Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
மழைக்காலங்களில் எம்மை பாதுகாத்துக் கொள்ள சில வைத்திய ஆலோசனைகள் - வைத்­தியர் ஆர்.கே. கிர்ஷான்
2016-06-12 11:33:09

எமது நாட்டில் திடீர் என்று ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக மேல்மாகாணத்தில் பெரும் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

 

அப் பிரதேசங்களில் தேங்கி நிற்கும் நீர் மற்­றும் கழிவுகள் காரணமாகவும் நுளம்பு, நுண்ணங்கிகளின் உருவாக்கம் அதிகரித்துள்ளது.

 

இதனால் பலதரப்பட்ட தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்­ளன. இந்
­நி­லையில் நமக்கு ஏற்படக்கூடிய தொற்றுக்கள் குறித்தும் அவற்றில் இருந்து எவ்வாறு நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம் என்­பது குறித்து, வைத்­தியர் ஆர்.கே. கிர்ஷான் விளக்­கு­­கிறார்.  

 

வெள்ளம் ஏற்படும்போது பரவலாக ஏற்படும் நோய்கள் எவை?

 

(01) வெள்ள நீரைப் பருகுவதனால் ஏற்படும் நோய்கள்:-

 

* வயிற்றோட்டம் – இரத்தம் கலந்த வயிற்றோட்டம்.


*அமீபாக்களால் ஏற்படும் 


  வயிற்று நோய்.


*மூளைக்காய்ச்சல்.


*வாந்திபேதி.


*செங்கமாரி.


*இளம்பிள்ளைவாதம்


*தைபோயிட்டுகாய்ச்சல். போன்றவைகளை விசேடமாகக் குறிப்பிடலாம்.

 

இந்நோய்களிலிருந்து பாதுகாத்­து­­கொள்­வ­தற்கு நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்  பற்றி கூறுங்­கள்:

 

*கொதித்து ஆறிய நீரையே பருக வேண்டும்.


*உணவு சமைப்பதற்கும் உண்பதற்கும் முன்பும் மலசல கூடம் சென்று வந்த பின்பும் சவர்க்காரமிட்டு இருகைகளையும் கழுவிக்கொள்ள வேண்டும்.


*எல்லாச்சந்தர்ப்பங்களிலும் வீட்டிலேயே சமைத்த உணவுகளை மட்டும் உண்ண வேண்டும்.


* ஈக்கள் மொய்க்காது உணவை மூடி பாதுகாத்து வைக்க வேண்டும்.


*மலம் கழிப்பதற்காக மலசல கூட மொன்றைப் பாவிக்க வேண்டும். சிறுபிள்ளைகளின் மலம் மலசலகூடத்தில் போடப்படவேண்டும்.


*பழங்களை சுத்தமான நீரில் நன்றாகக் கழுவியும் கீரை வகைகளை நன்றாகக் கழுவிச் சமைத்தும் உண்ணவேண்டும்.


*பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு வீட்டிலிருந்தே கொதித்தாறிய நீரை சுத்தமான புட்டியொன்றில் கொடுத்தனுப்ப வேண்டும்.


*பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு களையே கொண்டு செல்வதற்கு உற்சாகமளிக்கப் பட வேண்டும்.

 

வீதியோரங்களில் விற்கப்படும் உணவுகளையும் ஐஸ்பெக்கெட் ஐஸ்கிரீம் போன்ற உணவுகளையும் வாங்கி உண்ண வேண்டாம். என பிள்ளைகளுக்கு அறிவுரை கூறவும்.

 

இந்நடவடிக்கைகள் மாரி காலங்களில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் கடைபிடித்தல் மிகவும் சிறந்த பழக்கமாகும் என அறிவுரை வழங்குங்கள். மேலும் கடைகளில் திறந்து விற்கப்படும் உணவுப்பொருட்களை வாங்கி உண்­பதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

 

ஈக்கள் உரு­வா­காமல் இருப்பதற்கு குப்பைகளை உரிய முறையில் அகற்றிவிட வேண்டும்.

 

(02) அசுத்தமான நீரினால் ஏற்படும் நோய்கள் :-

*கண்நோய்.
*சொறி. (ஸ்கேபீஸ்).
*மேலும் சில தொற்று நோய்கள். போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

 

இந்நோயிலிருந்து பாதுகாத்துக்­கொள்ள சில வழி­களை கூறுங்­கள்?

*உடைகளை சுத்தமான நீரில் கழுவி வெயிலில் காய வைத்து அல்லது அயன் செய்து அணிய வேண்டும்.
*நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற மேற்குறிப்பிட்ட சுகாதார பழக்க வழக்கங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

(03) நீரில் செறிந்துள்ள ஒட்டுண்ணிகளினால் ஏற்படும் நோய்கள் என்­ன?

*-நுளம்பினால் பரவும் நோய்கள்.
-யானைக்கால் நோய்.  (Filariasis)
- மலேரியா.
-டெங்கு போன்றவைகளை விசேடமாகக் குறிப்பிடலாம்.

இந்நோய்களிலிருந்து பாதுகாப்பப் பெறுவதற்கு:-

• சுற்றாடலில் நீர் தேங்கி நிற்காமல்     நீரை ஓடச்செய்து விட வேண்டும்.
டெங்கு போன்ற நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் செயற்படுத்திக்கொள்வது அவசியமாகும்.
மேலும், இந்நோய் தடுப்புச் சம்பந்தப்பட்ட (தடை நடவடிக்கைகளை) மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களை அணுகி மேலதிகமாக அவர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

(04) சுகாதாரக் குறைவினால் ஏற்படும்
நோய்கள் பற்றிய விளக்­கம் தாருங்­கள்?

• கொக்கிப்புழு அல்லது கொழுக்கிப்புழு நோய்
• வட்டப்புழு நோய்
• தட்டைப்புழு நோய்.
• சொறிப்புழு நோய்
• நுண்ணிய வெண்புழு நோய் . போன்ற வைகளைக் குறிப்பி டலாம்.

 

இந்நோயி லிருந்து பாதுகா­த்­துக்­கொள்ள என்ன செய்­ய­லாம்?

*வெளியில் செல்லும் எல்லாச் சந்தர்ப் பங்களிலும் பாதணிகள் அணிந்து கொள்ள வேண்டும்.
*புழு நோய்க்கான மருந்து வகைகளை வைத்தியரின் ஆலோ சனைப்படி பாவித்துக்கொள்ள வேண்டும்.
*அத்துடன் மேல் குறிப்பிடப் பட்டிருக்கும் “தன் சுத்தம்” நடவடிக்கைகளை அவசியமாகப் பேணிக்கொள்ளல் வேண்டும்.

 

மேல­திக விப­ரங்­க­ளுக்கு:- 


தேசமானிய வைத்திய நிபுணர்
டாக்டர் ஆர்.கே.கிர்ஷான் MBBs,
சுகாதார அமைச்சின் 
மாகாண ஆலோசகர்,
கல்வி இராஜாங்க அமைச்சின் 
போஷாக்கு சுகாதார ஆலோசகர், 
ஹெப்பிலைப் வைத்தியசாலை,
வெல்லம்பிட்டிய.
 0777677847

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.