Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
விபத்துக்களைத் தடுப்போம்; முக அழகைப் பாதுகாப்போம் - சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டி. சபேசன்.
2016-03-06 11:37:10

(தயா ஜெயா)

 

வாகனங்களில் செல்லும் போது ஆசனப் பட்டியை கட்டாயமாக பொருத்திக் கொள்ளவேண்டும். வீதிகளில் செல்லும் போது கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.  

 

மோட்டார் வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசத்தை அணிந்து கொள்ளவேண்டும் என்கிறார் முகம் – தாடை  சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்  டி. சபேசன்.


உலகளாவிய ரீதி­யில் வாய் மற்றும் முகம் அறுவை சிகிச்சை தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடம் முதல் முதலாக இலங்கையில் வாய் மற்றும் முக அறுவைச் சிகிச்சை மருத்துவர்களின் சங்க ஏற்­பட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.  

 

இலங்கையை பொறுத்தமட்டில் வாய் மற்றும் முகம் சம்பந்தமான சிகிச்சை வழங்கும்  வைத்தியர்கள் 45 பேரும், பயிற்சி பெறும் வைத்தியர்கள் 29 பேருமே காணப்படுகிறார்கள்.

 

அரசாங்க வைத்தியசாலையில் 29 வைத்தியர்கள் மாத்திரமே காணப்படுகிறார்கள். என அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக மேலும் அவர் தெரி­வித்­ததா­வ­து, 
எங்களின் சேவைகளை முன்னெடுத்து செல்வதற்கும் பொது மக்களுக்கு இது பற்றி தெளிவுப்படுத்தவும் உள்ளோம்.

 

விபத்து ஏற்பட்டால் ஆரம்பத்திலிருந்த உருவத்தை மீண்டும் பெறுவது என்பது மிகவும் கடினம். ஆனால், இப்போது எமது நாட்டில் தொழில்நுட்ப வசதியினால் ஆரம்ப நிலையை விட மிகவும் அழகான முகத்தோற்றத்தை பெறக் கூடியதாகவுள்ளது.

 

விபத்து ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும் என்பதை பொது மக்களுக்கு அறிவூட்ட வேண்டும்.விபத்திலிருந்து எவ்வாறு விலகிக்கொள்ளலாம். விபத்து ஏற்படும் பட்சத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் முறைபற்றி மக்களுக்கு விலக்கமளிக்க வேண்டும்.  

 

விபத்து ஏற்பட்டு மிகவும் அவலட்சண முகத்தோற்றத்தில் இருப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். விபத்து ஏற்பட்டு பற்கள் மேலும் கீழுமாக மாறும் தோற்றத்தில் காணப்படுபவர்களுக்கு ஒரு சில மணித்தியாலத்தில் சிகிச்சை செய்தால் அழகான தோற்றத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

ஆனால், பற்களுக்கு விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் சென்று சிகிச்சை பெறுவது இலகுவாக அமையும். வாகனத்தில் செல்பவர்கள் வாகனப் பட்டியை கட்டாயமாக பொருத்தி செல்லவேண்டும். அப்படி செல்லாத பட்சத்தில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

 

விபத்துக்குள்ளானவரை எவ்வளவு சீக்கிரம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொண்டு செல்லவேண்டும் இதனால் உயிராபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். முகம் உருக்குலைந்த நிலையை யாரும் விரும்ப மாட்டார்கள்.

 

விபத்துக்குள்ளானவர்களின் சிகிச்சைக்காக அரசு நிதி ஒதுக்கி சிகிச்சை வழங்கிவருகிறது. விபத்து காரணமாக இலங்கையில் வரு­டாந்தம்  2,600 பேரளவில் மரணிக்­கின்­றனர்.

 

முகமும் மண்டையோடும் அதிகம் சேதத்திற்குள்ளாகின்றன. விபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்­கா­­ன சட்டம் இலங்கையில் கொண்டுவரப்­பட்­டுள்­ள­து. வாகனங்களில் செல்லும் போது ஆசனப் பட்டியை கட்டாயமாக பொருத்திக் கொள்ளவேண்டும்.

 

வீதிகளில் செல்லும் போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.  மோட்டார் வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசத்தை அணிந்து கொள்ளவேண்டும் என அரசாங்கம் கட்டளையிட்டுள்ளது.

 

இதன் மூலம் ஆபத்துக்களை குறைத்துக் கொள்ளமுடியும். மோட்டார் வாகனம் செலுத்துபவர் மாத்திரம் தலைக்கவசம் அணியாமல் சிறுபிள்ளைகளுக்கும் அணிவித்து செல்லவேண்டும்.

 

வீடுகளில் சிறுவர்களை பாதுகாப்பான முறையில் வளர்க்க வேண்டும். வீடுகளில் நீச்சல் குளங்கள் இருந்தால் சிறு­வர்­கள் குளங்களில் விழ வாய்ப்புள்ளது. பெரியோர்களும் விபத்திலிருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும்.  

 

மது அருந்தி விட்டு வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாடா நிறுவனத்தின் அறிக்­கை­யில் 80 மில்லியனானவர்கள் மது பாவனையால் விபத்துக்குள்ளாகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.  

 

பெரும் ஆபத்து ஏற்பட்டால் சிகிச்சை செய்ய கூடிய வகையில் நவீன முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அத்தோடு, அவற்றுக்கான செலவுகள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

முகத்திற்கு வரும் ஆபத்துக்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுவது பற்றி பார்ப்போம். வாகனம் செலுத்தும் போது நித்திரை வருவதாலும் அதிகளவில் விபத்துக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது.

 

நாங்கள் விபத்துக்களிலிருந்து தப்பிக்க முயற்சித்தாலும் விபத்தானது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. கட்டடங்கள், நிர்மாண பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் மரத்திலிருந்து வீழ்வோரை பார்த்திருக்கிறோம்.

 

ஆரம்ப காலங்களில் பற்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கம்பிகளினால் கட்டி வைத்து.சிகிச்சை வழங்­கப்­பட்­டது.  நோயாளருக்கு உண்ண முடியாது, உறங்க முடியாத நிலை ஏற்படும். இந்த நிலையில் அந்த நபரின் சாதாரண வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, அவரின் குடும்ப அங்கத்தவர்களும் மன உளைச்சலுக்குட்படுகிறார்கள்.

 

வருமானமும் இல்லாத நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் உடல் உளைச்சலுக்குள்ளாகிறார்கள். ஆனால், இன்று அவ்வாறில்லை. இன்றைய நிலைமையை பார்த்தால் நோயாளி ஒரு வாரத்தில் சுகமடைந்து வீடுகளுக்கு செல்வதை நாம் கண் கூடாக பார்த்துள்ளோம். அத்தோடு, தங்களின் தொழிலுக்கும் சென்றுவிடுகிறார்கள். 

 

அன்றைய காலகட்டத்தை விட இன்று ஆறு, ஏழு மடங்கு வைத்திய செலவுகள் அதிரித்துள்ளன. விபத்து ஏற்படும் போது சிலவேளை முகத்துக்கு தான் விபத்து ஏற்பட்டு சிதைவுக்குள்ளாகின்றது. 

 

விபத்து ஏற்பட்டு மூன்று மணித்தியாலங்களுக்குள் பாதுகாத்துக்கொள்ளமுடியும். முடிந்தளவு விபத்துக்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துகொள்வது, விபத்து ஏற்படாது வண்ணம் பாதுகாத்துகொள்வது பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். 

 

தங்களின் கவனக் குறைவால் தான் அதிகமானோர் விபத்திற்குள்ளாகிறார்கள். உதாரணமாக கையடக்க தொலைபேசிகளில் கதைத்து கொண்டு வீதிகளில் செல்வதால் விபத்துக்குள்ளாகிறார்கள்.

 

வாகனம் செலுத்துபவர்கள் கையடக்க தொலைபேசியில் பிறிதொரு நபரோடு உரையாடுவதால் விபத்துக்குள்ளாகிறார்கள். மதுபாவனை காரணமாக அயல் வீட்டாருடன் சண்டையிட்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 

சமூகத்தில் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் எவ்வாறு வாழ்க்கைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பது தொடர்­பா­க மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். முகத்தில் விபத்து ஏற்பட்டால் அறுவைச் சிகிச்சை மூலம் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியும்.

 

மனிதனுக்கு மிகவும் முக்கியமானது முகம் தான். இதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆரம்ப காலங்களை விட இன்று அதிகமாக வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்துவதாலும் கவனமின்றி செலுத்துவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. 

 

21– 40 வயதுக்கிடைப்பட்டவர்கள் தான் அதிகம் விபத்துக்குள்ளா கிறார்கள். 100-–65 சதவீதமான வர்கள் வாகன விபத்தினால் விபத்துக்குள்ளாகிறார்கள். முகம் மூடிய தலைக்கவசத்தை அணிவதன் மூலம் ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

 

மூளைக்கு ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ளலாம். தலைக்கவசத்தை ஒழுங்காக தலையில் படும் வகை­யில் அணிந்து கழுத்­து  பட்டியை கட்டிக் கொள்ள வேண்டும். 

 

இன்றைய காலகட்டத்தை பார்த்தால் அவசர சிகிச்சைக்காக, உதவுவோர்கள் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களே. ஆனால், விபத்து ஏற்பட்டவுடன்  முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்வது மிகவும் ஆபத்தான விடயமாகும்.

 

காரணம், விபத்து ஏற்பட்ட நிலையில் அவர்களை இரண்டாக மடித்து ஆசனத்தில் அமர்த்தினால்  மேலும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவார்கள். காரணம் விபத்தினால் முகத்தில் பலவிதமான காயம் ஏற்பட்டிருக்கலாம்.

 

அவர்களை சரியான முறையில் ஆசனத்தில் அமர்த்தி செல்வதால் விபத்தில் ஏற்பட்ட பாதிப்பை குறைக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், விபத்து ஏற்பட்ட போது எவ்வாறு பாதுகாப்பான முறையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதை பற்றி விளக்கம் அளித்து பயிற்றப்பட்டு ஒரு குழுவை நியமிக்கவுள்ளோம். வைத்தியசாலையிலோ, பாடசாலைகளிலோ இந்த நிலையில்லை? இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும். 

 

மேலதிக விபரங்களுக்கு:
வைத்தியர் டி. சபேசன்,
முகம் – தாடை 
சத்திரசிகிச்சை நிபுணர்,
குருணாகல் 
போதனா வைத்தியசாலை.
 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.