Saturday  21 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
"அழ­கூரில் பூத்­த­வளே... எனை அடி­யோடு சாய்த்­த­வளே...": ஆஹா என்னவொரு இனிமையான பாடல்
By General | 2015-02-01 11:11:10

(அ.கலைச்செல்வன்,  சிட்னி, அவுஸ்திரேலியா)

 

பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாடல்­களை பல இசை­ய­மைப்­பா­ளர்கள் இசை­ய­மைத்து பல பாட­கர்கள் பாடிக் கேட்டு விட்டோம். ஆனால் அவற்றில் குறிப்­பி­டத்­தக்க பாடல்­கள்தான் காலம் கடந்து ஊனுக்குள் உயி­ருக்குள், நாடி நரம்­பு­க­ளுக்குள் ஒன்­றித்­துள்­ளன. ஏன் அப்­படி?


ஒரு பாட்டின் மெட்டும்  பாடல் வரி­களும், ஆர்­கஸ்ட்­ரே­ஷனும், இனி­மை­யாக ஒன்­றொ­டொன்று காதல் வயப்­பட்­ட­தாக இருந்தால் மட்டும் போதாது இவற்­றுடன் அந்த மெட்டைப் பாட­லாகப் பாடும் பாடகர் அதைக் காவிச்­செல்லும் வரி­களைப் புரிந்து கொண்டு ரசித்துப் பாட­வேண்டும். அவ­ரது இசை ஞானத்­தையும் பயிற்­சி­யையும், அனு­ப­வத்­தையும் துணை­யாகக் கொண்டு அந்த மெட்டின் மேல் பாட­கரால் நாசூக்­காக வைக்­கப்­படும் சங்­க­திகள் மிக முக்­கியம்.


இவை அனைத்தும், ஒரே நேர்­கோட்டில் சந்­திக்கும் போதுதான் ஒரு பாட்­டா­னது உயிரை உருக்­கு­கின்­றது. அதா­வது இசை­ய­மைப்­பாளர், பாட­லா­சி­ரியர், பாடகர் ஆகிய மூன்று தனித்­து­வ­மான மனி­தர்­களின் சிந்­த­னையும் புரிந்­து­ணர்வும் ஒருசேர அமை­யும்­போது பிறக்கும் பாடல்­கள்தான் ,ஊனை உருக்கும் பாட­லாக அமை­கின்­றன. . அப்­ப­டிப்­பட்ட பாடல்­களில் ஒன்­றுதான்..  அழ­கூரில் பூத்­த­வளே...


 என்­ன­வொரு பாடல் இந்­தப்­பாடல்.. காத­லனும் காத­லியும் மாறி மாறி இரு­வ­ரையும் ரசித்து வர்­ணித்து உரு­கிப்­பா­டு­வ­தாக உரு­வாக்­கப்­பட்ட காட்­சிக்கு வரி­களை எழு­தி­யவர் அண்ணன் அறி­வு­மதி. எப்­ப­டிப்­பட்ட வரிகள் இவை! கேட்கக் கேட்க அண்ணன் அறி­வு­மதி வாழ்க்­கையின் மிகப்­பெ­ரிய ரசிகன் என்­பது புரி­கின்­றது. அவரின் வரி­களைக் கொஞ்சம் ரசித்­துத்தான் படி­யுங்­களேன்.


நீ முறிக்கும் சோம்­ப­லிலே.. நான் ஒடிஞ்சு சாய்ஞ்­சி­டுவேன்
நீ இழுக்கும் மூச்­சுக்­குள்ளே.. நான் இறங்கி தூங்­கி­டுவேன்


குறி­லாக நான் இருக்க.. நெடி­லாக நீ வளர்க்க
சென்­னைத்­தமிழ், சங்­கத்­தமிழ் ஆன­தடி


அறி­யாமல் நான் இருக்க.. அழ­காக நீ திறக்க
காதல் மழை ஆயுள் வரை தூரு­மடா


என்னை மறந்­தாலும், உன்னை மற­வாத
நெஞ்­சோடு நான் இருப்பேன்
ஹொய் ஹொய் ஹொய்.. அன்­பூரில் பூத்­த­வனே


ஆஹா.. அருமை. இந்த வரி­களை அண்ணன் அறி­வு­மதி ரசித்து எழு­தி­யி­ருக்­கிறார் என்றால் அவற்றை பாடி­யுள்ள பாலு சும்மா பிச்சு உத­றி­யுள்ளார்.

 

கவி­ஞரின் காதல் தமிழை, பாலு எவ்­வ­ளவு ரச­னை­யுடன் அவற்­றுக்­குள்ளே சென்று ஒன்­றித்து பாடி­யுள்ளார் என்­பதை புரிந்து ரசிக்கும் போது உண்­மையில் மேனி சிலிர்க்­கி­றது. குறிப்­பாக தனது காத­லியை கிறங்­கி­ய­படி குறிப்­பிடும் வார்த்­தை­க­ளாக
பூத்­த­வளே,
சாய்த்­த­வளே ,
சேர்த்­த­வளே ...
என்று எழு­தி­யுள்ளார் கவிஞர்.


அந்த வார்த்­தை­களை பாலு கொஞ்­சியும், கெஞ்­சியும், மிஞ்­சி­ய­ப­டியும் உருகி உருகிப் பாடும் வித­மி­ருக்­கி­றதே.. அப்­பப்பா.. ஒரேநாளில் இந்­தப்­பா­டலை 20 தட­வை­யா­வது கேட்­டுக்­கி­றங்­கி­யி­ருப்பேன்.


பாடலின் மெட்­டையும் ஆர்­கஸ்ட்­ரே­ஷ­னையும் அமைத்த வித்­யா­சாகர் சும்மா விட்­டாரா... அவர் வேறு பாடலை கொண்டு சென்று நிறுத்­து­கிறார். வய­லின்­க­ளையும் பேஸ் கிட்­டா­ரையும் (அனே­க­மாக இது ஸிந்­த­சை­ச­ரா­ர­கத்தான் இருக்க வேண்டும்) அவர் பாட­லுக்குள் ஒன்­றி­ணைத்து நெய்­தி­ருக்கும் விதம் அசத்­து­கின்­றது. என்னைப் பொறுத்­த­வரை ஞானி­யா­ருக்கு அடுத்து ஒரு பாட­லுக்குள் ஜீவனைக் கொடுத்து உரு­வாக்கும் திறமை அதி­க­முள்ள இசை­ய­மைப்­பா­ள­ரென்றால் அது வித்­யா­சா­கர்தான். சே.. என்­னத்தைச் சொல்ல...


குறிப்­பாக இடை­யி­சையின் ஆரம்­பத்தை செயற்கைப் புல்­லாங்­குழல் ஒன்று அழ­காக ஆரம்­பிக்க,  அதற்குப் பின்னே பேஸ் கிட்டார் அழ­காக முட்டி மோதிச் சிண்டு விளை­யாடிச் செல்­வதும், அவை­யி­ரண்டின் முடிவும் லாவ­கா­மாக வயலின் கூட்­ட­ணி­யிடம் சென்று சேர்­வதும்.

 

அங்கே சுஜா­தாவின் சிணுங்கும் ஹம்­மிங்க்­கிற்குப் பின்­னா­லி­ருந்­தப்டி மீண்டும் பேஸ் கிட்டார் சில்­மிஷம் செய்­வதும்.. அப்­பப்பா வித்­யா­சா­க­ருக்­குள்­ளி­ருக்கும் ஞானத்தின் வெளிப்­பாடு அது. இதே பாணி ஆர்­கஸ்ட்­ரே­ஷனை வித்­யா­சா­கரின் கர்ணா படப்­பா­ட­லான மலரே மௌனமா என்ற பாட்­டிலும் கேட்டுக் கிறங்­கலாம். அது­மட்­டுமா...


சர­ணங்­களின் ஆரம்ப வரி­களின் முடிவில் பின்­ன­ணியில் பியானோ ஒன்று துள்ளிக் குதிப்­பதைக் கேட்­டுப்­பா­ருங்கள் இசை­யின்பம் ஆச்­ச­ரி­ய­மாக மாறும்.

 

 

உதா­ர­ண­மாக
"நீயு­டுத்தி போட்ட உடை.. என் மனதை மேயு­தடா"
"நீ சுருட்டி போட்ட முடி.. மோதி­ரமாய் ஆகு­மடி"  என்­ற ­வ­ரி­களை எடுத்துக் கொண்டால் முதல் வரி­களை சுஜாதா மோகன் பாடு­கிறார். அவர் நீயு­டுத்தி போட்ட உடை என்று பாடும் போது உடை என்ற வரி வரு­கி­ற­தல்­லவா... அந்த வரியை சுஜாதா பாடும் போதுதான் முதலில் பின்­ன­ணியில் பியானோ ஒலிக்கத் தொடங்­கு­கின்­றது.

 

அதில் கீழி­ருந்து ஆரம்­பிக்கும் பியானோ மேல் ஸ்தாயிக்குச் சென்று நின்­று­விட்டு சுஜாதா அடுத்த இறுதி வரி­யான மேயு­தடா எனும் போது மேலி­ருந்து இறங்கி வரு­கின்­றது..ஆஹா என்­ன­வொரு இசைக் கற்­பனை இது.. . அரு­மையோ அருமை. அதே போன்றே பாலு பாடும் போதும் செய்­கின்­றது. .. இப்­படி எக்­கச்­சக்­க­மான விட­யங்கள் சங்­க­தி­களை உள்­ள­டக்­கி­யுள்ள பாட்டு இது.


பாலு­வுடன் சேர்ந்து சுஜா­தாவும் சங்­க­தி­களில் பின்­னி­யுள்ளார்... மீண்டும் ஒரு­முறை கூறியே ஆக­வேண்டும். பாலு இந்தப் பாட்டை.. அதி­லுள்ள வர்­ண­னை­யான அழ­கான தமிழ் வரி­களைப் பாடி­யி­ருக்கும் பாணிக்கு கால­கா­ல­மாக அவருக்கு அடி­மை­யாக இருக்­கலாம். அவ்­வ­ளவு தூரத்­துக்கு ஒரு விப­ரிக்க முடி­யாத பேரின்­பத்தைக் கொடுக்­கி­றது அவ­ரது பாடும் பாணி.


ஒரு பாடலை.. யாரோ ஒரு நடி­க­ருக்குப் பாடும் பாடலை.. அதுவும் தாய்­மொ­மி­ழி­யில்­லாத தமிழ்ப் பாடலை இவ்­வ­ளவு தூரத்­துக்கு உச்ச இன்­பத்தைக் கேட்­ப­வ­ருக்குக் கொடுக்கும் வண்ணம் பாடும் திற­மையைக் கொண்­டுள்ள பாட­கர்கள் வேறு எங்­கா­வது இருப்­பார்­களா என்­பது உண்­மையில் சந்­தே­கமே.

 

என்னிடம் இனவெறியோ மொழி வெறியோ மதவெறியோ இல்லாமலிருப்பதற்கு பாலு போன்ற பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மேதைகள், தமிழை இவ்வளவுதூரத்துக்கு தமது பாடல்கள் மூலம் அழகாக்குவதை , சிறு பராயத்திலிருந்தே கேட்டுக் கேட்டு கிறங்கி வளர்ந்ததும் ஒருவிதத்தில் காரணமாக் இருக்கலாம்...

நாங்கள் புண்ணியம் செய்தவர்கள்... அதனால்தான் பாலு என்ற ஒரு மாமேதை எமக்குக் கிடைத்துள்ளார்.
இது சத்தியமான உண்மை. !

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* 'உன்­னிடம் மயங்­கு­கிறேன்', 'கல்­யாண சாப்­பாடு போடவா', 'அடுத்­தாத்து அம்­பு­ஜத்தை பார்த்­தேளா' முத­லான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்த வி.குமார்

 

* இசை­ய­மைப்­பாளர், கொம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்கள் யார்?

 

* 'முத்துமணிச் சுடரே … வா' பாடலுக்கு Triple Congo வாசித்தவர்

 

* வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்கு வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ?

 

*அமுத மழை பொழியும் முழு நிலவிலே பாடலைப் பாடியவர் யார்?

 

* காதல் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தும் 'ஆறும் அது ஆழம் இல்லே '

 

* எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.