Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
நீரிழிவு நோயாளர்களுக்கான வைத்திய ஆலோசனைகள் - வைத்தியர் பெரியசாமி காயத்திரி
2016-04-10 14:46:42

(நேர்காணல்: தயா ஜெயா)

 

நீரிழிவு நோயாளர்கள் அனைவரும் வைத்திய ஆலோசனை படி சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கிறார் நீரிழிவு நோய்க்கான வைத்தியர் பெரியசாமி காயத்திரி.

 

§நீரிழிவு நோய் பற்றி விளக்கம் தாருங்கள்?

 

கணை­யத்தில் இன்­சுலினின் உற்­பத்­தி­யா­வதில் ஏதா­வது பிரச்­சினை ஏற்­பட்டால் நீரி­ழிவு வர வாய்ப்புக்கள் உண்டு. 


நீரிழிவு நோயில் இரண்டு மூன்று விதம் உண்டு. இதில் இரண்டு வகை­ நீரிழிவை பார்ப்போம். 

 

முத­லா­வது வகை நீரி­ழி­வு


கணை­யத்தில் இன்­சுலினின் உற்­பத்­தி­யா­கின்ற செல்­ஸ் பாதிக்­கப்­பட்டால் இன்­சுலின் உற்­பத்தியாகாது. சிறு­வ­ய­தி­லி­ருந்தே வரலாம். சிறுவய­தில் வந்தால் பரிசோதனை மூலம் அடை­யாளம் கண்டு கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

 

கணை­யத்தில் இன்­சுலினின் இல்­லா­விட்டால் நாங்கள் உண்ணும்  இனிப்பு பண்டங்களினால் குளுக்­கோஸின் அளவை குறைக்க இய­லாது, தங்­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்கவும் முடி­யாது. 

 

இரண்­டா­வது வகை நீரி­ழி­வு


இரண்­டா­வது வகை நீரிழிவு 99 சத­வீதம் பாதிக்க அதிக வாய்ப்­புக்கள் இருக்­கி­றது. முத­லா­வது வகை­ நீரிழிவு பொதுவானது. இரண்­டா­வது வகை நீரிழிவானது இன்சுலினி­ன் இய­ங்­கா­ததால் ஏற்படுகின்றது.

 

பரு­மான உடல் அமைப்­பு, சில மருந்து மாத்­தி­ரை­களை எடுத்தல், உடற் பயிற்சின்மை போன்ற காரணங்களால் இன்­சுலினின் சரியான முறையில் இயங்­காது. இதனால் இரண்டாவது வகை நீரி­ழிவு நோய் அதி­க­ரித்­து­கொண்டு செல்­லும். பொது­வாக சுறு­சு­றுப்­பான தன்மை குறைந்து கொண்டு வருதல்.

 

வேலை செய்யும் இடங்­களிலும்  உடற் பயிற்­சியின்மையும் கார­ண­மாக அமை­கின்­றது. 

 

§உணவை கட்­டுப்­பா­ட்டுக்குள் வைத்­தி­ருந்­தாலும் சீனி­யின் அளவை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்­க முடி­யாமல் இருப்­ப­தற்­கான காரணம் என்ன?


இன்­சுலினின் அளவு எப்­படி இருக்­கி­றது என்பதை பரிசோதித்து  பார்ப்போம். ஒரு குறிப்­பிட்ட அளவில் இருக்­க­ வேண்டும். அப்படி இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 


உண­வுமு­றை­களில் மாற்றம் தேவை. முடி­ந்­த வரை சீனி உண­வு­களை கட்­டுப்­ப­டுத்தி நல்ல நிறை ­உ­­ணவு­களை உண்ண­வேண்டும். அத்­தோடு, உடற் பயிற்சி செய்­வதால் உடல் எடை குறை­யும். இன்­சுலினின் அளவும் சரி­யான முறையில் இயங்­­கும்.  சீனி­யின் அளவு சரி­யான அள­வாக இருக்கும். 


சில நேரங்­களில் நாம் உண்­ணும் உணவால் இன்­சுலினின் அளவு ஒரு சில­­ருக்கு இயங்­காமல் இருக்­கலாம். இன்னும் சில­ருக்கு வய­தாக வய­தாக இன்­சுலினின் அளவு போதாமல் இருக்கும். 


உடற்பயிற்சி செய்து உணவை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­­ருந்தாலும் சீனியின் அளவு சரி­யான முறையில் இருக்­கா­விட்டால், வைத்­தி­யரை நாட­வேண்­டும். ஒரு சில­ருக்கு ஒரு முறை மருந்து எடுத்து விட்­ட­துமே குண­மாகி விடும். ஒரு சிலருக்கு இரண்டு மூன்று தடவை மருந்து எடுத்து விட்ட பிறகு குண­மாகி விடும்.

 

ஒவ்­­வொ­ரு­வ­ரு­டைய உடலுக்கேற்ப சீனியின் அள­வு வேறுபடும் அவற்றை  கட்­டுப்­பாட்டுக்குள் வைத்­திருக்கவேண்டும். 

 

§கர்ப்­பிணி தாய்மார்­க­ளுக்கு நீரி­ழிவு இருந்தால் பிறக்கும் குழந்­தை­களை பாதிக்­கு­மா?


கர்ப்­­பிணி தாய்­­மார்­க­ளுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு தோன்றும். இது பொதுவானது. ஹோர்மோன்­களின் மாற்­றத்தினால் நீரி­ழிவு தோன்­று­கின்­றது. இவர்­கள் குழந்­தை­களை பிர­சவித்த­ பின்னர் இயல்­பாக நின்­று­விடும்.

 

ஆனால், ஒரு சில­ருக்கு இந்த நீரி­ழி­வா­னது சில நாட்கள் சென்ற பிறகு நீரி­ழிவு வரு­வ­தற்கு அதிக வாய்ப்­புள்­ளது. இது இரண்­டா­வது வகை நீரி­ழி­வாகும். 

 

எல்லா கர்ப்­பிணி தாய்­மார்­க­ளுக்கும் வராது. ஆனால், ஒரு சிலருக்கு மாத்­திரம் தான் நீரி­­ழிவு நோய் வர வாய்ப்­புள்­ளது. உணவை சரி­யான அளவில் சரி­யான முறையில் உட்­கொள்­ள­வேண்டும்.

 

இல்­லா­விட்டால், நீரி­ழிவு வர அதிக வாய்ப்­புள்ளது. கர்ப்­பிணி தாய்மார்­க­ளுக்கு நீரிழிவு நோய் இருந்தால் கட்­டாயம் குழந்­தை­க­ளுக்கு வரும் என்­று சொல்­ல முடி­யாது. ஆனால், பரம்­பரை கார­ண­மாக பிற்­கா­லத்தில் வர வாய்ப்­பு­கள் உள்­ளன. எனவே, உணவை சரியான முறையில் உட்கொள்ளவேண்டும். 

 

§பொது­வாக ஒரு மனி­த­னுக்கு இருக்க­ வேண்டிய சீனியின் அளவு பற்றி விளக்கம் தாருங்­கள்


பொது­வாக சாதா­ரண மனி­த­னுக்கு  உணவு உண்­ப­தற்கு முன்பு சீனியின் அளவு110 க்கு கீழ  இருக்­க­வேண்டும். உட்கொண்ட பிறகு சீனியின் அளவு140க்கு கீழ் இருந்தால் நீரி­ழி­வு நோய் இல்­லை என்று சொல்ல முடியும்.

 

ஆனால், சீனியின் அளவு 110க்குள் இருந்தால் நீரிழிவு நோய் வர வாய்ப்­புள்­ளது. முடி­ந்த­வரை சீனியின் அளவை 100க்கு கீழ் வைத்திருப்பது நல்­லது. 

 

நீரி­ழிவு நோயாளர்கள் சீனியை விரும்பத் தூண்­டப்படுவதற்கான காரணம் என்­ன?


நீரி­ழிவு நோயாளர்­க­ள் மாத்­திரம் இனிப்பான பண்டங்களை உட்கொள்ள விரும்­பு­வ­தில்லை.

 

பொதுவாக அனை­வ­ருக்கும் இனிப்பு பண்டங்கள் பிடிக்கும். புகைபிடிப்பதற்கு அடி­மை­யா­வது போன்று சீனி உட்கொண்டு பழக்­கப்­பட்டால் அதற்கு அடி­மை­யா­கி­வி­டு­வார்கள். இதிலிருந்து விடு­ப­டு­வ­தற்கு அதிகம் சிர­மப்­ப­டு­வார்கள்.

 

நீரி­ழிவு நோயா­ளர்கள் வைத்­தி­யரை நாடி அவர்­களின் ஆலோ­ச­னைக்கு இணைவா­க உணவு முறை­களை கடை­பி­டிக்­க­வேண்டும். பலர் வைத்­தி­ய­ரிடம் செல்வதற்கு அஞ்­சு­வார்கள். அங்கு ­சென்றால் எதையும் உட்கொள்ள விடமாட்டார்கள்.

 

அதை கேட்டு செயற்படவிடுவதை விட போகாமல் விடு­வது சிறந்­தது என தமக்­குள்ளே முடி­வெ­டுத்து செய்­வதை செய்வோம் என ஒரு மூட­நம்­பிக்­கையில் இருப்­பதை தவிர்க்கவேண்டும்.

 

வைத்­தி­யரை நாடி அவர்களின் ஆலோசனை படி போஷா­­க்கான உணவு எது, சீனி அதி­க­மான உணவு எது, சீனி குறைவான உணவு எது என்­பதை சரி­யான முறையில் விளக்­கம­ளிப்­பார்கள்.

 

அதற்­­கேற்ப  உணவை கடைபி­டிக்க வேண்டும். இனிப்பான உணவை எடுக்­கிறேன் நாளை இதை­ எடுக்­க­மாட்டேன் என்ற சரி­யான தீர்வை எடுத்தால் நீரி­ழி­வை கட்­டு­ப்ப­டுத்த­ முடியும்.

 

ஒரு கடைக்கு சென்றால் தங்­க­ளுக்கு கேற்ற உணவை அதாவது, மரக்­கறி உணவு அதிகம் எடுத்து சோற்றை குறைத்து உண்­ண வேண்டும் என்ற மனப்பாங்கை தனக்குள்ளே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். 

 

நீரிழிவு நோயால்  பாதிக்கப்பட்ட தாய்­மார்­­கள்­, தந்தை மார்­களை பிள்ளைகள் இதை உண்­ணா­தீர்கள், உங்­களின் உடம்­புக்கு கூடாது என கூறும் போது அவர் ­க­ளுக்கு கோபம் வரும்.

 

இவர்கள் எனக்கு பிடித்­த­மான உணவை கொடுக்க மாட்­டார்களே... உணவில் ஆசை ஏற்­படும் உள­ரீ­தி­யாக பாதிப்­பை ஏற்­ப­டுத்தும். உங்கள் மனதில் நினைத்து ஒரு தீர்­மானம்  எடுத்தால் மனம் அதிகம் மகிழ்ச்­சி­யாக இருக்கும்.

 

அதே நேரத்தில் யாரா­வது வற்­புறுத்தி செய்ய சொன்னால் கோபம், எரிச்சல் வரு­வது இயல்பு. உங்­களின் உடலை பாதுகாப்பது உங்­களின் கைகளில்  தான் உள்­ளது என­வே, சரி­யான தீர்­மானம் எடுத்து சரி­யான முறையில் வைத்தி­யரின் ஆலோ­ச­னை படி உணவு முறை­யை பரா­ம­ரித்தால் நீரிழிவு பாதிப்­பி­லி­ருந்து தவிர்த்து கொள்­ளலாம். 

 

§உணவு உண்ணும் முறை


காலை­, மாலை, இரவு என இந்த மூன்று வேளையும் உடம்புக்கு தேவையான உண­வுகள் சரி­யான முறையில் வைத்­தி­யரின் ஆலோ­சனைகளை கடை­­பி­டிக்­க­வேண்டும். 


ஒரு நாளைக்கு  மூன்று மணித்­தி­யா­லத்­துக்கு ஒரு முறை உணவு உட்கொள்ள வேண்டும். காலையில் எழுந்­த­வுடன் நீர் அருந்­திய பின் சிற்­­­றுண்டி. பிறகு காலை உணவு  பிறகு சிற்­றுண்டி. பிறகு பகல் உணவு  பிறகு சிற்றுண்டி. அதன் பிறகு இரவு உணவு என இந்த முறையை தொடர்ந்து கடை­பி­டிக்க வேண்டும். 


இதை தவிர்த்து விட்டு மிக நீண்ட நேரம் கழித்து உண்­பதால் இன்­சுலின் அளவு குறைந்து சீனியின் அளவு அதி­க­ரிக்கும். அதே நேரம் உணவு முறையை இரண்டு தடவை பிரித்து உண்டால் அதாவது சிற்றுண்டி எடுத்துக்கொண்டு பிறகு காலை உணவை உண்ணும் போது சீனி அளவு சாதாரணமாக அதிகரிக்கும்.  

 

இதனால் சீனியின் அளவு சமநிலையில் காணப்படும். இன்சுலினின் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். இர­வு­ நேரங்­களில் தாமதித்து உண்ண கூடாது. ஆறு அல்லது­ ஏழு மணித்தியாலங்கள் உறங்க வேண்டும்.

 

சரி­யான நேரங்­களில் உண்ண­வேண்டும். இந்த மூன்­றையும் சரி­யான முறையில் கடைப்பிடித்தால் நீரிழிவு நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். ­நீரி­ழிவு நோயா­ளர்­க­ளுக்கு கொடுக்கப்படவேண்டியது நிறை­யுணவாகும்.

 

அரி­சி, மரக்­க­­றி, கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சி, மீன் அனைத்தும் சிறந்த உண­வா­கும். இதை அனை­வரும் உண்­பதால் குடும்­பத்தில் அனை­வரும் நல­மாக இருப்­பார்கள்.

 

இது பரம்பரை நோய் என்பதால் சிறுவயதிலிருந்தே இந்த உணவு பழக்கத்தை கடைபிடித்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும். 

 

மேலதிக விபரங்களுக்கு:  
Dr.Kayathri Periasamy,
Mrcp(U.K.),
Board Certified in 
Internal Medicine (U.S.A),
Health Life P Ltd,
No:10, Deal Place 'A' Colombo – 03.


T.P: 0773511511

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.