Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இரைப்பை அழற்சி உள்ளவர்களுக்கான வைத்திய ஆலோசனைகள்
2016-05-01 14:01:18

உணவுப் பாவனை முறையை சரியான முறையில் கடைப்பி­டிப்­பதன் மூலம் கேஸ்­ரைட்­டிஸ் (Gastritis) பாதிப்பிலிருந்து எம்மைப் பாது­காத்­துக்கொள்­ளலாம் என்­கிறார் சுகா­தார அமைச்சின் போஷாக்கு சுகா­தார ஆலோ­சகர் தேச­மா­னிய வைத்­திய நிபுணர் வைத்­தியர் கிர்ஷான்.

 

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்கையில், கோதுமை அடங்­கிய மாப்­பொ­ருள் உணவை அதி­க­மாக காலை­வே­ளையில் தொடர்ந்து உட்­கொள்­வதால் இரைப்பை அழற்சி ஏற்­ப­டு­கின்­றது.

 

அதா­வது தொடர்ந்து நமது சனத்­தொ­கையில் 15 சத­வீ­த­மானோர் வயிற்றுப் புண், வயிறு எரிச்சல், சமி­பாடு பாதிப்பு மற்றும் மலச்­சிக்கல் அதனால் ஏற்­ப­டும் மூல­நோயால் பாதிக்­கப்­டு­கின்­றனர் எனவும் கூறினார்.

 

கேஸ்­ரைட்டிஸ் என்றால் என்ன?


சமி­பாட்­டுத்­தொ­கு­தியில் அமி­லம் சடு­தி­யாக அதி­க­ரித்­தாலும் வயிற்றில் காப­னீ­ரொக்சைட் (co2), ஒட்­சிசன் (o2), ஐத­ரசன் H2, மெதன் (CH4) போன்ற வாயுக்­களின் பெருக்கம் கார­ண­மா­கவும் கேஸ்­ரைட்டிஸ் என்ற வாயுத் தொல்லை அதா­வது இரைப்பை அழற்சி ஏற்­ப­டு­கின்­றது.

 

கேஸ்­ரைட்டிஸ் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்கள் எவை?


கேஸ்­ரைட்டிஸ் ஏற்­பட பிர­தான கார­ணங்கள் சுயிங்கம், டொபி போன்ற­வற்றை நீண்டநேரம் வாயில் போட்டு மெல்லும்போது உட­லினுள் வெளிக்­காற்­றா­னது வடிக்­கப்­ப­டாமல் நேர­டி­யாக உட்­செல்லும். இத­னாலும் கேஸ்­ரைட்டிஸ் ஏற்­ப­டலாம்.

 


கேஸ்­ரைட்டிஸ் உள்ள ஒரு­வ­ருக்கு அதன் விளை­வாக வேறு நோய்கள் ஏற்­பட வாய்­ப்பு­ உள்­ளதா?


நிச்­சயம், சரி­யான உணவு சமி­பாடு இன்மை கார­ண­மாக வயிற்றின் அளவு அதி­க­ரிக்கும். பலூன் போன்று வயிறு ஊதிக்கொள்ளும். இதனால் சுவாச நோயான மூச்­சுத்­தி­ணறல் ஏற்­ப­டலாம். சரி­யான உணவு சமி­பாட்­டின்மை கார­ண­மாக கழி­வ­கற்­றலில் தாமதம், காய்ந்து வெளி­யேறல், ஆசன வாயிலில் வலியை ஏற்­ப­டுத்தல் மற்றும் மூல  நோய் என்­பன இதன் கார­ண­மாக ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம். 

 

கேஸ்­ரைட்­டிஸ்ற்­கான அறி­கு­றிகள் எவை?


ஊதிய வயிறு, வாந்தி (வயிற்­றுப்­ பி­ரட்டல்), பசி­யின்மை மூச்­சுத்­
தி­ணறல், ஆச­ன­வாயில் எரிச்சல், வயிறு எரிச்சல் மயக்கம் போன்றன ஏற்­படும். 

 

கேஸ்­ரைட்டிஸ் உள்­ள­வர்கள் தவிர்க்க வேண்­டிய உண­வுகள்


முட்டை, கோவா, போஞ்சி, கோதுமை மா உண­வுகள், பால் உண­வுகள்,  குளிர்­பானம், மது­பானம்,  எலு­மிச்சை, தக்­காளி அதிக எண்ணெய் கார­ண­மான பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு­களை தவிர்ப்­பது சிறந்­தது. 

 


கேஸ்­ரைட்டிஸ் உள்­ள­வர்கள் உண்ண வேண்­டிய உண­வுகள் 


இஞ்­சிப்­பூண்டு கசாயம், இளநீர், ஆகாரம், கொயிலை, வாழைத்­தண்டு, வாழைப்பூ, முள்­ளங்கி போன்ற காய்க­றிகள். அத்­துடன், சரி­யான முறையில் கேஸ்­ரைட்­டிஸ்ஸை கட்­டுப்­ப­டுத்­த­வேண்டும்.

 

முட்­டையின் வெள்ளைக்­க­ருவை பச்­சை­யாக அருந்­தலாம், நீர்பறங்கி சாறு பரு­கலாம், சரி­யான உண­வு­ மு­றை­களை கடைப்பி­டித்து நோய்­களில் இருந்து எம்மை நாம் காத்­துக்­கொள்வோம். 

 

மேல­திக விப­ரங்­க­ளுக்கு:- 
தேசமானிய வைத்திய நிபுணர்
டாக்டர் கிர்ஷான்,
சுகாதார அமைச்சின் 
மாகாண ஆலோசகர்,
கல்வி இராஜாங்க அமைச்சின் 
போஷாக்கு சுகாதார ஆலோசகர், 
ஹெப்பிலைப் வைத்தியசாலை,
வெல்லம்பிட்டிய.
011426913/ 0777677847 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.