Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பெண்களுக்கு ஏற்படும் மூட்டுப் பிரச்சினைகள்
2016-06-26 10:19:51

இளம்பெண்களுக்கு ஏற்படும் மூட்டுப் பிரச்­சி­னைக்கான தீர்­வு பற்றி விளக்கம் தரு­கிறார் தமிழ­கத்தைச் சேர்­ந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராஜ்கண்ணா.

 

இன்றைய இளம்பெண்கள் மத்தியில் உயர்ந்த குதிகால் காலணிகள் (High Heels) அணிவது வழக்கமாக உள்ள­து. இதனால், மூட்டுக்களில் அழுத்தம் அதிகரித்து மூட்டு தேய்­வு (Arthritis) ஏற்படும் வாய்ப்­புள்ளது. மூட்டுவலி மட்டுமின்றி இவ்வகை காலணிக­ள் தொடர்ந்து அணிவது, பா தம், இடுப்பு மற்றும் உடலில் மற்ற பாகங்களையும் பாதிக்கும். எனவே, பெண்கள்  இதுபோன்ற உயர்ந்த குதிகால் காலணி அணிவதைத் தவிர்ப்பது நல்லது.  

 

ஆண்களை விட பெண் வீராங்கனைகளுக்கு தசை நார்கள், எளிதில் சேதமடைய காரணம் என்ன?  

பெண்களுக்கு மாதம்தோறும் கருமுட்டை உருவாவதற்கு முந்தைய நாட்களில் (Pre-Ovulatory Stage) ஹோர்மோன்களின் சமநிலை மாறுபடும் போதும் மூட்டுகளில்   தசை நார்கள் மென்மையானதாகவும் பலவீனமாகவும் மாறிவிடுகிறது. இதனால், பெண் வீராங்கனைகள் குறிப்பாக இதுபோன்ற நாட்களில் விளையாடும் போது தசை நார்கள் கிழியும் வாய்ப்பு அதிகமாக உள்ள­து.

 

இதுமட்டுமின்றி, பெண்களுக்கான மூட்டின் வடிவம் இயற்கையாகவே ஆண்களைவிட சற்று வித்தியாசமாக உள்ள­தால் தசை நார்கள் கிழியும் வாய்ப்­பு அதிகம் உள்ள­து.

 

பெரும்பாலும் கால்பந்து, கபடி, டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ள­து.  

 

பொதுவாக ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் மூட்டு தேய்மானம் (Arthritis) ஏற்படுவது ஏன்?  

இதுவரையில் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக மூட்டு தேய் மானம் இருப்பதற்கான விஞ்ஞான ரீதியாக விளக்கங்கள் இல்லை என்றாலும் ஒரு சில ஆராய்ச்சியின் கட்டுரைகளில் பெண்களுக்கு இயற் கையாகவே ஆண்களுடன் ஒப்பிடும் போது குருத்தெலும்பின் தடிமன் (Volume of Cartilage) மிகக் குறை வாக உள்­ள­தா­க சுட்டிக் காட்டு கின்றன. 

 

இக்காரணத்தால் பெண் களுக்கு அதிகமாக மூட்டு தேய்மா­னம் ஏற்பட வாய்ப்­புள்­ள­து.  

 

 கொன்ட்ரோமலேசியா பெட்டெல்லா என்பது என்ன?


இப்பிரச்சினை பெரும் பாலும் 30லிருந்து 40 வயதுக் குட்பட்டவர்களுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பரவலாக காணப்படுகிறது.

 

இந்நோயைப் பொறுத் தவரை மூட்டு சிப்பியின் உட்பக்கத்தில் (Beneath the Kneecap) அமைந்திருக்கும் குறுத்தெலும்பு (Cartilage) மிருதுவாகி மூட்டில் அழுத்தம் அதிகமாகும் போது வலியை ஏற்படுத்தும். இந்நோய் உள்ள­வர்கள்  படி ஏறி இறங்கும் போதும் அமர்ந்திருந்து எழுந்து நிற்கும் போதும் மூட்டின் (Front of the Knee)வலியை உணர் வார்கள்.

 

பெண்களுக்கு கர்ப்பகாலங்களில் மூட்டுவலி அதிகமாக இருப்பது ஏன்?  

கர்ப்பகாலங்களில் உடல் எடை அதிகரிக்கும் போது மூட்டுகளில் அழுத்தமும் அதிகமாகி மூட்டுவலி உண்டாகிறது ஹோர்மோன்களின் சமன்நிலை மாறுபடுவதால், மூட்டின் தசை நார்கள் விரிவடைகின்றன.

 

இதனால், மூட்டில் ஸ்திரமற்ற (Cross - Leg Sitting) நிலை உருவாகி மூட்டுவலி உருவாகிறது.

 

 
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் மூட்டுவலி அதிகமாக இருப்பது ஏன்?

 
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்றுவலி ஏற்படுவது வழக்கம், இதில் சிலருக்கு இவ்வலி கால் நரம்புகள் மூலம் பரவி மூட்டுவலியை உருவாக்கலாம்.

 

இதைத்தவிர இந்நாட்களில் பெண்கள் பெரும்பாலும் மூட்டை மடக்கி வைத்து அமர்வதால் (Cross - Leg Sitting) மூட்டுவலி உண்டாகிறது. தரையில் அமர்வதை தவிர்த்து, நாற்காலிகளில் அமர்வதன் மூலம் இவ்வகை மூட்டுவலியை தவிர்க்க முடியும்.  

 

தட்டையான பாதம் (Flat Foot)இருப்பவர்களுக்கு மூட்டுவலி வரும் வாய்ப்­பு  உள்­ளதா?

தட்டையான பாதம் உள்­ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மூட்டுவலி மற்றும் மூட்டு தேய்மானம் வரக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்­ள­து.

 

தட்டைப்பாதம் உள்­ள­வர்கள் மருத்துவர் ஆலோசனையின் பேரில் அதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காலணிகளை (Foot Wear with Medial Arch Support) அணிவதன் மூலம் பாதம், கணுக்கால், முழங்கால் மூட்டுவலி வராமல் தவிர்க்கலாம்.

 

டாக்டர் எஸ்.ராஜ்கண்ணா
M.S Ortho, DNB, 
Knee Fellowship, UK.
மூட்டு மாற்று 
அறுவை சிகிச்சை நிபுணர்  
075 5250963
Ph - 0916262 62945 
-rajkannas@yahoo.com
www.kneeworld.in

 

 

 

 

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.