Wednesday  18 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என
By General | 2015-02-13 23:50:20

அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா

 

"நீ வருவாய்" என படத்தில் எஸ்.ஏ.ராஜ்­குமார் இசையில் பா விஜய் எழு­திய பாடல் "பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்­தி­ருப்பேன் நீ வருவாய் என..."


இசை­ஞானி இளை­ய­ராஜா உச்­சத்தில் இருந்த காலத்தில் வேறு இசை­ய­மைப்­பா­ளரின் இசையில் அத்தி பூத்­தாற்­போல வெளி­வந்து திரும்பிப் பார்க்க வைத்த பாடல்­களில் இது மறக்க முடி­யாத பாடல்.


இயக்­குனர், இசை­ய­மைப்­பாளர், பாட­லா­சி­ரியர், பாடகர் ஆகிய நான்கு படைப்­பா­ளி­களின் புரி­தலும் ஒரே நேர்­கோட்டில் சந்­தித்த மிகச் சில பாடல்­களில் இதுவும் ஒன்று என உறு­தி­யாக நான் நம்பும் இன்­னொரு பாடல் இந்தப் பாடல்.


இந்தப் பாடலை முதன் முறை கேட்­ட­போது நானும் ஒரு பிரம்­மாச்­சாரி. கேட்ட மாத்­தி­ரத்­தி­லேயே நான் அடைந்த ஆச்­ச­ரி­யங்­க­ளுக்கும் ஆனந்­தத்­துக்கும் அள­வே­யில்லை. என்­னடா நாங்கள் மன­துக்குள் நினைப்­பதை அப்­ப­டியே பாலு ஏக்­கத்­து­டனும் கிறக்­கத்­து­டனும் பாடிக் கலக்­கு­கி­றாரே என அப்­போது பிரம்­மச்­சா­ரி­க­ளாக இருந்த நண்­பர்கள் நாங்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் பேசித்­தீர்த்து ஆச்­ச­ரி­யப்­பட்­டது பசு­ம­ரத்­தாணி. மறக்­க­மு­டி­யாத இனிய நினை­வுகள் அவை.


உண்­மையில் இதனை முதலில் கேட்ட போது இது எழு­தப்­பட்ட விதம் வைர­முத்­துவின் பாணியை ஒத்துக் காணப்­பட்­டதால் இதை வைர­முத்­துதான் எழு­தி­யி­ருப்பார் என்ற முடி­வுக்கு முதல் முறை கேட்ட மாத்­தி­ரத்­தி­லேயே வந்­தி­ருந்தேன்.


அதிலும்  குறிப்­பாக "உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ யாரடி" என்று எல்லா பிரம்­மச்­சா­ரி­க­ளுக்­குள்ளும் எழும் கேள்­வியை பாலுவின் குரலில் அநா­யா­ச­மாக இந்தக் கவிஞன் கேட்­ட­போது, இது வைர­முத்­துவின் வரி­க­ளேதான் என உறு­தி­யாக நம்­பி­யி­ருந்தேன். ஏனென்றால் வைர­முத்­துவின் பாடல்­களில் அவர் தனது ஆச்­ச­ரி­யங்­களை இப்­ப­டித்தான் விடை தெரியாக் கேள்­வி­க­ளாகத் தொடுத்­தி­ருப்பார்.


ஆனால் இதை எழு­தி­யது, அப்­போது புதி­ய­வ­ரா­கவும் இளை­ய­வ­ரா­கவும் இருந்த பா. விஜய் என்ற இளைஞன் என அறிந்­த­போது கொஞ்சம் ஆச்­ச­ரி­யத்­துடன் ஆடிப்போய் மகிழ்ந்­தவன் நான். அன்­றி­லி­ருந்து  இந்தக் கவி­ஞ­னிடம் இன்னும் அதிகம் உள்­ளது என நம்பத் தொடங்­கினேன்.

 

 

அந்த நம்­பிக்­கையை 'வேதம்' படத்தில் அவர் எழு­திய கொஞ்சிக் கொஞ்சி பேசி வரும் அலை­போல என்ற பாடலின் மூலம் நிரூ­பித்தார். என்னைப் பொறுத்­த­வரை புது­மணத் தம்­ப­தி­களை வாழ்த்­து­வ­தற்கு இலகு தமிழில் ஆனால் பொறுப்­பான பொரு­ளுடன் கச்­சி­த­மாக அமைந்­துள்ள கவிதை அந்தப் பாடல்.


ஆனால் சமீப கால­மாக இந்தக் கவி­ஞனைக் காண­வில்­லையே... பா. விஜய் மீண்டும் எழ வேண்டும் வர­வேண்டும்.


பார்த்து பார்த்து கண்கள்
பூத்­தி­ருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்­னகை
சேர்த்­து­வைப்பேன்
நீ வருவாய் என
தென்­ற­லாக நீ வரு­வாயா
 ஜன்­ன­லா­கிறேன்
தீர்த்­த­மாக நீ வரு­வாயா மேக­மா­கிறேன்
வண்­ண­மாக நீ வரு­வாயா
 பூக்­க­ளா­கிறேன்
வார்த்தையாக நீ வரு­வாய
கவிதை ஆகிறேன்
நீ வருவாய் என, நீ வருவாய் என

 

பார்த்து பார்த்து கண்கள்
பூத்­தி­ருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்­னகை
 சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என

 

கரை­களில் ஒதுங்­கிய
கிளிஞ்­சல்கள் உனக்­கென
தினம் தினம் சேக­ரிதேன்
குமு­தமும் விக­டனும் நீ படிப்­பா­யென
வாச­க­னாகி விட்டேன்
கவிதை நூலோடு கோல புத்­தகம்
உனக்காய் சேமிக்­கிறேன்
கனவில் உன்­னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்­கிறேன்
ஒரு காகம் காவென கரைந்­தாலும்
என் வாசல் பார்க்­கிறேன்

நீ வருவாய் என, நீ வருவாய் என

பார்த்து பார்த்து கண்கள்
பூத்­தி­ருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்­னகை
சேர்த்­து­வைப்பேன்
நீ வருவாய் என


எனக்­குள்ள வேதனை
நில­வுக்குத் தெரிந்­திடும்
நில­வுக்கும் ஜோடி­யில்லை

 

எழு­திய கவி­தைகள் உனைவந்து சேர்ந்­திட

கவி­தைக்கும் கால்கள் இல்லை


இமைகள் என்­னோடு
சண்டை போடுதே
எதிரில் வந்தால் என்ன
தினமும் கண்ணோடு
 தீபம் வைக்கிறேன்
வெளிச்சம் தந்தால் என்ன
மணி சரி பார்த்து தினம் வழி பார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்

 

நீ வருவாய் என, நீ வருவாய் என
(பார்த்து பார்த்து)

 

நீ வருவாய் என, நீ வருவாய் என
நீ வருவாய் என, நீ வருவாய் என....

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* 'ஆயிரம் மலர்­களே மல­ருங்கள்' : - மலே­ஷியா வாசுவின் குர­லுக்­கான இசை­ஞா­னியின்  அற்­புத இடை­யிசை...

 

*'அழ­கூரில் பூத்­த­வளே... எனை அடி­யோடு சாய்த்­த­வளே...': ஆஹா என்னவொரு இனிமையான பாடல்...

 

* 'உன்­னிடம் மயங்­கு­கிறேன்', 'கல்­யாண சாப்­பாடு போடவா', 'அடுத்­தாத்து அம்­பு­ஜத்தை பார்த்­தேளா' முத­லான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்த வி.குமார்

 

* இசை­ய­மைப்­பாளர், கொம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்கள் யார்?

 

* 'முத்துமணிச் சுடரே … வா' பாடலுக்கு Triple Congo வாசித்தவர்

 

* வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்கு வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ?

 

*அமுத மழை பொழியும் முழு நிலவிலே பாடலைப் பாடியவர் யார்?

 

* காதல் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தும் 'ஆறும் அது ஆழம் இல்லே '

 

* எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

 

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.