Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்
By General | 2014-03-06 20:24:50

- அ.கலைச்செல்வன், சிட்னி. அவுஸ்திரேலியா

 

எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணியம் தென்­னிந்­திய இசை­வானின் துருவ நட்­சத்­திரம். பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாடல்­களைப் பாடிய சாத­னை­யாளர். நூற்­றுக்­க­ணக்­கான இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்கு எல்­லா­வி­த­மான பாடல்­க­ளையும் பாடிய இசைச் சித்தர். சாதா­ரண இசை­ய­மைப்­பாளர் சுமா­ராகப் போட்ட மெட்­டைக்­கூட தனது சங்­க­திகள் மூலமும் குரலில் ஏற்­ப­டுத்தும் Vibrato எனப்­படும் மாற்­றங்கள் மூலமும் அந்த மெட்டை உரு­வாக்­கிய இசை­ய­மைப்­பா­ளரே திகைக்கும் வண்ணம் அவ­ரது மெட்டில் எதிர்­பார்க்­காத அழ­கி­யல்­களை மாற்­றங்­களைச் செய்ய வைக்­கக்­கூ­டிய பிறவிப் பாடகர்…

 


1990 களில் பாலு உச்­சத்தில் இருந்த காலம். அந்தக் காலத்­தில்தான் இர­வு­  நேரத்தில் பாடல்­களைப் பதிவு செய்யும் கலா­சாரம் தமிழ்­தி­ரை­யி­சையில் உரு­வாகத் தொடங்­கி­யி­ருந்­தது. ஆனால் ஒரு நாளில் பல பாடல்­களை பல இசை­ய­மைப்­பா­ளர்­க­ளுக்கு தென்­னிந்­திய மொழிகள் அனைத்­தி­லுமே ஓடி ஓடி பிசி­யாகப் பாடிக்­கொண்­டி­ருந்த பாலு நடு இரவு பாடல் ஒலிப்­ப­தி­வு­க­ளுக்கு சம்­ம­திப்­ப­தில்லை.

 


1989 இல் இளைஞர் ஒருவர் தமிழ்த் திரை­யு­ல­கிற்குள் இசை­ய­மைப்­பா­ள­ராக நுழைந்து எதிர்­பார்த்த வெற்றி கிடைக்­காத இளைஞன் ஒரு­வ­ருக்கு மீண்டும் தமிழில் ஒரு வாய்ப்புக் கிடைக்­கி­றது. அந்தப் படத்­துக்கு ஒரு பாடலைப் படித்துத் தரும்­படி ஒலிப்­ப­தி­வுக்­கூ­டத்தில் வைத்து பாலு­விடம் கேட்­கிறார் இளைஞர்.

 


வேறு ஒரு பாடலை அப்­போ­துதான் பாடி முடித்­து­விட்டு வீட்­டுக்குப் போகத் தயா­ராகிக் கொண்­டி­ருந்த பால­சுப்பிரமணியம் நேரத்தைச் சுட்­டிக்­காட்டி தான் இரவில் பாடு­வ­தில்­லை­யென்­பதை அந்த இளை­ஞ­ருக்கு நினை­வு­ப­டுத்­தினார். இது ஒரு ஜோடிப்­பாடல். இதை உங்­க­ளுடன் பாடும் ஜானகி அம்மா ஏற்­க­னவே தனது பகு­தியைப் பாடி­விட்டுச் சென்­று­விட்டார். நீங்கள் ஒரு­முறை எனது மெட்­டையும் ஜானகி அம்­மா ­பா­டிய பகு­தி­யையும் ஒரு முறை கேட்டுப்­பாருங்­களேன் என்றிருக்கிறார் இளம் இசை­ய­மைப்­பாளர். இளை­ஞனின் அடம்­பி­டிப்பால் வேறு வழி­யின்றி பாடலைக் கேட்க இணங்­கி­யி­ருக்­கிறார் பாலு.

 


அதனைக் கேட்­ட­துதான் தாமதம் அந்த மெட்டால் ஈர்க்­கப்­பட்டு இந்­தப்­பாட்டை நான் இப்­போதே பாடு­கின்றேன் எனக்­கூ­றி­விட்டு பாடத்­தொ­டங்­கி­யுள்ளார். தனக்குத் திருப்தி வரும் வரை மீண்டும் மீண்டும் பாடி­யுள்ளார். இளம் இசை­ய­மைப்­பாளர் போதும் என்று கூறியும் கூட இன்னும் ஒரு தடவை பாடு­கி­றேனே'' எனக்­கூறி மீண்டும் பாடி­யி­ருக்­கிறார். அவர் அந்­தப்­பா­டலை பாடி முடிக்கும் போது இரவு 11.30 மணி.

 


பாடலை முடித்த பாலு நேரே அடுத்த அறையில் இருந்த அந்த இளம் இசையமைப்­பா­ளரை நோக்கி சென்­றுள்ளார். அந்த வேளையில் அந்தப் பாடல் இடம்­பெ­றப்­போகும் படத்தின் நடிக  இயக்­கு­நரும் அங்கே இசை­ய­மைப்­பா­ள­ருடன் இருந்­துள்ளார்.

 

இளம் இசை­ய­மைப்­பாளருக்கு நேரே முன்னே சென்ற பாலு இரு கால்­க­ளிலும் முழந்­தாளில் இருந்­த­படி இப்­ப­டி­யான பாட்டைப் பாடும் வாய்ப்பு எனக்கு 10–15 வரு­டங்­க­ளுக்கு ஒரு தட­வைதான் வரும் என்று கூறி அந்தப் பாடலை உரு­வாக்கி தனக்கு பாடும் வாய்ப்­ப­ளித்த இளம் இசை­ய­மைப்­பா­ளருக்கு மன­மார்ந்த நன்­றியைக் கூறி­விட்டு அவ­ருக்கு அருகே இருந்த இயக்குந­ரிடம் தயவுசெய்து இந்­தப்­பாட்டை அழ­காக படம்­பி­டி­யுங்கள்… சிதைத்து விடா­தீர்கள் என்று கூறி­விட்டுச் சென்­றுள்ளார்.

 

அந்த இனிய அனுபவத்தை வித்யாசாகர் சொல்வதைக் கேட்க

 


அதிர்ச்சி... அங்­கி­ருந்த எல்­லோ­ருக்­குமே ஆனந்த அதிர்ச்சி... ஒரு சாத­னைப் ­பா­டகன் ... ஒரு சகாப்­தத்தின் பதி­வான பால­சுப்­ர­ம­ணியம் என்ற மேதை. இந்­தி­யாவின் தலை சிறந்த இயக்­கு­நர்­க­ளி­ட­மெல்லாம் பணி­யாற்­றிய இசை மகான் இந்த இளம் இசை­ய­மைப்­பா­ளனின் பாட­லுக்கு இப்­ப­டி­யொரு மரி­யாதை கொடுத்­ததை அவர்­களால் நம்ப முடி­ய­வில்லை.

 


அது­வரை அந்தப் பாட்டின் அரு­மையைப் புரி­யாமல் இருந்த நடிகர், இயக்குநர் மற்றும் தயா­ரிப்­பா­ள­ருக்கு அப்­போ­துதான் அந்தப் பாடலின் அருமை புரியத் தொடங்­கு­கின்­றது. அதற்­கேற்­றாற்­போல பாடலை அழ­காகப் பட­மாக்­கு­கின்றார் இயக்­குநர்.

 

அந்­தப்­பாடல் கர்ணா என்ற படத்தில் இடம்­பெற்ற மலரே.மௌனமா.. என்று பாலு, ஜானகி அம்மா சேர்ந்து பாடிய அரு­மை­யான பாடல். பாலுவால் மரி­யாதை செய்­யப்­பட்ட அந்த இளம் இசை­ய­மைப்­பா­ளர்தான் வித்­யா­சாகர். அந்­தப்­பாட்டில் தனக்கு ஏற்­பட்ட கிறக்­கத்தை அதைப் பாடி­ய­போது அதற்குக் கொடுத்த ஜீவனில் அன்புக் குண்டர் பாலு வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளதை பாடலைக் கேட்கும் போது புரிந்து கொள்­ளலாம். உலகின் பல திற­மை­சா­லிகள் எதிர்­பார்த்த இடத்தை ஏனோ அடை­வ­தில்லை.

 


அவர்­களில் எனக்கு மிகவும் பிடித்த, என்னால் நன்கு புரிந்து கொள்­ளப்­பட்ட இரு திற­மை­சா­லி­களை ஏன் அவர்­க­ளுக்­கான இடத்தை அவர்கள் அடை­ய­வில்லை என்று நான் அங்­க­லாய்ப்­பது உண்டு. அதில் ஒருவர் இசை­ய­மைப்­பாளர் வித்­யா­சாகர்.

 

மற்ை­ற­யவர் கிரிக்­கெட்டின் மிக மிகச் சிறந்த தனித்­து­வத்தை, ஸ்டைலை, தன்­னம்­பிக்­கையை தன்­ன­கத்தே கொண்­டி­ருந்த வி.வி.எஸ்.லக்ஷ்மன். இவர்கள் இரு­வ­ரையும் இவர்கள் சார்ந்த துறையின் விற்­பன்­னர்கள் மிக நன்­றாக அடை­யாளம் கண்டு கொண்­டி­ருந்­தாலும் சாதா­ரண மக்­க­ளிடம் ஏனோ எதிர்­பார்த்த அள­வுக்கு இவர்கள் போய்ச்­சே­ர­வில்­லை­யென்­பது மிகப்­பெ­ரிய துர­திர்ஷ்­டமே. எனக்குப் பிடித்த இந்த இரு­வ­ருக்­குள்ளும் இருக்கும் இன்­னொரு ஒற்­றுமை இரு­வ­ருமே ஆந்­தி­ராக்­கா­ரர்கள்.

 


தமிழ்த் திரை­யி­சையில் எத்­த­னையோ மேதைகள் கோலோச்­சி­னார்கள், கோலோச்சிக் கொண்­டி­ருக்­கி­றார்கள், கோலோச்­சு­வார்கள், ஆனால் எனக்குப் புரிந்து ராஜா­வுக்கு அடுத்து உள்­ளத்தை வருடும் ஜீவ­னுள்ள இசையை எனக்குத் தரு­வ­தென்றால் அது வித்­யா­சா­கரின் பாடல்தான்.  நான் இப்­ப­டிக்­கு­றிப்­பி­டு­வ­தற்­காக மற்­றய இசை­ய­மைப்­பா­ளர்­களைக் குறைத்து மதிப்­பி­டு­கின்றேன் என்று அர்த்­த­மல்ல.

 

அவர்­களும் அவர்­களின் பாணி இசையில் மேதை­களே. மனித ரசனை வித்­தி­யா­ச­மா­னது. அது ஆளுக்கு ஆள் மாறு­படும். இங்கே நான் எனது ரச­னையின் அடிப்­ப­டை­யி­லேயே இந்தக் கருத்தை முன் வைக்­கிறேன்.  அவரின் பாடல்­களில் வீணையை அவர் பயன்­ப­டுத்தும் விதமே அதற்கு நல்­ல­தொரு எடுத்­துக்­காட்டு.

 

அது­மட்­டு­மல்­லாமல் தமிழ் மெல­டிப்­பாட்­டுக்­க­ளுக்கு கீபோர்டை கொம்­பி­யூட்டர் இசையை அந்தப் பாட்டின் ஜீவன் கெடாமல் பாவிப்­ப­திலும் இவர் வல்­லவர் என நான் கரு­து­கின்றேன்.

 

இசை­ஞா­னியின் குரு­வான தன்ராஜ் மாஸ்­ட­ரிடம் கிட்டார் மர்ரும் பியானோ கற்றுக் கொண்­டவர் இவர். இவரின் காலத்­தைய தன்ராஜ் மாஸ்­டரின் இன்­னொரு மாணவன் ஏ.ஆர்.ரஹ்மான்.

 


ஒரு இசை­ய­மைப்­பா­ளரை வெறு­மனே பாடல்­களை வைத்து கணிக்­கக்­கூ­டாது. படத்தின் பின்­ன­ணி­யி­சையும் மிக முக்­கி­ய­மான அளவுகோல். அந்­த­வ­கையில் கமலின் அன்பே சிவம், ரன், கில்லி, சந்­தி­ர­முகி, தூள், தில், .. போன்ற பல படங்­களின் பின்­ன­ணி­யிசை இவரின் இசை­அறி­வுக்கும் உணர்­வுப்­பு­ரி­த­லுக்கும் சான்று.

 

பார­தி­ராஜா போன்ற இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநரிடம் பணி­யாற்­றி­யி­ருந்தும், நட்­சத்­திர அந்­தஸ்­துள்ள நாய­கர்கள் நடித்த பல படங்­க­ளுக்கு இசை­ய­மைத்­தி­ருந்தும், பல அரு­மை­யான பாடல்­களை உரு­வாக்­கி­யி­ருந்தும் இவர் தமிழில் அடைய வேண்­டிய உச்­சியை அடை­யா­த­துதான் புரி­யாத புதிர்.

 

எனது ஆதங்­க­மெல்லாம் இப்­ப­டி­யான திற­மை­சாலி தமிழில் எல்­லோ­ராலும் புரிந்து கொள்­ளப்­பட்டால் இன்னும் எத்­த­னையோ அரு­மை­யான பாடல்கள் வெளி­வ­ரு­வ­தற்கு அது வழி­வ­குக்கும் .இவரின் பாடல்­களைப் பற்றி நினைக்கும் போதே மெல­டிகள் மழை­யாகக் கொட்­டு­கின்­றன. அவற்றில் சில­வற்றைப் பட்­டி­ய­லி­டு­கின்றேன்.. அவற்றைக் கேட்கும் போது வழ­மை­போல வெறு­மனே அந்தப் பாடலைப் பாட­கர்கள் பாடு­வதை மட்டும் கேட்டு ரசிக்­காது அதைத்­தாண்டி அந்தக் குரல்­க­ளுக்குப் பின்னே இடை­யி­டையே வந்து போகும் இசைக்­க­ரு­வி­களின் விளை­யாட்­டுக்­களைக் கூர்ந்து ரசித்துக் கேட்­டுப்­பா­ருங்கள்.

 

பாடலின் ஒவ்­வொரு வார்த்­தை­களின் முடி­விலும் அடுத்த வார்த்­தையின் ஆரம்­பத்­துக்கும் இடையில் அவர் ஏதா­வது ஒரு இசைக்­க­ரு­வியால் சின்ன ஒரு வேலைப்­பாடு செய்­தி­ருப்பார். அதைப் புரிந்து கொண்டு ரசித்­துப்­பா­ருங்கள்., அந்த மெட்டின் முழு­மையை உணர்­வீர்கள்.  உதா­ர­ண­மாக பூமியே… பூமியே.. என்ற பாட்டில் பாலு இரண்­டு­த­டவை பூமியே என்று பாடு­வ­தற்கும் இடையில் பேஸ் கிட்­டாரால் ட்டய்ங்.. என்று சின்ன இசை எழுப்­பி­யி­ருப்பார். அதை இரண்டு பூமி­யே­யிற்குப் பிறகும் எழுப்­பி­யி­ருப்பார். ஆனால் அந்த இரண்­டிலும் ஒரு சிறு மாற்றம் வித்­தி­யாசம் இருக்­கின்­றது .. அதுதான் ஞானம். இசை ஞானம்.

 


வித்­யா­சா­கரின் அரு­மை­யான மெல­டி­களைப் பட்­டி­ய­லி­டு­வ­தென்றால் நூற்றுக் கணக்­கான பாடல்­கள்­ தேறும், ஆனால் அவ­ரிடம் பாலுவை மண்டி போட வைத்த மலரே மௌனமா எனற பாட்­டுக்குப் பின்னர் அதே இயக்­குநர் நடி­க­ரான அர்­ஜுனுக்­காக அவர் தொடர்ந்து போட்ட இரு பாடல்கள் என்னை எப்­போ­துமே மயக்­கு­பவை. அவற்­றி­லி­ருந்து ஆரம்­பிக்­கிறேன். கேட்­டுப்­பா­ருங்கள். அவரின் அநே­க­மான மெல­டி­களில் மேலைத்­தேய இசைக்­க­ரு­வி­களை எவ்­வ­ளவு அழ­காக பயன்­ப­டுத்­தி­யுள்ளார் என்­பதைப் புரிந்து கொள்­வீர்கள்.

 


“மலரே மௌனமா...”


“முக­மென்ன மோக­மென்ன.. “


“பூமி­யே…­பூ­மியே...”


“பூவாசம் புறப்படும் பெண்ணே...”


“ஆசை..ஆசை.. இப்பொழுது .. “


“பொய் சொல்லக் கூடாது காதலி ..”

 

“காற்றின் மொழி...”

 


“விழியும் விழியும் நெருங்கும் பொழுது..”


“சுடும் நிலவு....”


இன்னும்... இன்னும்.. எத்தனையோ அற்புதமான மெலடிகளின் பிதாமகன் இந்தக்கலைஞன்.

 

இவரிடம் நான் வியக்கும் இன்னொரு விடயம் என்னவென்றால் தமிழின்மேல் கொண்டுள்ள காதல். இவரின் தாய் மொழி தமிழ் இல்லையென்றாலும் தமிழ் வார்த்தைகளுக்கு இவர் கொடுக்கும் முக்கியத்துவம் அலாதியானது.

 

இதை வைரமுத்து சொல்லக் கேட்டிருக்கின்றேன். வார்த்தைகளை முன்னிலைப்படுத்தி இசையமைக்கும் தனித்துவமும் ராஜாவைப் போன்றே இவருக்கும் உண்டு. அத்துடன், இவருக்கும் இசைஞானியைப் போலே பாஸ் கிட்டாரின் மேல் அப்படியொரு காதல். அதனை இவரின் அநேகமான பாடல்களில் கேட்கலாம்.


வித்யாசாகர் ..வித்யாசமானவர்.. ஞானஸ்தனும் கூட..

 

 

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.