Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
'ஆயிரம் மலர்­களே மல­ருங்கள்' : - மலே­ஷியா வாசுவின் குர­லுக்­கான இசை­ஞா­னியின் அற்­புத இடை­யிசை
By General | 2015-02-13 23:34:17

அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா

ஆயிரம் மலர்­களே மல­ருங்கள்....

இந்­தப் ­பா­டலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி ஒலிப்­ப­துண்டு. அது ஏன் இந்தப் பாடலின் தாள வாத்­தி­யத்­துடன் சீன ஸ்ரைல் தாள வாத்­தி­யத்­தையும் இசைஞானி இளை­ய­ராஜா சேர்த்­துள்ளார்? பாடல் காட்­சியில் சீன சார்­பான எதுவும் இடம்­பெ­ற­வில்லை. ஒரு­வேளை இயக்­குநர் பார­தி­ராஜா பாடலின் சிச்­சு­வே­ஷனைப் பற்றி ஞானி­யா­ரிடம் கூறும் போது சீனாவில் எடுப்­ப­தாகக் கூறி­விட்டு காட்­சிப்­ப­டுத்தும் போது மனம் மாறி­யி­ருப்­பாரா ?


அடுத்து நான் அதி­ச­யித்து ரசிக்கும் விட­ய­மென்றால் அது இறுதி இடை­யி­சைதான். பாடலில் ஜென்­சிக்கும் ஷைலஜாவுக்­கும்தான் அதிக இடம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

 

மலே­ஷியா வாசு  தேவன் இறுதி சர­ணத்­தையும் கடைசிப் பல்­ல­வி­யையும் மட்­டுமே பாடு­கின்றார். இருந்த போதிலும் வாசுதேவன் இறு­தி­யான சர­ணத்தை ஆரம்­பிப்­ப­தற்கு ஏற்­ற­தான சூழ்­நி­லையை அந்த இசையைக் கொண்டு ஞானியார் அமைத்­தி­ருக்கும் வித­மி­ருக்­கி­றதே அட..அட..அட..


அதா­வது, இரண்­டா­வது இடை­யிசை மெது­வாக புல்­லாங்­கு­ழ­லுடன் வெகு சாதா­ர­ண­மா­கத்தான் ஆரம்­பிக்­கின்­றது. ஆனால் அதன் பின்னர் அதற்குள் வயலின் கூட்­டணி உள் நுழை­கி­ற­தல்­லவா அங்­கி­ருந்­துதான் வாசுவின் குர­லுக்­கான தயார்­ப­டுத்தல் ஆரம்­ப­மா­கி­ற­தென எனக்குப்படு­கின்­றது.


வயிலின் கூட்­டணி பிர­மாண்­ட­மாக உள் நுழைய சீனப் பாணி தாள வாத்­தியம் அடங்கிப் போகின்­றது. அதற்­குப்பின் வயிலின் கூட்­ட­ணிக்கு தாள வாத்­தி­ய­மாக கீபோர்ட்டிலி­ருந்து வம்பிங் போன்ற ஒன்று வாசிக்­கப்­ப­டு­கின்­றது. அங்­கி­ருந்து அந்த இசை ஒரு சீரியஸ் தன்­மையை அடையத் தொடங்­கு­கின்­றது.


அந்த வயி­லின்­களின் கூட்­டணி அது­வரை இல்­லாத ஒரு பிர­மாண்­டத்­தையும் சீரியஸ் தன்­மை­யையும் பாட­லுக்குள் ஏற்­ப­டுத்தி விடு­கின்­றது. ஜாலி­யாகப் போய்க்­கொண்­டி­ருந்த இசையின் போக்கில் ஏற்­பட்ட இந்த மாற்றம், அது­வரை சாதா­ரண மூடில் பாடலைக் கேட்டுக் கொண்­டி­ருந்த ரசி­கனின் புரு­வத்தை அடுத்­தது என்ன என உய­ர­வைத்து நிறுத்­து­கின்­றது.

 

அந்த வேளையில் இடை­யி­சையின் இறுக்­கட்­டத்­துக்குள் பாடலும் நுழைந்­து­விட, சதா சாரின் கிட்டார் அட்­ட­கா­ச­மாக ஓங்கி ஒலித்து அடங்கும் போது வாசுவின் குரல் "பூமியில் மேகங்கள் ஓடி­யாடும் யோகமே" .. என்று ஆரம்­பிக்கும் விதத்தைக் கேட்கும் ஒவ்­வொரு தட­வையும் அது கொடுக்கும் பர­வ­சத்தால் நொந்து நூடில்­சாகிப் போய்க்­கொண்­டி­ருக்­கிறேன். ஆஹா என்­ன­வொரு கற்­பனை. சில நிமி­டங்­க­ளே­யான ஒரு பாட­லுக்குள் எப்­ப­டி­யெல்லாம் இசையால் கற்­பனை பண்­ணி­யி­ருக்­கிறார் ஞானியார்.


ஒரு முறை­யல்ல இரு­மு­றை­யல்ல மீண்டும் மீண்டும் அந்த இடை­யி­சை­யையும் அதைத் தொடர்ந்து மலே­ஷியா வாசு சர­ணத்தைத் தொடங்கும் லாவ­கத்­தையும் , இடை­யி­சையும் வாசுவின் குரலும் ஒன்­றுடன் ஒன்று பொருந்­தி­யுள்ள வி­தத்­தையும் உற்றுக் கேட்­டுப்­பா­ருங்கள் பர­வ­சத்தின் உச்­சிக்கே சென்­று­வி­டு­வீர்கள்.

 

மலே­ஷியா வாசு என்ற ஒப்­பற்ற பாட­கனின் தனித்­தன்­மை­யான பேஸ் வாய்ஸை இளை­ய­ராஜா என்ற மாமேதை எவ்­வ­ளவு தூரம் அடை­யாளம் கண்­டி­ருந்தால் அந்தக் குரலைத் தூக்கி நிறுத்தி, அதன் உச்ச அழகை வெளிக்­காட்டும் இப்­படி ஒரு இசையை கற்­பனை பண்­ணி­யி­ருப்பார் என்­பது புரியும்.


அந்த இடை­யி­சை­க­ளுக்கு எத்­த­னையோ இசைக்­க­ல­வைகள் ஜானி­யால் கலக்­கப்­பட்­டி­ருப்­பதை உணர்ந்து அதி­ச­யிக்­கிறேன்...


முதல் இடை­யி­சை­க­ளைப்­போல ஆரம்­பிக்கும் இறுதி இடை­யிசை வேறு ஒரு கோணத்­துக்கு அழ­காக மாற்­றப்­படும் விதம் என்னைப் பித்தம் கொள்ள வைக்­கி­றது...


அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஞானியார் வந்த வேளை இந்தப் பாட­லையும் மேடையில் பாடி­னார்கள். முன்னால் மிக அருகில் கைக்­கெட்டும் தூரத்தில் இருந்­த­படி ஞானி­யாரின் ஆர்­கஸ்ட்­ரே­ஷனை ரசித்துக் கொண்­டி­ருந்தேன். புல்­லாங்­கு­ழலின் இசை­யி­லி­ருந்து வயிலின் கூட்­ட­ணிக்கு அந்த இசை மாறும் அழகை கண்­கொட்­டாமல் பார்த்து ரசித்தேன்.

இரண்டு பக்­க­மாகப் பிரிந்­தி­ருந்த ஆர்­கஸ்ட்­ரா­வுக்கு இரண்டு பக்­கமும் மாறி மாறி இந்தப் பாடலின் இசை தவழ்ந்து அசைந்து சென்­ற­போ­துதான் ஞானி­யாரின் ஆர்­கஸ்ட்­ரே­ஷனின் வீரியம் புரிந்­தது. வாய­டைத்துப் போனேன். எப்­ப­டிப்­பட்ட ஒரு மகா மேதையின் காலத்தில் வாழ்­கிறோம் என்ற உண்மை உறைத்­தது. .


இப்­ப­டி­யெல்லாம் 1979 களி­லேயே ஒருவர் சிந்­தித்­துள்ளார் என நினைக்கும் போது என்னால்...... சே.. என்­ன‌த்தைச் சொல்ல.
இந்­தப்­பா­டலை எத்­த­னையோ மேடைகளில்..
எத்தனையோ இசைக்குழுக்களில்..
எத்தனையோ பேர் பாடக் கேட்டிருக்கிறேன்..


தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எத்தனையோ பேர் பாடிப்பார்த்திருக்கிறேன்.. ஆனால்..ஞானியாரின் அந்த இடையிசைக் குள்ளிருந்து மலேஷியா வாசுவின் குரல் பீறிட்டுக் கொண்டு மேலெழுந்து வரும் அற்புதத்தைப் போல எங்கும் எவரும் பாடிக் கேட்டதில்லை.. இனிக் கேட்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை.

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

*'அழ­கூரில் பூத்­த­வளே... எனை அடி­யோடு சாய்த்­த­வளே...': ஆஹா என்னவொரு இனிமையான பாடல்...

 

* 'உன்­னிடம் மயங்­கு­கிறேன்', 'கல்­யாண சாப்­பாடு போடவா', 'அடுத்­தாத்து அம்­பு­ஜத்தை பார்த்­தேளா' முத­லான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்த வி.குமார்

 

* இசை­ய­மைப்­பாளர், கொம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்கள் யார்?

 

* 'முத்துமணிச் சுடரே … வா' பாடலுக்கு Triple Congo வாசித்தவர்

 

* வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்கு வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ?

 

*அமுத மழை பொழியும் முழு நிலவிலே பாடலைப் பாடியவர் யார்?

 

* காதல் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தும் 'ஆறும் அது ஆழம் இல்லே '

 

* எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.