Sunday  22 Jan 2017  
Verified Web
CONTACT US
trailer-header
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
22 வருடங்களில் மறுவடிவம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஊர்வசி ஊர்வசி' பாடல்
poll
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதால்
அமெரிக்காவுக்கு நல்லது
முழு உலகுக்கும் நல்லது
அமெரிக்காவுக்கு நல்லதல்ல
முழு உலகுக்கும் நல்லதல்ல
"சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..."
By General | 2016-02-05 10:42:46

-ரமணி

 

இலங்கை இசை வர­லாற்றில் பொப் இசைக்குத் தனி அத்­தி­யாயம் உண்டு. கர்­நா­டக இசை, தமிழ் இசை ஆகி­ய­வற்­றுக்கு மத்­தியில் ஈழத்து மெல்­லிசை வளர்ச்சி கண்­டது.

 

மெல்­லிசைப் பாடல்கள் மேலெ­ழுந்து வரும்­போது பொப் பாடல்கள் ரசி­கர்­களின் மத்­தியில் பிர­ப­ல­மா­கின. இலங்கை வானொலி ஈழத்து மெல்­லி­சைப்­ப­டல்­க­ளுக்கும் பொப் இசைப்­ப­ாடல்­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுத்­த­தனால் இலங்­கையைத் தாண்டி தமி­ழ­கத்­திலும் அப்­பா­டல்­க­ளுக்கு பெரிய வர­வேற்பு இருந்­தது.


ஏ.ஈ.மனோ­கரன், நித்தி கன­க­ரத்­தினம், அமுதன் அண்­ணா­மலை, ஸ்ரனி சிவா­னந்தன், அன்ரன் டேவிட். எம்.பாக்­கி­ய­ராஜன் போன்­ற­வர்கள் பொப் பாடல்­க­ளினால் பிர­ப­ல­ம­னார்கள்.  


“சின்ன மாமியே உன் சின்ன மக­ளெங்கே....” அன்­றைய  பொப் பாடல்­களில் மிகவும் பிர­ப­ல­ப­ம­னது. நித்தி கன­க­ரத்­தினம் இயற்றி இசை அமைத்து படிய பாடல் என அன்­றைய வானொ­லியில் ஒலி­ப­ரப்­பா­னது. உண்­மையில் அப்­பா­டலை இயற்றி இசை அமைத்து முதலில் பாடி­யவர் எம்.எஸ்.கம­ல­நாதன் என்ற உண்மை காலம்­பிந்தி வெளி­யா­னது. கடந்த ஜன­வரி 25 ஆம் திகதி எம்.எஸ்.கம­ல­நாதன் மறைந்த நிலையில் அவரின் சின்ன மாமியே பாடல் மீண்டும்.....


மாமிக்கும் மரு­ம­க­னுக்­கு­மி­டை­யி­லான உரை­யா­ட­லாக  இப்­பாடல் உள்ள இப்­பா­டலைக்   கேட்­கும்­போது ஆட­வேண்டும் போன்ற எண்ணம் ஏற்­படும்.

 

 

“சின்ன மாமியே உன் சின்ன மக­ளெங்கே
பள்­ளிக்கு சென்­றாளோ  படிக்கச்  சென்­றாளோ
அட வாடா மரு­மகா என் அழகு மன்­மதா
பள்­ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்

ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்­க­வென்று கெடாதே
ஊர் சுழலும்   பொடி­ய­ளெல்லாம் கன்­னி­யரைக்
கண்­ட­வுடன் கண்­ண‌­டிக்கும் கால­மல்­லவோ....  

 

தனது மச்சாள் மீது அதிக அன்பு கொண்­டவர் அவள் எங்கே என மாமி­யிடம் கேட்­பது போலவும் அதற்கு மாமி பதி­ல­ளிப்­பது போலவும்  நகைச்­சு­வை­யுடன் பாடல் எழு­தப்­பட்­டுள்­ளது.


சின்ன மாமி­யிடம் அவ­ளது சின்ன மகள் எங்கே என மரு­மகன் கேட்ட போது அவள் படிப்­ப­தற்­காக பள்­ளிக்­குச்­சென்­ற­தாக மாமி கூறுகிறாள். வேலை இல்­லாமல் உள்ள  இளை­ஞர்கள் அவளை தம் வசம் திருப்பி விடு­வார்­களோ என்ற அச்சம் அவ­னுக்கு இருக்­கி­றது. அதனை மாமி­யிடம் தெரி­விக்­கிறான். “ஊர் சுழலும் பொடியள்” என்ற யாழ் மண்ணின் சொல்லை கச்­சி­த­மாக அந்த இடத்தில் பொருத்தி உள்ளார் பாட­லா­சி­ரியர்.

 

ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்­லாதே
அவள் வந்தால் உதைத்­தி­டுவாள்  நில்­லாதே
அடக்­க­மில்லா  பெண்­ணிவள் என்றா
என் மகளை  நினைத்து விட்டாய்  
இடுப்­பொ­டிய தந்­தி­டு­வேனே  ...

 

தன் மக­ளைப்­பற்றி அவ­தூறு எதுவும் சொல்ல வேண்டாம் என அன்­பாக கடிந்து கொண்ட சின்ன மாமி,    மக­ளுக்கு தெரிந்தால் உதைப்பாள். “என் மகள் அடக்­க­மில்­லா­தவள் அல்ல  கனக்க கதைத்தால் இடுப்பை ஓடிச்­சுப்­பொ­டுவன்”  என மண்ணின் மனத்தை பாடல் வரியில் கோர்த்­துள்ளார்.

 

ஏனணை மாமி மேலே மேலே துள்­ளு­கிறாய்
 பாரணை மாமி படு குழியில் தள்­ளு­றியே
 தேனணை மாமி அவள் எனக்கு தெவிட்­ட­தவள்  எனக்கு
 பாரணை மாமி கட்­டுறேன் தாலியே  ...

 

 

கொஞ்சம் கனக்க கதைத்தால் துள்ளுகை என்­பார்கள் அதனால் மாமியை, துள்ள வேண்டாம் என மரு­மகன்  கூறுக்­கிறான். பின்னர் இறங்கி வந்து  அவ­ளுக்கு தான் தாலி கட்டப் போவ­தாக தெரி­விக்­கிறான்.


தமிழ் உச்­ச­ரிப்பு கிரா­மிய வாடை­யுடன் வரு­கி­றது.  அன்­றைய பிர­பல பொப் இசைப் பாட­க­ரான பொலி பஸ்­ரி­யனின் தாக்கம் இப்­பா­டலில் உள்­ளது.


இலங்கைத் தமிழ் இசைத்­து­றையில் 1965களில் பொப்  பாடல்கள் பிர­ப­ல­மாகத் தொடங்­கின.

 

1962 ஆம் ஆண்டு இப்­பாடல்  கம­ல­ன­நா­தனின் கிரா­ம­மான வதி­ரியில் பிர­ப­ல­மா­கி­யது.


க.கம­லா­கரன், வ. இரா­ஜேஸ்­வரன், க.பாலச்­சந்­திரன், மு.பாக்­கி­ய­ராஜன்  ஐ.சாந்­த­குமார், ச.குண­சே­கரன் போற­வர்கள் தாம் படித்த பாட­சா­லை­களில் இப்பாடலைப் பாடினார்கள். யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் இப்பாடல் பலரால் பாடப்பட்டது.யாழ்ப்பாணத்தில் அன்று பிரபலமாக இருந்த இரட்டையர் கண்ணன், அருணா, ரங்கன், ராஜன் இசைக் குழக்கள் பொப் பாடல்களை படி வரவேற்பைப் பெற்றன.

 

“சின்ன மாமியே'' பாடல் வரிகள்.....

 

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ

அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க தான் சென்றாள்

 

ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்க வென்று கெடாதே
ஐயோ மாமி அவளை அங்கே விடாதே
அவளை என்னும் படிக்க வென்று கெடாதே
ஊர் சுழலும் பொடியளெல்லாம்
கன்னியரை கண்டவுடன்
கண்ணடிக்கும் காலமல்லவோ

 

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
அட வாடா மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க தான் சென்றாள்

 

ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே
அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே
அடக்கமில்லா பெண்ணு என்றா
நினைத்துவிட்டாய் என்மகளை
இடுப்பொடிய தந்திடுவேனே..

 

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ

 

அட வாடா மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க தான் சென்றாள்

 

ஏனனை  மாமி மேலே மேலே துள்ளுறீயே
பாரணை மாமி படு குழியில் தள்ளுறீயே
ஏனனை மாமி மேலே மேலே துள்ளுறீயே
பாரணை மாமி படு குழியில் தள்ளுறீயே
தேனென மாமி அவளெனக்கு
தெவிட்டாதவள் எனக்கு
பாருங்க மாமி கட்டுறேன் தாலியை


சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
அட வாடா மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க தான் சென்றாள்

 

 

 

 

 

மேலும் சில 'நான் ரசித்த பாடலும் இசையும்' கட்டுரைகள்:

 

* வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள...

 

* 'ஆயிரம் மலர்­களே மல­ருங்கள்' : - மலே­ஷியா வாசுவின் குர­லுக்­கான இசை­ஞா­னியின்  அற்­புத இடை­யிசை...

 

*'அழ­கூரில் பூத்­த­வளே... எனை அடி­யோடு சாய்த்­த­வளே...': ஆஹா என்னவொரு இனிமையான பாடல்...

 

* 'உன்­னிடம் மயங்­கு­கிறேன்', 'கல்­யாண சாப்­பாடு போடவா', 'அடுத்­தாத்து அம்­பு­ஜத்தை பார்த்­தேளா' முத­லான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்த வி.குமார்

 

* இசை­ய­மைப்­பாளர், கொம்­போசர் என அழைக்­கப்­பட தகு­தி­யா­னவர்கள் யார்?

 

* 'முத்துமணிச் சுடரே … வா' பாடலுக்கு Triple Congo வாசித்தவர்

 

* வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாட­லுக்கு வயிலின் வாசித்த கலை­ஞர்கள் யார் ?

 

*அமுத மழை பொழியும் முழு நிலவிலே பாடலைப் பாடியவர் யார்?

 

* காதல் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்தும் 'ஆறும் அது ஆழம் இல்லே '

 

* எஸ்.பி.பாலு எனும் இசைப்பல்கலைக்கழகம்

 

* இசைஞானியின் மெட்டை பிரமாதப்படுத்திய கலைஞரும் காதலைக் காதலிக்க வைத்த பாடலும்... ...

 

*தமிழ் திரை இசையில் செல்லோ (Cello) இசைக்கருவி

 

*இசையமைப்பாளர் வித்யாசாகர்: தமிழ் திரையிசையின் வி.வி.எஸ். லக்ஷ்மன்

 

* இசைஞானியின் இசை தளபதி சதா

 

* இசைஞானியின் இசைக்கற்பனைக்கு உயிர்கொடுத்த விஜி மனுவல்

 

* விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது

 

* புல்லாங்குழலிசையை தனது தேடலால் நவீனமாக்கிய நவீன் குமார்

 

* 'அடி ராக்கம்மா கையத்தட்டு' பாடல் தரும் புதுவித இசை அனுபவம்

 

* இசைஞானி : Counterpoint மூலம்  Count பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 2)

 

* இசைஞானி :  Counterpoint  மூலம்  Count   பண்ணி சர்வதேச இசையின் நுட்பங்களை தேடவைத்த இசை அறிவாளி (பகுதி 1)

 

*  'இளைய நிலா பொழிகிறதே ....' பாடல் முழுவதும் பயணிக்கும் கிட்டாரை வாசித்தவர் யார் ?

 
* ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்....

 

* சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு

இச்செய்தி தொடர்பான உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் :
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
தமிழில் type செய்வதற்கு | ஆங்கிலத்தில் type செய்வதற்கு
 
ADD YOUR COMMENT.
குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் மெட்ரோ நியூஸ் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் மெட்ரோ நியூஸின் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.