மூலம் தீர்வு காணலாம்.

 

பருக்களைப் போக்க என்ன செய்யலாம்?


பருக்களைப் போக்க உதவும் இயற்கை வழிமுறைகளை ஓரங்கட்டி விட்டு, சந்தைகளில் கிடைக் கும் செயற்கை அழகுச் சாதனப் பொருள்களை வரம்பு மீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், இவர்களுக்குப் பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவது தான் உண்மை.

 

ப்‌ளீ‌ச் செ‌ய்யலாமா?


‌ப்‌ளீ‌ச் செ‌ய்வதா‌ல் முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் எ‌ண்ணெ‌ய்த் த‌ன்மை ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌விடு‌ம். தோலில் வறட்சி தன்மை ஏற்படும். முக‌த்‌தி‌ல் அ‌திகமான பரு‌க்க‌ள் இரு‌ப்பவ‌ர்க‌ள் அவ‌சியமாக பேஷிய‌ல் செ‌ய்தே ஆக வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ஒரு வைத்தியரின் ஆலோசனைக்கு இணைவாக பேஷிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம்.
வைத்தியர் என்ற வகையில் மேக் அப் சாதனங்கள் குறித்து உங்களின் கருத்தை தாருங்கள்.

 

இளம் யுவதிகள் அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று தான். சந்தைகளில் கிடைக்கும் வெண்மை நிறத்தை கொடுக்கும் கிரீம்­களை வாங்கி உங்­களின் தோலை சேத­ம­டைய செய்­யா­தீர்கள்.

 

உங்கள் தோலில் பிரச்­சினை ஏற்­படும் பட்­சத்தில் தோல் சம்பந்தப்பட்ட வைத்­தி­யரை சந்­தித்து உங்கள் பிரச்­சி­னை­களை கூறி தோல்­களை அழ­கு­ப­டுத்தி கொள்ளலாம். 

 

பருவானது ஆரம்பத்தில் கருநிறக் குருணை (Blackhead) போலத் தோன்றும். அதைப் பிதுக்கினால், வெள்ளை நிறத்தில் குருணைகள் (Whitehead) வெளிவரும். இந்தச் சமயத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கிற பக்டீரியாக்கள் வீரியமடைந்து பருக்களை சீழ்ப்பிடிக்க வைக்கும்.

 

அழுக்குத் துண்டால் முகத்தைத் துடைத்தால் அல்லது அடிக்கடி பருக்களைக் கிள்ளினால் பருக்கள் சீழ் பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் தொடங்கும். இதற்குச் சீழ்க்கட்டிப் பருக்கள் (Pustules) என்று பெயர்.

 

இவற்றுக்குச் சிகிச்சை பெறவில்லை என்றால், உறைகட்டிகளாக (Cystic acne) மாறிவிடும். பருக்கள் முகத்திலும் நெற்றியிலும் தான் வரவேண்டும் என்பதில்லை கழுத்து, முதுகு, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வரலாம்.

 

தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தை இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக்கொள்வது இன்னமும் நல்லது. 
முகத்தை அழுத்தித் துடைக்கவும் கூடாது. 

 

முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் பூசுவது போன்ற வற்றில் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றினால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

 

நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லீற்றர் தண்ணீர் குடியுங்கள். 

 

மேல­திக விப­ரங்­க­ளுக்கு, 
Dr.Shanika Arsecularatne,                                                                               MBBS.Adv.Dip.Aesthetic Medical Direct                                                                                 Medicine 

Christell Skin 
Clinic(Pvt) Ltd.
No: 47/01, Galle Roda,                                                                                                     Bambalapitiya.

Colombo – 04
011–5841932 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.