Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பெறுவதற்கான வழி - வைத்திய நிபுணர் கீதா ஹரிப்பிரியா.
2016-03-30 11:35:42

பெண்மைக்கு பெருமிதம் தாய்மை. அதை உங்களுக்கு கிடைத்திடச் செய்வதே எங்களுக்கு பெருமை என்கிறார் தமிழகத்தின் பிரசாந்த் கருவுறுதல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் கீதா ஹரிப்பிரியா.

 

BMICHஇல் அண்மையில் நடை பெற்ற மருத்துவ கண்காட்சியின் போது அவர் அளித்த செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, 5 – 10வருடங்களாக குழந்தைச் செல்வங்கள் இல்லாமல் இருக்கும் தம்பதிகளை பரிசோதித்து அவர்களுக்கு குழந்தைப் பாக்கியத்தை தரக்கூடிய வகையில் தமிழகத்தில் சிகிச்சை அளித்து வருகிறோம்.

 

அதிநவீனம் மற்றும் உலகத் தரத்திலான அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன. மிக உயர்ந்த உத்வேகத்துடனான அர்ப்பணிப்புடன் கூடிய பல்துறை குழுவாய் அமைந்துள்ள வைத்தியர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு மிகச் சிறந்த குழந்தைபேற்று மருத்துவ வசதிகளை வழங்குகின்றோம்.

 

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை தம்பதியர்களின் கைகளில் கொடுத்திருக்கின்றோம். பத்து வருடங்களாக மிகச் சிறந்த மருத்துவங்களை தம்பதியர்களுக்கு வழங்கி 11ஆவது வெற்றிகரமான வருடத்தில் மிக உயர்வான தொழில்நுட்ப அனுபவத்துடன் உலகின் மிகச் சிறந்த உபகரணங்களுடன் வெற்றி நடைபோடுகின்றோம். 

 

எங்களுடைய புதிய தொழில்நுட்ப வரவான ''ஹுயுமிட்கிரிப்'' கரு முட்டையையும் விந்துவையும் பெலோப்பின் டியூப்பில் உள்ளது போலவே கருமுட்டைக்கும் விந்துக்கும் சரியான தட்பவெப்பத்தை கொடுத்து பாதுகாக்கும் நிலை ஏற்படுத்துகின்றது. 

 

அதிக நகரும் தன்மை உடைய மற்றும் பகுத்துணரக் கூடிய சாதாரண விந்துக்கள் "டென்சிட்டி கிரேடியனட் செப்பரேசன்" என்ற முறையின் மூலமாக சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட விந்துக்கள் மிகச் சுகாதாரமான சிறப்பு வழியில் புத்துயிர் அளிக்கப்பட்டு ஒரு கனியூலா உபயோகத்தின் மூலமாக கருப்பையினுள் செலுத்தப்படுகிறது.

 

மிகச் சாதாரணமான நிலையில் உள்ள விந்துக்களை உடைய ஆண்களுக்கும் I U I முறை மிக பயனுள்ளதாக இருக்கும். இன் விட்ரோ பெர்ட்டிலைசேசன் (V.I.F) என்ற சிகிச்சையானது குழந்தையின்மைக்கான ஆண் மற்றும் பெண் நோயாளர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

 

இந்த முறையின் மூலமாக முட்டையின் செல்கள் விந்துக்களின் மூலமாக கருப்பைக்கு விட்ரோவில் கருவுறச் செய்யப்படுகின்றன. அதன் பிறகு அவ்வாறு உருவாக்கப்பட்ட கருக்கட்டல் கர்ப்பப்பைக்கு மாற்றம் செய்யப்படுகின்றது.

 

அடைப்புகள் உள்ள, குழந்தையின்மைக்கான சரியான காரணம் தெரியாத, மிகவும் பலவீனமான தன்மையுடைய விந்துக்களை உடையவர்களுக்கும், என்ட்டோமெட்ரியோசிஸ் குறைபாடு உள்ளவர்களுக்கும் I.V.F முறையானது மிகவும் உதவிகரமாக இருக்கும். 

 

ஆண்களை பொறுத்தமட்டிலான குழந்தையில்லாதவர்களுக்கும் குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் பயனற்று போன நிலையில் உள்ள பெண்களுக்கும், எதிர்ப்பு தன்மை குறைவான மற்றும் குழந்தையின்மைக்கான சரியான காரணம் தெரியாத பெண்களுக்கும், அசூஸ்பெர்னியா உடையவர்களுக்கும் I.C.S.I முறை சிறப்பானதாகும். 

 


எமது விந்து வங்கி தானமளிப்பவரின் விந்துக்களை பயன்படுத்துகின்றது. அவை மிகச் சரியான மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுகின்றன. தானமளிப்போர் எச்.ஐ.வி, ஹெப் பேட்டில், வி.பி.ஆல்.எல். மற்றும் கனோரியா ஆகிய நோய்களால் பீடிக்கப்பட்டவர்களா என்பது தொடர்பில் பரிசோதனைகளும் மேற் கொள்ளப்படுகின்றன. 

 

மேலும் தானம் பெறப்பட்ட விந்துவின் தரமானது உலக சுகாதார மைய விதிமுறைகளின் படி உறுதி செய்யப்படுகின்றது. அடிக்கடி குறைப் பிரசவத்திற் குட்படுத் தப்படும் பெண்கள், கருப்பையில் சிகிச்சைக்கு உட்படுத்த முடியாத குறைகளை உடைய பெண்கள், திரும்பத்திரும்ப பைப்ரொய்ட்ஸ் கட்டிகளை கர்ப்பபையில் தாங்கும் பெண்கள் மற்றும் கர்ப்பத்தை தாங்குவது தாயின் உடல் நலத்திற்கு கேடு விளையும் என கருதப்படும் பெண்களுக்கு சரோகசி திட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

 

எங்களுடைய 'சரோகசி' திட்டம் எல்லாவற்றையும் ஒன்றிணைத்த மிகப் பெரிய வெற்றியடைந்த இந்திய மற்றும் சர்வதேச அளவில் செயற்படும் சேவை திட்டமாகும். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் இந்த திட்டத்தின் கீழ் பிரசாந்த் மகப்பேறு ஆய்வு மையத்தின் மூலமாக தம்பதியர் வெற்றிகரமான பெற்றோர்களாகியுள்ளனர். 

 

எம்ப்ரியோஸ்கோப் உதவியினால் ஆரோக்கியமான குழந்தையை பெற முடியும். தம்பதியினர் குடும்பத்தை எவ்வாறு வழிநடத்தவேண்டும் என்ற திட்டத்தை பெற்றுக்கொள்வ தோடு, பாலியல் ரீதியான பிரச்சினைகள், சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 

 


மேலதிக விபரங்களுக்கு: 
Yoga Anandakumaran,
Coordinator – Srilanka,
Prashanth Fertrlity Reserarch Centre.


075 4000012, 
075 4927575,
075 4 927080.

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
satha2016-04-16 10:26:14
If no children let them get marry then you can have children.
0
0
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.