Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பெண்களின் சமத்துவத்திற்கான உறுதிமொழி - வைத்­தியர் நித்­தி­யா­ஞ்சலி மாபிட்­டிகம.
2016-03-20 11:43:42

உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாள் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். 


பெண்­களின் அர்ப்­ப­ணிப்பால் தான் ஒரு குடும்பம் சிறப்­பாக அமையும். 'சுவனாரீ ' கிளினிக் சுகாதார சேவை திட்­டத்தின் மூலம் பெண்­கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்றார் வைத்­தியர் நித்­தி­யா­ஞ்சலி மாபிட்­டிகம.

 

குடும்ப சுகாதார பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பின்போது உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்தவை, நம்­நாட்டை பொறுத்­த­மட்டில் 100க்கு 60,75 சத­வீ­த­ பெண்கள் அந்­நிய செலாவணி வரு­மானத்தை ஈட்­டித்­த­ரு­கின்­றார்கள்.

 

மலை நாட்டை பொறுத்­த­மட்டில் 100க்கு 60,65 சதவிதமான பெண்­களே வரு­மானத்தை அதிகம் ஈட்­டித்­த­ரு­கி­றார்கள். பொது­வாக கல்­வி­த்து­றை­யி­லும், தொழிற்துறை­யிலும் பெண்­களின் பங்­க­ளிப்பே அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

 

உதா­ர­ண­மாக வைத்­தி­யர்­க­ள், ஆசிரியர்கள் என பெண்­கள் கணி­ச­மா­ன ­அ­ள­வில் இருக்­கி­றார்கள். தற்போது நாடாளுமன்றத்தில் பெண்கள் தங்களின் பங்­க­ளிப்பை வழங்க வாய்­ப்புக்கள் வழங்கப்­பட்டு வரு­கின்­ற­ன. 

 

பெண்கள் பலரும் அர்ப்­ப­ணிப்­போடு பணிபு­ரிந்து வரு­கின்­றார்கள். ஆனால், இவர்­க­ளுக்கு வழங்கும் சலுகை மாத்­திரம் குறைவாக காணப்­ப­டு­கின்­றது. பெண்­களின் அர்­ப்ப­ணிப்பால் தான் ஒரு குடும்பம் சிறப்­பாக அமையும்.  

 

உதா­ர­ண­மாக நீரி­ழிவு நோய் ஏற்­பட்டால் நோய்க்கு ஏற்­ற­வாறு உணவு வழங்கி பாது­காப்­பான முறையில்  பராம­ரிக்­கிறார்கள். அத்­தோடு, தாய், மனைவி அதி­கா­லையில் விழித்தெழுந்து உணவு சமைத்து பிள்­ளை­களை நீராட்டி, ஆடைகள் அணிவித்து அவர்­களை பாட­சா­லைக்கு அனுப்பி வைக்­கி­றார்கள் மற்­றும் கண­வர்­மார்­க­ளின் தேவை­களை நிறைவு செய்து விட்டு தானும் வேலைக்கு செல்­கி­­றார்கள்.

 

இவ்­வாறு செயற்படுவதால் பல குடும்­பங்கள் ஒன்­றாக இணைந்து ஒரு சமூ­கத்தை உரு­வாக்கு­கி­றார்­கள். பல சமூ­கங்கள் ஒன்­றாக இணைந்து ஒரு நாடு வள­மாக இருப்­பது பெண்களின் கையில் தான் இருக்­கி­றது. 

 

பெண்­களுக்கு ஏற்­படும் பிரச்­சினையை இனங்கண்டு அதற்­கான தீர்வை வழங்­க­ வேண்­டும். மகளிர் தினத்தில் மாத்­திரம் முன்­­னு­ரிமை வழங்கி விட்டு பின்னர் கருத்­தி­ல் கொள்­ளாது இருக்­கூடாது. 

 

''Pledge for Parity''  பெண்­களின் சமத்­து­வத்­திற்­கான உறுதி மொழி  என்ற கருத்தை 109 நாடுகள் பின்­­பற்றி வரு­கின்­றன. கல்­வித்­து­றையில் பெண்­களின் சத­வீ­தம் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­­கின்­றது. பல்­க­லைக்­கழக கல்­விக்­­கான பெண்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து வரு­கின்­றது. 

 

ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

 

18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டு வேலைகளை செய்வதற்காக மாத்திரம் பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.


1857ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது.

 

ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான சம்­ப­ள உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர்.

 

அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்­க­வில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் பேர­ணி நடத்­தினர். 1857ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி  இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இப் போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ஆம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர்.

 

1910ஆம்  ஆண்டு டென்மார்க்கில் பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினர்.

 

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜேர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ஆம் திகதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை. 


1920ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் திகதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.


இதையடுத்து, 1921ஆம் ஆண்டு முதல் மார்ச் 8ஆம் திகதி  உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. 


தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டிற்கான மகளிர் தின கருப்பொருளாக ஐ. நா. முன்மொழிந்திருக்கும் நோக்கம் '' பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வாக்குறுதி கொள்வோம்" என்பதேயாகும். 
இலங்­கையை பொறுத்­த­மட்டில் பெண்­க­ளுக்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடாகும்.  

 

பெண்கள் அதிஷ்­ட­­சா­­லிகள். 79 வய­துக்கு மேல் நீண்ட ஆயுட்காலத்தை  ஆண்­களை விட பெண்கள் தான் கொண்­டுள்­ளார்கள் ஒவ்­வொரு பிர­தே­சத்­திற்­குட்­பட்டவர்களுக்கு  சுகா­­தார அமைச்­சி­யினால் கர்ப்­பிணி பெண்­களை பரி­சோ­திப்­ப­தற்­காக தாதி­மார்கள் நிய­மிக்கப்­பட்டு வீடு­தோ­றும்­சென்று 15 – 45 வய­துக்­கி­டைப்­பட்ட கர்ப்­பிணி பெண்­களை தாதி­மார்கள் சரி­யான முறையில் பரிசோதித்து சுகாதார முறையில் ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்குவதால் இவர்­களின் ஆயுட்­காலம் நீடிக்­கின்றது.  பெரும்பாலான பெண்கள் வைத்­தி­ய­சா­லையில் தான் குழந்­தையை பிர­சவிக்­கி­றார்கள். 

 

கல்­வி நிலையைப் பார்த்தால் ஆண்­களை விட பெண்­களின் சத­வீதம்  அதி­க­மாக காணப்­ப­டு­கின்­ற­து. சுகாதார, போஷாக்கு, சுதேசமத்து அமைச்சியினால் மேற்கொள்ளப்படும் 'சுவனாரீ ' கிளினிக் சுகாதார சேவை திட்­டத்தின் மூலம் பெண்­க­ளுக்கு சலு­­கைகளை வழங்கி வரு­கின்றோம்.

 

பெண்கள் என்ன பிரச்­சி­­னைக்கு உட்­ப­டு­கி­றார்கள் என்­பதை பற்றி அறிய ஒரு குழுவை நிய­மித்து, அவர்­களின் பிரச்­சி­னை­க­ளை அறிந்து அவற்றை தீர்த்து வைக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறோம்.

 

2,100 நோயா­ளர்­க­ளுக்கு தேவை­யான மருந்­து­வகைகளையும் வைத்­தி­ய   சேவைகளை­யும் வழங்­கி­யுள்ளோம். பெண்­களை ஆண்கள் பாலிய­ல் வல்லுறவுக்குட்­ப­டுத்­தினால் பெண்கள் ஆண்­களால் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டார் என தெரி­விக்­காமல் ஆண்­களால் பெண்கள் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்பட்டார் என தெரி­விக்­க­வேண்டும்.

 

பெண்களின்  உருவப் படத்­தை வெளிப்­ப­டுத்­தாமல் செயற்­ப­ட­வேண்டும். உருவ படத்தை பல முறை காண்­பித்து அவர் ஒரு முறை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­ட்டதை பல முறை வல்லு­ற­வுக்­குட்பட்­டதை போல மீண்டும் மீண்டும் காண்­பித்து குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு வலியையும் மன உளைச்­ச­லையும் ஏற்­ப­டுத்­து­கி­றார்கள் இவ்வாறான செயல்களை செய்யவேண்டாம். 

 

இலங்கையில் 14.5 சதவீதமான ஆண்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொள்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

 

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக ஐ.நாவினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆறு நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரம் ஆண்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இலங்கை ஆண்களைப் பொறுத்த வரை 14.5 சத வீதமானோர் வல்லுறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டவர்களில் 50 சதவீதமாேனார் தாம் ஒரு தடவைக்கு மேல் இதை புரிந்துள்ளதாக கூறியுள்ளனர்.

 

வல்லுறவில் ஈடுபட்ட ஆண்களில் சுமார் 75 சதவீதமானோர் தமது மகிழ்ச்சிக்காகவே இக்குற்றத்தைப் புரிந்ததாக கூறியுள்ளனர். வேடிக்கைகக்காக இதை செய்வதாக கணிசமானோர் கூறியுள்ளனர் என இந்த ஆய்வறிக்கையை தயாரித்த கலாநிதி எம்மா புலு கூறியுள்ளார்.

 

பெண்களை தண்டிப்பதற்காக இக் குற்றத்தை புரிந்தவர்களின் எண்ணிக்கை இப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது. பெண்கள் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­படும் சந்­தர்ப்­பத்தை பார்த்தால் பாட­சாலை, வீட்­டில், அயல் வீட்­டர், தொழில் புரி­யும் இடங்கள் பெண்­களை அடக்­க­மாக பாலியல் ரீதி­யாக துஷ்­­பி­ரயோ­க­மும், பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­து­வது.

 

உதா­ர­ணமாக ஒரு காத­லனும் காதலியும் பேசிக்­கொண்­டிக்கும் போது பாலியல் ரீதி­யாக உறவு வைத்­துக்­கொள்­வதற்­காக காதலன் என் மீது உனக்கு நம்­பிக்­கை­யில்லை­யா எனக் கேட்டு தன்­னு­டை­ய ­தே­வை­களை நிவர்த்தி செய்து விட்டு பின்னர் விட்டுச் சென்று­வி­டு­வ­தாக என்­னிடம் சிகிச்­சைக்­காக வரும் இளம் யுவ­திகள் தெரி­விக்­கின்­றனர்.  


                            
மேலதிக விபரங்களுக்கு: 
வைத்­தியர் நித்­தி­யா­ஞ்­சலி மாபிட்­டிகம.
 071 8018889.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.