Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்
By General | 2014-04-20 10:41:21

-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா


தமிழில் "ஏன்" எனற ஒரு வார்த்­தை­யுண்டு. பொது­வாக அதை நாம் கேள்வி கேட்கும் அர்த்­தத்தில் மட்­டும்தான் உச்­ச­ரிக்­கிறோம். ஆனால்...  அதை உச்­ச­ரிக்கும் விதத்­தினைப் பொறுத்து அதற்கு ஏக்­கம், தாபம், ஏமாற்றம் , விரக்­தி, பச்­சா­தா­பம், எதிர்­பார்ப்பு, சோகம், இழப்­பு போன்ற பல அர்த்­தங்­களைக் கொடுக்க முடியும் என்று நிரூ­பிக்­கிறார் பாலு.

 

அதா­வது :
ஒரு பாட­லுக்குள்... " ஏன் " என்ற ஒரு தமிழ் வார்த்தை..8 தடவை கவி­ஞரால் எழு­தப்­பட்­டுள்­ளது. அதை அடுத்­த­டுத்து 8 தடவை பாலு பாடு­கிறார்..


அந்த எட்­டுத்­த­ட­வையும்.. "ஏன்" எட்டு வித­மான உணர்ச்­சிகள் அர்த்­தங்­க­ளுடன் பாலுவின் குரலில் வெளிப்­ப­டு­கின்­றது..
அதுதான் பாலு.


இசை­ஞா­னியின் இசைக்­கட்­ட­மைப்பை பிரித்து மேய்ந்­து, உய்த்து, உணர்ந்து, ரசித்துக் கேட்­பதைப் போல­வே, ஒரு பாடலை எஸ்.பி.பி எப்­ப­டிப்­பா­டு­கிறார்.  அத­னுள்­ளி­ருக்கும் வார்த்­தை­க­ளுக்கு எவ்­வாறு உயிர் கொடுக்­கிறார் என்­பதை ஆழ்ந்து உற்றுக் கேட்­ப­திலும் எனக்­கொரு அலாதிப் பிரியம். என்னை மறக்கும் தரு­ணங்கள் அவை. பாலு பாடிய ஆயி­ரக்­க­ணக்­கான பாடல்­களை மெய்­ம­றந்து வியந்­தி­ருக்­கிறேன், வியக்­கிறேன். அதே பாடல்­களை இன்­னொரு பாடகர் பாடி­யி­ருந்தால் அந்தப் பாடல்­க­ளுக்கு பாலு கொடுத்த அதே ஜீவனைக் கொடுத்­தி­ருக்க முடி­யுமா? என்னால் ஆம் என்று கூற முடி­ய­வில்லை.


இசை­ய­மைப்­பாளர் எஸ்.ஏ. ராஜ்­கு­மாரின் பாடல்­களில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் மெலடி எனக்குப் பிடிக்கும். ஆனால் அவற்றில் செய்­யப்­பட்­டி­ருக்கும் பின்­னணி இசை, அரெஞ்மெண்ட் மற்றும் ஆரம்ப இசைக்கும், இடை­யி­சைக்­கு­மான தொடர்பு, பல்­ல­விக்கும் இடை­யி­சைக்­கு­மான  Transition, இடை­யி­சையின் முடி­வுக்கும் சர­ணத்தின் ஆரம்­பத்­துக்­கு­மான ஒத்­தி­சைவு என்­ப­வற்றில் பல நெரு­டல்கள் எனக்­குண்டு.. அவற்­றைப்­பற்றி பின்­பொ­ருநாள் பார்க்­கலாம்.. இங்கே நான் குறிப்­பிட விரும்பும் விட­யம், எஸ்.ஏ.  ராஜ்­கு­மாரின் பாட­லொன்றை பாலு அழ­காக்­கி­யுள்ள விதத்­தைப்­பற்­றியே.


பொது­வாக இசை­ஞானி இளை­ய­ரா­ஜாவின் பாடல்­களில் பாட­கர்கள் தங்­களின் கற்­ப­னையில் சங்­க­தி­களை சேர்ப்­ப­தென்­பது இய­லாத விடயம். அவர் தனது இசைக்­கு­றிப்பில் எதனை எதிர்­பார்த்து எழுதி அதை பாட­கர்­க­ளுக்கு சொல்லிக் கொடுக்­கி­றாரோ அப்­ப­டி­யேதான் பாட­வேண்­டும். ஆனால் இந்த விட­யத்தில் பாலு­வுக்கு மட்டும் ராஜா கொஞ்சம் சலுகை காட்­டு­வாராம். காரணம், அவர்கள் இரு­வ­ருக்கும் இடையில் இருக்கும் 40 வரு­டத்­துக்கு மேற்­பட்ட நட்பும் புரிந்­து­ணர்­வும் தன்­னு­டைய மெட்டை சிதைக்­க­மாட்டார் என்­று, பாலு­வின்மேல் ராஜா­வுக்கு இருக்கும் நம்­பிக்­கையும்.


இருந்த போதி­லும், பாலு அந்தப் பாடலில் செய்யும் சில்­மி­ஷங்கள் ராஜா­வுக்குப் பிடித்தால் மட்­டுமே பச்சைக் கொடி காட்­டப்­படும். ஆனால் மற்­றய இசை­ய­மைப்­பா­ளர்­களின் கதையோ வேறு­மா­திரி.


பாலு என்ற ஜாம்­பவான் தங்­களின் இசை­ய­மைப்பில் பாடு­வ­தையே பெரும்­பே­றாகக் கருதும் இளம் இசை­ய­மைப்­பா­ளர்கள், அவரைக் கண்­ட­துமே எழுந்து பவ்­வி­ய­மா­க அவ­ருக்கு மெட்டைப் பாடிக்­காட்­டிய பின்­பு, அந்தப் பாட்டு முழு­வதும் பாலுவின் ராஜ்­யம்தான். ஆனால் எக்­கா­ர­ணத்தைக் கொண்டும் இசை­ய­மைப்­பா­ளரின் மெட்டைத் தாண்டி பாலு போன­தில்லை.


80களில் எஸ்.ஏ.ராஜ்­கு­மாரின் இசையில் "பற­வைகள் பல­விதம்" என்ற படத்தில் வெளி­வந்­தது பாலு பாடி­ய, " நான் கண்­டது பொய் நாடகம்" … என்ற பாட்டு.


இந்­தப்­பாட்டு வேக­மான சோகப்­பாட்டு. இதன் மெட்டு ரசிக்­கும் ­படி­யி­ருந்­தாலும் மெட்­டுக்கும் இடை­யி­சைக்கும் என்னால் எந்­த­வித ஒர்­று­மை­யையும் காண­மு­டி­ய­வில்லை. இருந்­த­போ­திலும் இந்­தப்­பாட்டு இரசிக்­கும்­ப­டி­யாக இருந்­தது. அதற்குக் காரணம் எஸ்.பி.பாலு இதைப் ­பா­டிய விதம்தான்.


இந்­தப்­பா­டலில் பாலு செய்­துள்ள விட­யங்கள் எக்­கச்­சக்கம் அவற்றில் முக்­கி­ய­மான ஒரு விட­யத்தை மட்டும் பகிர நினைக்­கிறேன். பாடலின் முத­லா­வது சரணம் இப்­படி எழு­தப்­பட்­டுள்­ளது :


“ பன்­னீ­ரிலே பெண் பயி­ரா­னவள்….பல காலமாய் என் உயி­ரா­னவள்..
மனம் மாறியே...ன் அவள் எனை மீறினாள்..
மலர் மாலையை.... இன்று யார் சூடினார்..
ஏன்..ஏன்..இள­மையும் தீயா­னது..
ஏன் ..ஏன்.. கன­வுகள் வீணா­னது..
ஏன்.. ஏன்.. இள­மையும் தீயா­னது..
ஏன்..ஏ.ன் கன­வுகள் வீணா­னது..
விடியல் ..இடையில் இர­வா­னது..”


( நான் கண்­டது பொய் நாடகம் )

 

 


மேலே நான் குறிப்­பிட்­டுள்­ள­துதான் பாடலின் முத­லா­வது சரணம். இதில் அந்தச் சர­ணத்தின் இரண்­டா­வது பகு­தி­யான “ஏன்..ஏன்.. இள­மையும் தீயா­னது.. ஏன்..ஏன்.. கன­வுகள் வீணா­னது” .. என்ற வரி­களில் மொத்தம் எட்­டுத்­த­டவை “ஏன்” என்ற வார்த்தை இடம் பெற்­றுள்­ள­தல்­லவா ?  அவற்றை பாலு எட்­டுத்­த­டவை பாடு­கின்­றா­ரல்­லவா..? இங்­கேதான் பாலு என்ற மாமேதை செய்­துள்ள சூட்­சுமம் ஒன்­றுள்­ளது.

 

அதை நன்­றாக ரசித்­த­படி உற்றுக் கேட்­டுப்­பா­ருங்கள் . அதா­வ­து, “ஏன்” என்ற வார்த்­தையை பாலு உச்­ச­ரிக்கும் எட்­டுத்­த­ட­வையும் எட்டு வித­மாக வித்­தி­யாசப் படுத்­து­கின்றார்… எட்­டு­வி­த­மாக எமக்குக் கேட்­கின்­றது..


“ஏன்”  என்ற தமிழ் வார்த்­தையை எட்­டு­வி­த­மாக அழ­காக்கி பாட­லுக்கு ஒரு கம்­பீ­ரத்தைக் கொடுக்­கிறார்.


இதே போன்றே இரண்­டா­வது சர­ணத்தில் :
ஓ…ஓ… புழு­தியில் பூமாலைதான்....
நான்..நான்.. நடந்திடும் மண் பொம்மைதான்.. ( 2 ) என்ற வார்த்தைகளை ஒவ்வொரு தடவை பாடும்போதும் ஒவ்வொரு விதமான அழகைக் கொடுக்கிறார் அந்த இசை ராட்சசர்.


அதுதான் ஜீனியஸ் தனம்… அவர்தான் பாலு.


இந்தப்பாடலின் 2:02 வது நிமிடத்திலிருந்து 2:20 நிமிடத்துக்குள் இந்தப் பாடலை வெற்றிப் பாடலாக்குவதற்குச் செய்ய வேண்டிய சூட்சுமத்தை, அதாவது “ஏன்” என்ற வார்த்தையை 8 தடவை வித்தியாசமாக, அழகாக உச்சரித்து பாலு செய்கிறார்.

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.