Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
கணி­னி உதவியுடன் கூடிய மூட்டு மாற்று சிகிச்சை
2016-06-05 10:25:44

மூட்டு தேய்மானத்திற்கு கணி­னி­யின் உதவியுடன் கூடிய மாற்று சத்திர சிகிச்சை முறை ஒரு சரியான தீர்வாக அமையும். மூட்டு மாற்று சத்திர சிகிச்சை 20-ஆம் நூற்றாண்டின் மிக அதி நவீன சத்திர சிகிச்சை முறையாகும்.

 

இச்சிகிச்சை முறை தீவிர மூட்டுத் தேய்மானத்திற்கு மேற்கொள்ளப்படும் கடைசி கட்ட சிகிச்சை முறையாகும். தொழில் நுட்ப முன்னேற்றத்தால் கணினியில் அதிகமாக மூட்டு மாற்று சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது''   என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மூட்டு வைத்திய நிபுணர் எஸ்.ராஜ் கண்ணா.

 

மூட்டு மாற்று சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜ் கண்ணா இந்தியாவில் இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யும் சிலருள் ஒருவர்.

 

மட்டக்களப்பில் இவரின் வைத்திய செயலமர்வு மே 28 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 12ஆம் திகதிவரை நடைபெறுகின்றது.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:
''கணினி மூட்டு மாற்று சிகிச்சை முறையில் செயற்கை மூட்டின் பாகங்களை மிகச் சரியான கோணத்தில் பொறுத்துதல் வேண்டும். கணினி, சத்திர சிகிச்சை நிபுணருக்கு இப்பாகங்களை மிகத்துல்லியமாக பொருத்த உதவுகிறது.

 

வாகனங்கள் மற்றும் இன்றைய கைப்பேசிகளில் பொருத்தப்பட்டுள்ள GPRS கருவி எப்படி ஒருவரின் இலக்கை இலகுவாக சென்றடைய உதவுகிறதோ அதே போல்தான் கணி­னி­­யின் பயன்பாடும் மூட்டு மாற்று சிகிச்சை முறைக்கு பெரிதும் உதவுகிறது.

 

 

இச்சிகிச்சையின் போது நோயாளியின் தொடை எலும்பிலும், கால் எலும்பிலும் அகச்சிவப்பு (Infrared) ஒளி அனுப்பிகளை பொருத்தி நோயாளியின் மூட்டுவடிவத்தை கணி­னிக்குள் சென்றடைய செய்வார்.

 

கணினி இவ்வடிவத்தை மின்னணு மாதிரியாக (Electronic image) மாற்றி அறுவை சிகிச்சை நிபுணருக்கு செயற்கை மூட்டின் பாகங்களை சரியான இடத்தில் பொருத்த மிக துல்லியமாக வழிகாட்டுகிறது என்றார். 

 

செயற்கை மூட்டின் பாகங்களை சரியான இடத்தில் பொருத்துவதன் அவசியம் என்ன?

தவறான கோணத்தில் பொருத்தப் பட்ட மூட்டு விரை­வா­க­வே தளர்ந்து பிரச்சினைகளை உருவாக்கும்.

 

 

இதனை தடுக்க சத்திர சிகிச்சை நிபுணர்கள் சரியான வழிமுறையை தேடி வந்தனர். கணி­னி­யின் உதவியுடன் கூடிய இந்த சிகிச்சை முறை இப்பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வாக அமைந்துள்ளது.

 

மிகச்சரியான கோணத்தில் பொருத்தப்பட்ட செயற்கை மூட்டே முழுப்பயனைக் கொடுக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. வழக்கமாக செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை விட கணி­னி­யின் செயற்கை மூட்டின் பாகங்களை மிகத் துல்லியமாக பொருத்த உதவுவதாக உலக அளவில் பல நிபுணர்கள் நிருபித்துள்ளனர்.

 

கால் வளைவை நேராக்குவதற்கு கணினி எவ்வாறு உதவி புரிகிறது?

மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் கால் எவ்வளவு நேராக இருக்கின்றதோ அதைப்பொறுத்தே செயற்கை மூட்டின் செயற்பாடும் நீடித்து இருக்கும். உதாரணமாக கார் போன்ற வாகனங்களில் சக்கரம் கோணலாக இருந்தால் மிக விரை­வா­க­வே தேய்ந்துவிடும். 

 

 

இதை தடுப்பதற்காகவே நாடெங் கிலும் கணினி உதவியுடன் கூடிய சக்கரத்தை சரிபார்க்கும் மையங்கள் (Computerized wheel alignment centres) உள்ளன. அதைப்போல் கணி­னி உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யும்போது கால் மிகத் துல்லியமாக நேராக்கப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்படும் செயற்கை மூட்டுகள் மிக நீண்ட காலம் செயல்புரியும் திறன் உடையவை.

 

மூட்டின் சவ்வுகளை சரிசெய்வதில் கணி­னி­யின் பங்கு என்ன?

தபேலா, மிருதங்கம் போன்ற வாத்தியக்கருவிகளில் இழுத்துக் கட்டப்பட்டுள்ள தோலின் அழுத்தம் சிறிது மாறினாலும் எவ்வாறு சுதி விலகுகின்றதோ அதே போல் அறுவை சிகிச்சையின்போது மூட்டின் இரண்டு பக்கங்களில் இருக்கும் சவ்வுகள் சரியான அழுத்தத்தில் இல்லாவிட்டால் மூட்டில் வலி ஏற்பட்டு அறுவை சிகிச்சை வெற்றி அடைவதற்கான வாய்ப்பு குறைந்து விடும். ­க­ணி­னி இச்சவ்வுகளை சரியான அழுத்தத்தில் வைக்க உதவுகிறது.

 

கணினி உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சையின் வேறு பயன்கள் என்ன?

* அறுவை சிகிச்சையின் போதும் அதற்கு பின்பும் குறைவான இரத்தப்போக்கு.

* இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பக்க விளைவுகள் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

* நோயாளியின் தொடை எலும்பு அல்லது கால் எலும்பு சிதைந்திருந்தாலும், அல்லது  இவ்வெலும்புகளில் முன்னதாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருந்தாலோ, வழக்கமாக செய்யப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்வது கடினம். இச்சூழலில் கணினி உதவியுடன் மட்டுமே அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியும்.

 

 

* விரைவில் குணமடைந்து ஓரிரு நாட்களிலேயே நடக்கத் தொடங்கலாம்

* மருத்துவமனையில் தங்கவேண்டிய நாட்கள் மிகக் குறைவு.

 

 மேலும் விபரங்களுக்கு 

டாக்டர் S.ராஜ் கண்ணா
M.S Ortho; DNB; Joint Replacement Fellowship, Breach Candy Hospital, Mumbai,  Knee Fellowship, UK.

தொலைபேசி : 0755250963, +91 96262 62945, +91 96262 62952                                      www.kneeworld.in,  rajkannas@yahoo.com

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.